சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.110   திருநாவுக்கரசர்   தேவாரம்

பசுபதித் திருவிருத்தம் - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=xlQGcinuoIc   Add audio link Add Audio
சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்பரவி
ஏம்பலிப் பார்கட் கிரங்குகண் டாயிருங்  கங்கையென்னும்
காம்பலைக் கும்பணைத் தோளி கதிர்ப்பூண் வனமுலைமேல்
பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை யாளும்  பசுபதியே.


1


உடம்பைத் தொலைவித்துன் பாதந் தலைவைத்த வுத்தமர்கள்
இடும்பைப் படாம லிரங்குகண் டாயிரு ளோடச் செந்தீ
அடும்பொத் தனைய வழன்மழு வாவழ லேயுமிழும்
படம்பொத் தரவரை யாயெம்மை யாளும் பசுபதியே. 


2


தாரித் திரந்தவி ராவடி யார்தடு மாற்றமென்னும்
மூரித் திரைப்பௌவ நீக்குகண் டாய்முன்னை நாளொருகால்
வேரித்தண் பூஞ்சுட ரைங்கணை வேள்வெந்து வீழச்செந்தீப்
பாரித்த கண்ணுடை யாயெம்மை யாளும் பசுபதியே. 


3


ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன் பாத மிறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்ற மகல்விகண் டாயண்ட  மேயணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்துவேய்த் தோளியஞ்சப்
பருவரைத் தோலுரித் தாயெம்மை யாளும் பசுபதியே. 


4


இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன் பாத மிறைஞ்சுகின்றார்க்
கடர்க்கின்ற நோயை விலக்குகண் டாயண்ட  மெண்டிசையும்
சுடர்த்திங்கள் சூடிச் சுழல்கங்கை யோடுஞ் சுரும்புதுன்றிப்
படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை யாளும் பசுபதியே.


5


Go to top
அடலைக் கடல்கழி வானின் னடியிணை யேயடைந்தார்
நடலைப் படாமை விலக்குகண் டாய்நறுங் கொன்றைதிங்கள்
சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ் சூளா  மணிகிடந்து
படரச் சுடர்மகு டாவெம்மை யாளும் பசுபதியே. 


6


துறவித் தொழிலே புரிந்துன் சுரும்படி யேதொழுவார்
மறவித் தொழிலது மாற்றுகண் டாய்மதின் மூன்றுடைய
அறவைத் தொழில்புரிந் தந்தரத் தேசெல்லு  மந்திரத்தேர்ப்
பறவைப் புரமெரித் தாயெம்மை யாளும் பசுபதியே.


7


இப்பாடல் கிடைக்கவில்லை.


8



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பசுபதித் திருவிருத்தம்
4.110   திருநாவுக்கரசர்   தேவாரம்   சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு,
Tune - கொல்லி   (பசுபதித் திருவிருத்தம் )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org