சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.104   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்) - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா ராகத்தில் திருமுறை அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு பருதியப்பர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=b1mpUxUA-C0   Add audio link Add Audio

விண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழப்
பெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசிப் பேணார் பலிதேர்ந்து
கண்கொண்ட சாயலொ டேர்கவர்ந்த கள்வர்க் கிடம்போலும்
பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதிந் நியமமே.

1

அரவொலி வில்லொலி யம்பினொலி யடங்கார் புரமூன்றும்
நிரவவல்லார் நிமிர்புன் சடைமே னிரம்பா மதிசூடி
இரவில் புகுந்தெ னெழில்கவர்ந்த விறைவர்க் கிடம்போலும்
பரவவல் லார்வினை பாழ்படுக்கும் பரிதிந் நியமமே.

2

வாண்முக வார்குழல் வாணெடுங்கண் வளைத்தோண் மாதஞ்ச
நீண்முக மாகிய பைங்களிற்றின் னுரிமே னிகழ்வித்து
நாண்முகங் காட்டி நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்
பாண்முக வண்டினம் பாடியாடும் பரிதிந் நியமமே.

3

வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி விரிபுன் சடைதாழத்
துஞ்சிருண் மாலையும் நண்பகலுந் துணையார் பலிதேர்ந்து
அஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்
பஞ்சுரம் பாடிவண்டி யாழ்முரலும் பரிதிந் நியமமே.

4

நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண் மதிசூடித்
தார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்து தலையார் பலிதேர்வார்
ஏர்புல்கு சாய லெழில்கவர்ந்த விறைவர்க் கிடம்போலும்
பார்புல்கு தொல்புக ழால்விளங்கும் பரிதிந் நியமமே.

5
Go to top

வெங்கடுங் காட்டகத் தாடல்பேணி விரிபுன் சடைதாழத்
திங்கள் திருமுடிமேல் விளங்கத் திசையார் பலிதேர்வார்
சங்கொடு சாய லெழில்கவர்ந்த சைவர்க் கிடம்போலும்
பைங்கொடி முல்லை படர்புறவிற் பரிதிந் நியமமே.

6

பிறைவளர் செஞ்சடை பின்றயங்கப் பெரிய மழுவேந்தி
மறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
இறைவளை சோர வெழில்கவர்ந்த விறைவர்க் கிடம்போலும்
பறையொலி சங்கொலி யால்விளங்கும் பரிதிந் நியமமே.

7

ஆசடை வானவர் தானவரோ டடியா ரமர்ந்தேத்த
மாசடை யாதவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
காசடை மேகலை சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்
பாசடைத் தாமரை வைகுபொய்கைப் பரிதிந் நியமமே.

8

நாடினர் காண்கிலர் நான்முகனுந் திருமா னயந்தேத்தக்
கூடல ராடல ராகிநாளுங் குழகர் பலிதேர்வார்
ஏடலர் சோர வெழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பாடல ராடல ராய்வணங்கும் பரிதிந் நியமமே.

9

கல்வள ராடையர் கையிலுண்ணுங் கழுக்க ளிழுக்கான
சொல்வள மாக நினைக்கவேண்டா சுடுநீ றதுவாடி
நல்வளை சோர நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்
பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப் பரிதிந் நியமமே.

10
Go to top

பையர வம்விரி காந்தள்விம்மு பரிதிந் நியமத்துத்
தையலொர் பாக மமர்ந்தவனைத் தமிழ்ஞான சம்பந்தன்
பொய்யிலி மாலை புனைந்தபத்தும் பரவிப் புகழ்ந்தேத்த
ஐயுற வில்லை பிறப்பறுத்தல் அவலம் அடையாவே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்)
3.104   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விண் கொண்ட தூ மதி
Tune - பழம்பஞ்சுரம்   (பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்) பருதியப்பர் மங்களநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000