கோழைமிட றாககவி கோளுமில வாகவிசை கூடும்வகையால் ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழு மீசனிடமாம் தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி வாழையுதிர் வீழ்கனிக ளூறிவயல் சேறுசெயும் வைகாவிலே.
|
1
|
அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகவெழிலார் விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம் புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம் வண்டினிசை பாடவழகார்குயின்மி ழற்றுபொழில் வைகாவிலே.
|
2
|
ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவை யுணர்ந்தவடியார் ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம் ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்க டோறுமழகார் வானமதி யோடுமழை நீண்முகில்கள் வந்தணவும் வைகாவிலே.
|
3
|
இன்னவுரு வின்னநிற மென்றறிவ தேலரிது நீதிபலவும் தன்னவுரு வாமெனமி குத்ததவ னீதியொடு தானமர்விடம் முன்னைவினை போய்வகையி னான்முழு [ துணர்ந்துமுயல் கின்றமுனிவர் மன்னவிரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே.
|
4
|
வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம் ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம் மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கவழகார் மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில். வைகாவிலே.
|
5
|
Go to top |
நஞ்சமுது செய்தமணி கண்டனமை யாளுடைய ஞானமுதல்வன் செஞ்சடையி டைப்புனல்க ரந்தசிவலோகனமர் கின்றவிடமாம் அஞ்சுடரொ டாறுபத மேழினிசை யெண்ணரிய வண்ணமுளவாய் மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே.
|
6
|
நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையால் தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம் நீளவளர் சோலைதொறு நாளிபல துன்றுகனி நின்றதுதிர வாளைகுதிகொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே.
|
7
|
கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன் ஐயிருசி ரங்களையொ ருங்குடனெ ரித்தவழ கன்றனிடமாம் கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம் வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே.
|
8
|
அந்தமுத லாதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள் எந்தைபெரு மானிறைவ னென்றுதொழ நின்றருள்செ யீசனிடமாம் சிந்தைசெய்து பாடுமடி யார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள் வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே.
|
9
|
ஈசனெமை யாளுடைய வெந்தைபெரு மானிறைவ னென்றுதனையே பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிடம் தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன் வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே.
|
10
|
Go to top |
முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்றிருவை காவிலதனை செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தனு ரைசெய் உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவ ருருத்திரரெனப் பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே.
|
11
|