சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.048   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருஆப்பாடி - திருநேரிசை அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பாலுவந்தநாயகர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=ENP7Ud9fJ2A   Add audio link Add Audio

கடல் அகம் ஏழினோடும் பவனமும் கலந்து, விண்ணும்
உடல் அகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று,
தடம் மலர்க் கந்த மாலை தண்மதி பகலும் ஆகி,
மடல் அவிழ் கொன்றை சூடி, மன்னும்-ஆப்பாடியாரே.

1

ஆதியும் அறிவும் ஆகி, அறிவினுள் செறிவும் ஆகி,
சோதியுள் சுடரும் ஆகி, தூநெறிக்கு ஒருவன் ஆகி,
பாதியில் பெண்ணும் ஆகி, பரவுவார் பாங்கர் ஆகி,
வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும்-ஆப்பாடியாரே.

2

எண் உடை இருக்கும் ஆகி, இருக்கின் உள் பொருளும் ஆகி,
பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்கர் ஆகி,
கண் ஒரு நெற்றி ஆகி, கருதுவார் கருதல் ஆகாப்
பெண் ஒரு பாகம் ஆகி, பேணும்-ஆப்பாடியாரே.

3

அண்டம் ஆர் அமரர் கோமான் -ஆதி, எம் அண்ணல், -பாதம்
கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான், தாபரத்தை;
கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறியக் கண்டு
தண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர், ஆப்பாடியாரே.

4

சிந்தையும் தெளிவும் ஆகி, தெளிவினுள் சிவமும் ஆகி,
வந்த நன் பயனும் ஆகி, வாணுதல் பாகம் ஆகி,
மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென் கரை மேல் மன்னி
அந்த மோடு அளவு இலாத அடிகள்-ஆப்பாடியாரே.

5
Go to top

வன்னி, வாள் அரவு, மத்தம், மதியமும், ஆறும், சூடி,
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப் பொருள் பயனும் ஆகி,
கன்னி ஓர் பாகம் ஆகி, கருதுவார் கருத்தும் ஆகி,
இன் இசை தொண்டர் பாட, இருந்த ஆப்பாடியாரே.

6

உள்ளும் ஆய்ப் புறமும் ஆகி, உருவும் ஆய் அருவும் ஆகி,
வெள்ளம் ஆய்க் கரையும் ஆகி, விரி கதிர் ஞாயிறு ஆகி,
கள்ளம் ஆய்க் கள்ளத்து உள்ளார் கருத்தும் ஆய் அருத்தம் ஆகி,
அள்ளுவார்க்கு அள்ளல் செய்திட்டு இருந்த ஆப்பாடியாரே!

7

மயக்கம் ஆய்த் தெளிவும் ஆகி, மால்வரை வளியும் ஆகி,
தியக்கம் ஆய் ஒருக்கம் ஆகி, சிந்தையுள் ஒன்றி நின்று(வ்)
இயக்கம் ஆய், இறுதி ஆகி, எண் திசைக்கு இறைவர் ஆகி,
அயக்கம் ஆய் அடக்கம் ஆய ஐயர்-ஆப்பாடியாரே.

8

ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை
பேர் ஒளி உருவினானைப் பிரமனும் மாலும் காணாச்
சீர் அவை பரவி ஏத்திச் சென்று அடி வணங்குவார்க்குப்
பேர் அருள் அருளிச் செய்வார், பேணும் ஆப்பாடியாரே.

9

திண் திறல் அரக்கன் ஓடி, சீ கயிலாயம் தன்னை
எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும், ஏழை அஞ்ச,
விண்டு இற நெறிய ஊன்றி, மிகக் கடுத்து அலறி வீழ,
பண் திறல் கேட்டு உகந்த பரமர்-ஆப்பாடியாரே.

10
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஆப்பாடி
4.048   திருநாவுக்கரசர்   தேவாரம்   கடல் அகம் ஏழினோடும் பவனமும்
Tune - திருநேரிசை   (திருஆப்பாடி பாலுவந்தநாயகர் பெரியநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Fri, 13 Feb 2026 16:28:04 +0000