![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
கற்பக விநாயகர் மலரடி! போற்றி போற்றி!Nalam Tharum (Wordly Beneficial) Thiruppugazh Songs
நம பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி
அருணகிரி நாதருக்கு! போற்றி போற்றி
Back to Top
# 70
நாலும் ஐந்து வாசல்
(திருச்செந்தூர்)
தான தந்த தான தான - தான தந்த தான தான
தான தந்த தான தான ...... தனதான
நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி
நாரி யென்பி லாகு மாக ...... மதனூடே
நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி
நாட றிந்தி டாம லேக ...... வளராமுன்
நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை
நூறு செஞ்சொல் கூறி மாறி ...... விளைதீமை
நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான
நூல டங்க வோத வாழ்வு ...... தருவாயே
காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு
காலம் வந்து வோல மோல ...... மெனுமாதி
காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர்
காள கண்ட ரோடு வேத ...... மொழிவோனே
ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
ஆழி யங்கை ஆயன் மாயன் ...... மருகோனே
ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி
யான செந்தில் வாழ்வ தான ...... பெருமாளே.
# 166 தலைவலி மருத்தீடு (பழநி) |
தனதன தந்தான தானான தானதன தனதன தந்தான தானான தானதன தனதன தந்தான தானான தானதன ...... தனதான |
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ...... யணுகாதே தலமிசை யதற்கான பேரோடு கூறியிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் ...... விதியாதே உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ...... ளிருபாதம் உளமது தரித்தேவி னாவோடு பாடியருள் வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை ...... வரவேணும் அலைகட லடைத்தேம காகோர ராவணனை மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ...... மருகோனே அறுகினை முடித்தோனை யாதார மானவனை மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் ...... வருவோனே பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய் பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளா பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில் வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர் பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் ...... பெருமாளே. |
# 196 வாதம் பித்தம் (பழநி) |
தானந் தத்தன தானன தானன தானந் தத்தன தானன தானன தானந் தத்தன தானன தானன ...... தனதான |
வாதம் பித்தமி டாவயி றீளைகள் சீதம் பற்சனி சூலைம கோதர மாசங் கட்பெரு மூலவி யாதிகள் ...... குளிர்காசம் மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் ...... வெகுமோகர் சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய் சோரம் பொய்க்குடி லேசுக மாமென ...... இதின்மேவித் தூசின் பொற்சர மோடுகு லாயுல கேழும் பிற்பட வோடிடு மூடனை தூவஞ் சுத்தடி யாரடி சேரநி ...... னருள்தாராய் தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு சேசெஞ் செக்கெண தோதக தீகுட ...... வெனபேரி சேடன் சொக்கிட வேலைக டாகமெ லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு ...... மயில்வீரா வேதன் பொற்சிர மீதுக டாவிந லீசன் சற்குரு வாயவர் காதினில் மேவும் பற்றிலர் பேறரு ளோதிய ...... முருகோனே வேஷங் கட்டிபி னேகிம காவளி மாலின் பித்துற வாகிவி ணோர்பணி வீரங் கொட்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே. |
# 232 வாதமொடு சூலை (சுவாமிமலை) |
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான |
வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து மாவலிவி யாதி குன்ம ...... மொடுகாசம் வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின் மாதர்தரு பூஷ ணங்க ...... ளெனவாகும் பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து பாயலைவி டாது மங்க ...... இவையால்நின் பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து பாவமது பான முண்டு ...... வெறிமூடி ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று ஈனமிகு சாதி யின்க ...... ணதிலேயான் ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன் ஈரஅருள் கூர வந்து ...... எனையாள்வாய் சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி சூழமதில் தாவி மஞ்சி ...... னளவாகத் தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த சுவாமிமலை வாழ வந்த ...... பெருமாளே. |
# 243 இருமலு ரோக (திருத்தணிகை) |
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான |
இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ...... இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ...... விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ...... மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ...... பெருமாளே. |
# 431 தோதகப் பெரும் (திருவருணை) |
தான தத்த தந்த தான தத்த தந்த தான தத்த தந்த ...... தனதான |
தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு தோகை யர்க்கு நெஞ்ச ...... மழியாதே சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று சூழ்பி ணிக்க ணங்க ...... ளணுகாதே பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து பாசம் விட்டெ றிந்து ...... பிடியாதே பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும் வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப வீர பத்ர கந்த ...... முருகோனே மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து வேலை யிற்றொ ளைந்த ...... கதிர்வேலா கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த கோம ளக்கு ரும்பை ...... புணர்வோனே கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே. |
# 485 எலுப்புத் தோல் (சிதம்பரம்) |
தனத்தத் தானன தானன தானன தனத்தத் தானன தானன தானன தனத்தத் தானன தானன தானன ...... தந்ததான |
எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள் இரத்தச் சாகர நீர்மல மேவிய ...... கும்பியோடை இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி உளைப்புச் சூலையொ டேவலு வாகிய இரைப்புக் கேவல மூலவி யாதியொ ...... டண்டவாதங் குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை குருட்டுக் கால்முட மூமையு ளூடறு ...... கண்டமாலை குடிப்புக் கூனமி தேசத மாமென எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு னிடத்துத் தாள்பெற ஞானச தாசிவ ...... அன்புதாராய் கெலிக்கப் போர்பொரு சூரர்கு ழாமுமி ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள் கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட ...... கண்டவேலா கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெ யசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரி கிழப்பொற் காளைமெ லேறுமெ நாயகி ...... பங்கின்மேவும் வலித்துத் தோள்மலை ராவண னானவன் எடுத்தப் போதுடல் கீழ்விழ வேசெய்து மகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅர ...... சம்புபாலா மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை அணைத்துச் சீர்புலி யூர்பர மாகிய வடக்குக் கோபுர வாசலில் மேவிய ...... தம்பிரானே. |
# 487 வாத பித்தமொடு (சிதம்பரம்) |
தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன ...... தந்ததான |
வாத பித்தமொடு சூலை விப்புருதி யேறு கற்படுவ னீளை பொக்கிருமல் மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ ...... டந்திமாலை மாச டைக்குருடு காத டைப்பு செவி டூமை கெட்டவலி மூல முற்றுதரு மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க ...... ளுண்டகாயம் வேத வித்துபரி கோல முற்றுவிளை யாடு வித்தகட லோட மொய்த்தபல வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் ...... சிங்கியாலே வீடு கட்டிமய லாசை பட்டுவிழ வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற வீட ளித்துமயி லாடு சுத்தவெளி ...... சிந்தியாதோ ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி நீறு பட்டலற சூர வெற்பவுண ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக ...... ழங்கிவேலா ஓந மச்சிவய சாமி சுத்தஅடி யார்க ளுக்குமுப காரி பச்சையுமை ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் ...... தந்தசேயே ஆதி கற்பகவி நாய கர்க்குபிற கான பொற்சரவ ணாப ரப்பிரம னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய ...... றிந்தகோவே ஆசை பெற்றகுற மாதை நித்தவன மேவி சுத்தமண மாடி நற்புலியு ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ் ...... தம்பிரானே. |
# 766 ஊனத்தசை தோல்கள் (சீகாழி) |
தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த ...... தனதான |
ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும் ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக் கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத் தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர் காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே. |
# 790 ஈளை சுரங்குளிர் (பாகை) |
தான தனந்தன தான தனந்தன தான தனந்தன ...... தனதான |
ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல நோய்கள் வளைந்தற ...... இளையாதே ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு காடு பயின்றுயி ...... ரிழவாதே மூளை யெலும்புகள் நாடி நரம்புகள் வேறு படுந்தழல் ...... முழுகாதே மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில் வாழ்வு பெறும்படி ...... மொழிவாயே வாளை நெருங்கிய வாவியி லுங்கயல் சேல்கள் மறிந்திட ...... வலைபீறா வாகை துதைந்தணி கேதகை மங்கிட மோதி வெகுண்டிள ...... மதிதோயும் பாளை நறுங்கமழ் பூக வனந்தலை சாடி நெடுங்கடல் ...... கழிபாயும் பாகை வளம்பதி மேவி வளஞ்செறி தோகை விரும்பிய ...... பெருமாளே. |
# 858 அறுகுநுனி பனி (திருவிடைமருதூர்) |
தனதனன தனதனன தனதனன தனதனன தான தானனா தான தானனா தனதனன தனதனன தனதனன தனதனன தான தானனா தான தானனா தனதனன தனதனன தனதனன தனதனன தான தானனா தான தானனா ...... தனதன தனதான |
அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு ஆக மாகியோர் பால ரூபமாய் அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய் அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி ஆவி யாயவோர் தேவி மாருமாய் விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென வீடு வாசலாய் மாட கூடமாய் அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர்போலே வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில் மேலை வீடுகேள் கீழை வீடுகேள் திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய் விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு வீணி யார்சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும் வீணர் சேவையே பூணு பாவியாய் மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு வார்கள் போகுவார் காணு மோஎனா விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென மேள மேசொலா யாளி வாயராய் ...... மிடையுற வருநாளில் வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில வாத மூதுகா மாலை சோகைநோய் பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள் பீளை சாறிடா ஈளை மேலிடா வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய் மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில் மாதர் சீயெனா வாலர் சீயெனா கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு காடு வாவெனா வீடு போவெனா வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனிதர்கள் பலபேச இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ ஏழை மாதராள் மோதி மேல்விழா எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற ஈமொ லேலெனா வாயை ஆவெனா இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனி லிடும்வாழ்வே இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும் ஏசி டார்களோ பாச நாசனே இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற ஏக போகமாய் நீயு நானுமாய் இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில் ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே. |
# 894 நீரிழிவு குட்டம் (குறட்டி) |
தானன தனத்த தான தானன தனத்த தான தானன தனத்த தான ...... தனதான |
நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல நீள்குளிர் வெதுப்பு வேறு ...... முளநோய்கள் நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு நீடிய விரத்த மூளை ...... தசைதோல்சீ பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு பாய்பிணி யியற்று பாவை ...... நரிநாய்பேய் பாறோடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான பாழுட லெடுத்து வீணி ...... லுழல்வேனோ நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூத நாயக ரிடத்து காமி ...... மகமாயி நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத நாயகி யுமைச்சி நீலி ...... திரிசூலி வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக வாணுத லளித்த வீர ...... மயிலோனே மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலை வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே. |
# 983 வாலவயதாகி (இராமேசுரம்) |
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தனதான |
வாலவய தாகியழ காகிமத னாகிபணி வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல் வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு ...... பொருள்தேடி வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ் வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல ...... சிலநாள்போய்த் தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி ...... யுறுநாளிற் சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல் சூழலுற மூலகசு மாலமென நாறியுட ...... லழிவேனோ நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு ...... மிளையோனே நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி ஞானகுற மாதைதின காவில்மண மேவுபுகழ் ...... மயில்வீரா ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம் வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் ...... பொடியாக ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் ...... பெருமாளே. |
# 1025 சீதமலம் வெப்பு (பொதுப்பாடல்கள்) |
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான |
சீதமலம் வெப்பு வாதமிகு பித்த மானபிணி சுற்றி ...... யுடலூடே சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க தீதுவிளை விக்க ...... வருபோதில் தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம தற்கு ...... ளழியாமுன் தாரணி தனக்கு ளாரண முரைத்த தாள்தர நினைத்து ...... வரவேணும் மாதர்மய லுற்று வாடவடி வுற்று மாமயிலில் நித்தம் ...... வருவோனே மாலுமய னொப்பி லாதபடி பற்றி மாலுழலு மற்ற ...... மறையோர்முன் வேதமொழி வித்தை யோதியறி வித்த நாதவிறல் மிக்க ...... இகல்வேலா மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த ...... பெருமாளே. |
# 1027 தோதகம் மிகுத்த (பொதுப்பாடல்கள்) |
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான |
தோதகமி குத்த பூதமருள் பக்க சூலைவலி வெப்பு ...... மதநீர்தோய் சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று சோகைபல குட்ட ...... மவைதீரா வாதமொடு பித்த மூலமுடன் மற்று மாயபிணி சற்று ...... மணுகாதே வாடுமெனை முத்தி நீடியப தத்தில் வாழமிக வைத்து ...... அருள்வாயே காதல்மிக வுற்று மாதினைவி ளைத்த கானககு றத்தி ...... மணவாளா காசினிய னைத்து மோடியள விட்ட கால்நெடிய பச்சை ...... மயில்வீரா வேதமொழி மெத்த வோதிவரு பத்தர் வேதனைத விர்க்கு ...... முருகோனே மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த ...... பெருமாளே. |
# 1037 வாதந் தலைவலி (பொதுப்பாடல்கள்) |
தானந் தனதன தானந் தனதன தானந் தனதன ...... தனதான |
வாதந் தலைவலி சூலம் பெருவயி றாகும் பிணியிவை ...... யணுகாதே மாயம் பொதிதரு காயந் தனின்மிசை வாழுங் கருவழி ...... மருவாதே ஓதம் பெறுகடல் மோதுந் திரையது போலும் பிறவியி ...... லுழலாதே ஓதும் பலஅடி யாருங் கதிபெற யானுன் கழலிணை ...... பெறுவேனோ கீதம் புகழிசை நாதங் கனிவொடு வேதங் கிளர்தர ...... மொழிவார்தம் கேடின் பெருவலி மாளும் படியவ ரோடுங் கெழுமுத ...... லுடையோனே வேதந் தொழுதிரு மாலும் பிரமனு மேவும் பதமுடை ...... விறல்வீரா மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபட வேல்கொண் டமர்செய்த ...... பெருமாளே. |
# 1194 முனை அழிந்தது (பொதுப்பாடல்கள்) |
தனன தந்தன தாத்தன தந்தன தனன தந்தன தாத்தன தந்தன தனன தந்தன தாத்தன தந்தன ...... தனதான |
முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது முதுகு வெஞ்சிலை காட்டிவ ளைந்தது ...... ப்ரபையான முகமி ழிந்தது நோக்குமி ருண்டது இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்தது ...... அறிவேபோய் நினைவ யர்ந்தது நீட்டல் முடங்கலு மவச மும்பல ஏக்கமு முந்தின நெறிம றந்தது மூப்பு முதிர்ந்தது ...... பலநோயும் நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது சலம லங்களி னாற்றமெ ழுந்தது நிமிஷ மிங்கினி யாச்சுதென் முன்பினி ...... தருள்வாயே இனைய இந்திர னேற்றமு மண்டர்கள் தலமு மங்கிட வோட்டியி ருஞ்சிறை யிடுமி டும்புள ராக்கதர் தங்களில் ...... வெகுகோடி எதிர்பொ ரும்படி போர்க்குளெ திர்ந்தவர் தசைசி ரங்களு நாற்றிசை சிந்திட இடிமு ழங்கிய வேற்படை யொன்றனை ...... யெறிவோனே தினைவ னங்கிளி காத்தச வுந்தரி அருகு சென்றடி போற்றிம ணஞ்செய்து செகம றிந்திட வாழ்க்கைபு ரிந்திடு ...... மிளையோனே திரிபு ரம்பொடி யாக்கிய சங்கரர் குமர கந்தப ராக்ரம செந்தமிழ் தெளிவு கொண்டடி யார்க்குவி ளம்பிய ...... பெருமாளே. |
# 1316 துடிகொள் நோய் (பழமுதிர்ச்சோலை) |
தனன தான தான தத்த தனன தான தான தத்த தனன தான தான தத்த ...... தனதான |
துடிகொ ணோய்க ளோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இரும லீளை வாத பித்த ...... மணுகாமல் துறைக ளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை யற்று சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே உடல்செய் கோர பாழ்வ யிற்றை நிதமு மூணி னாலு யர்த்தி யுயிரி னீடு யோக சித்தி ...... பெறலாமே உருவி லாத பாழில் வெட்ட வெளியி லாடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்ம ...... முறுவேனோ கடிது லாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயு மிக்க மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலூர்போய்க் களமு றானை தேர்நு றுக்கி தலைக ளாறு நாலு பெற்ற அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே முடுகு வீர சூர பத்மர் தலையின் மூளை நீறு பட்டு முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா முநிவர் தேவர் ஞான முற்ற புநித சோலை மாமலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே. |