ஆதிய னாதிரையன் னன லாடிய வாரழகன் பாதியொர் மாதினொடும் பயி லும்பர மாபரமன் போதிய லும்முடிமேற் புன லோடர வம்புனைந்த வேதியன் மாதிமையால் விரும் பும்மிடம் வெண்டுறையே.
|
1
|
காலனை யோருதையில் லுயிர் வீடுசெய் வார்கழலான் பாலொடு நெய்தயிரும் பயின் றாடிய பண்டரங்கன் மாலை மதியொடுநீ ரர வம்புனை வார்சடையான் வேலன கண்ணியொடும் விரும் பும்மிடம் வெண்டுறையே.
|
2
|
படைநவில் வெண்மழுவான் பல பூதப் படையுடையான் கடைநவின் மும்மதிலும் மெரி யூட்டிய கண்ணுதலான் உடைநவி லும்புலித்தோ லுடை யாடையி னான்கடிய விடைநவி லுங்கொடியான் விரும் பும்மிடம் வெண்டுறையே.
|
3
|
பண்ணமர் வீணையினான் பர விப்பணி தொண்டர்கடம் எண்ணமர் சிந்தையினா னிமை யோர்க்கு மறிவரியான் பெண்ணமர் கூறுடையான் பிர மன்றலை யிற்பலியான் விண்ணவர் தம்பெருமான் விரும் பும்மிடம் வெண்டுறையே.
|
4
|
பாரிய லும்பலியான் படி யார்க்கு மறிவரியான் சீரிய லும்மலையா ளொரு பாகமும் சேரவைத்தான் போரிய லும்புரமூன் றுடன் பொன்மலை யேசிலையா வீரிய நின்றுசெய்தான் விரும் பும்மிடம் வெண்டுறையே.
|
5
|
Go to top |
ஊழிக ளாயுலகா யொரு வர்க்கு முணர்வரியான் போழிள வெண்மதியும் புன லும்மணி புன்சடையான் யாழின் மொழியுமையாள் வெரு வவ்வெழில் வெண்மருப்பின் வேழ முரித்தபிரான் விரும் பும்மிடம் வெண்டுறையே.
|
6
|
கன்றிய காலனையும் முரு ளக்கனல் வாயலறிப் பொன்றமு னின்றபிரான் பொடி யாடிய மேனியினான் சென்றிமை யோர்பரவுந் திகழ் சேவடி யான்புலன்கள் வென்றவ னெம்மிறைவன் விரும் பும்மிடம் வெண்டுறையே.
|
7
|
கரமிரு பத்தினாலுங் கடு வன்சின மாயெடுத்த சிரமொரு பத்துமுடை யரக் கன்வலி செற்றுகந்தான் பரவவல் லார்வினைக ளறுப் பானொரு பாகமும்பெண் விரவிய வேடத்தினான் விரும் பும்மிடம் வெண்டுறையே.
|
8
|
கோல மலரயனுங் குளிர் கொண்ட னிறத்தவனும் சீல மறிவரிதாய்த் திகழ்ந் தோங்கிய செந்தழலான் மூலம தாகிநின்றான் முதிர் புன்சடை வெண்பிறையான் வேலை விடமிடற்றான் விரும் பும்மிடம் வெண்டுறையே.
|
9
|
நக்குரு வாயவருந் துவ ராடை நயந்துடையாம் பொக்கர்க டம்முரைகள் ளவை பொய்யென வெம்மிறைவன் திக்கு நிறைபுகழார் தரு தேவர்பி ரான்கனகம் மிக்குயர் சோதியவன் விரும் பும்மிடம் வெண்டுறையே.
|
10
|
Go to top |
திண்ணம ரும்புரிசைத் திரு வெண்டுறை மேயவனைத் தண்ணம ரும்பொழில்சூழ் தரு சண்பையர் தந்தலைவன் எண்ணமர் பல்கலையா னிசை ஞானசம் பந்தன்சொன்ன பண்ணமர் பாடல்வல்லார் வினை யாயின பற்றறுமே.
|
11
|