சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.121   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) - செவ்வழி ரசிகப்ரியா எதுகுல காம்போதி இஷ்டாங்கிணி ராகத்தில் திருமுறை அருள்தரு தோகையம்பிகையம்மை உடனுறை அருள்மிகு தோன்றாத்துணையீசுவரர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=zMRLOLL1RUI   Add audio link Add Audio

முன்னநின்ற முடக்கான் முயற்கருள் செய்துநீள்
புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்
தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்
பின்னைநின்ற பிணியாக் கையைப்பெறு வார்களே.

1

கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே
முள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்இடம்
புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர்தனை
உள்ள நம்மேல் வினையாயின ஒழியுங்களே.

2

மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல்
பொருளினல்லார் பயில் பாதிரிப் புலியூருளான்
வெருளின்மானின் பிணை நோக்கல்செய்து வெறிசெய்தபின்
அருளிஆகத் திடைவைத் ததுவும் மழகாகவே.

3

போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்தாம்
போதினாலே வழிபாடு செய்யப் புலியூர் தனுள்
ஆதிநாலும் அவலம் மிலாதஅடி கள்மறை
ஓதிநாளும் இடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே.

4

ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை
நாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன்
போகநல்லார் பயிலும் பாதிரிப் புலியூர் தனுள்
பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே.

5
Go to top

மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வாய்ப்
புதியமுத்தந் திகழ் பாதிரிப் புலியூரெனும்
பதியில்வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள்
குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே.

6

கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச்
சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப்
பொங்கரவம் முயர் பாதிரிப் புலியூர்தனுள்
அங்கரவம் அரையில் அசைத்தானை அடைமினே.

7

வீக்கமெழும் மிலங்கைக் கிறை விலங்கல்லிடை
ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான்
பூக்கமழும் புனற் பாதிரிப் புலியூர்தனை
நோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே.

8

அன்னந்தாவும் மணியார் பொழின்மணியார் புன்னை
பொன்னந் தாதுசொரி பாதிரிப் புலியூர்தனுள்
முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன்
தன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே.

9

உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத்
திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும்
எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின்
புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே.

10
Go to top

அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம்
பந்தன்நல் லார்பயில் பாதிரிப் புலியூர்தனுள்
சந்தமாலைத் தமிழ்பத்தி வைதரித் தார்கண்மேல்
வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)
2.121   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முன்னம் நின்ற முடக்கால் முயற்கு
Tune - செவ்வழி   (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000