பவளத் தடவரை போலுந்திண் டோள்களத் தோண்மிசையே பவளக் குழைதழைத் தாலொக்கும் பல்சடை யச்சடைமேல் பவளக் கொழுந்தன்ன பைம்முக நாகமந் நாகத்தொடும் பவளக்கண் வால மதியெந்தை சூடும் பனிமலரே.
|
1
|
முருகார் நறுமல ரிண்டை தழுவிவண் டேமுரலும் பெருகா றடைசடைக் கற்றையி னாய்பிணி மேய்ந்திருந்த இருகாற் குரம்பை யிதுநா னுடைய திதுபிரிந்தால் தருவா யெனக்குன் றிருவடிக் கீழொர் தலைமறைவே.
|
2
|
மூவா வுருவத்து முக்கண் முதல்வமீக் கூரிடும்பை காவா யெனக்கடை தூங்கு மணியைக்கை யாலமரர் நாவா யசைத்த வொலியொலி மாறிய தில்லையப்பால் தீவா யெரிந்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே.
|
3
|
பந்தித்த பாவங்க ளம்மையிற் செய்தன விம்மைவந்து சந்தித்த பின்னைச் சமழ்ப்பதென் னேவந் தமரர்முன்னாள் முந்திச் செழுமல ரிட்டு முடிதாழ்த் தடிவணங்கும் நந்திக்கு முந்துற வாட்செய்கி லாவிட்ட நன்னெஞ்சமே.
|
4
|
அந்திவட் டத்திளங் கண்ணிய னாறமர் செஞ்சடையான் புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ சந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த நந்திவட் டத்தொடு கொன்றைவ ளாவிய நம்பனையே.
|
5
|
| Go to top |
உன்மத் தகமலர் சூடி யுலகந் தொழச்சுடலைப் பன்மத் தகங்கொண்டு பல்கடை தோறும் பலிதிரிவான் என்மத் தகத்தே யிரவும் பகலும் பிரிவரியான் தன்மத் தகத்தொ ரிளம்பிறை சூடிய சங்கரனே.
|
6
|
அரைப்பா லுடுப்பன கோவணச் சின்னங்க ளையமுணல் வரைப்பா வையைக்கொண்ட தெக்குடி வாழ்க்கைக்கு வானிரைக்கும் இரைப்பா படுதலை யேந்துகை யாமறை தேடுமெந்தாய் உரைப்பா ருரைப்பன வேசெய்தி யாலெங்க ளுத்தமனே.
|
7
|
துறக்கப் படாத வுடலைத் துறந்துவெந் தூதுவரோ டிறப்ப னிறந்தா லிருவிசும் பேறுவ னேறிவந்து பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர் மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே.
|
8
|
வேரி வளாய விரைமலர்க் கொன்றை புனைந்தனகன் சேரி வளாயவென் சிந்தை புகுந்தான் றிருமுடிமேல் வாரி வளாய வருபுனற் கங்கை சடைமறிவாய் ஏரி வளாவிக் கிடந்தது போலு மிளம்பிறையே.
|
9
|
கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கட னீர்சுருங்கிப் பன்னெடுங் கால மழைதான் மறுக்கினும் பஞ்சமுண்டென் றென்னொடுஞ் சூளறு மஞ்சனெஞ் சேயிமை யாதமுக்கண் பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண் டீரிப் புகலிடத்தே.
|
10
|
| Go to top |
மேலு மறிந்தில னான்முகன் மேற்சென்று கீழிடந்து மாலு மறிந்திலன் மாலுற்ற தேவழி பாடுசெய்யும் பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி மறிந்தசிந்தைக் கால னறிந்தா னறிதற் கரியான் கழலடியே.
|
11
|