வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடம் தானமுது செய்தருள் புரிந்தசிவன் மேவுமலை தன்னைவினவில் ஏனமிள மானினொடு கிள்ளைதினை கொள்ளவெழி லார்கவணினால் கானவர்த மாமகளிர் கனகமணி விலகுகா ளத்திமலையே.
|
1
|
முதுசினவி லவுணர்புர மூன்றுமொரு நொடிவரையின் மூளவெரிசெய் சதுரர்மதி பொதிசடையர் சங்கரர் விரும்புமலை தன்னைவினவில் எதிரெதிர வெதிர்பிணைய வெழுபொறிகள் சிதறவெழி லேனமுழுத கதிர்மணியின் வளரொளிக ளிருளகல நிலவுகா ளத்திமலையே.
|
2
|
வல்லைவரு காளியைவ குத்துவலி யாகிமிகு தாரகனைநீ கொல்லென விடுத்தருள் புரிந்தசிவன் மேவுமலை கூறிவினவில் பல்பலவி ருங்கனி பருங்கிமிக வுண்டவை நெருங்கியினமாய்க் கல்லதிர நின்றுகரு மந்திவிளை யாடுகா ளத்திமலையே.
|
3
|
வேயனைய தோளுமையொர் பாகமது வாகவிடை யேறிசடைமேல் தூயமதி சூடிசுடு காடினட மாடிமலை தன்னைவினவில் வாய்கலச மாகவழி பாடுசெய்யும் வேடன்மல ராகுநயனம் காய்கணை யினாலிடந் தீசனடி கூடுகா ளத்திமலையே.
|
4
|
மலையின்மிசை தனின்முகில்போல் வருவதொரு மதகரியை மழைபொலலறக் கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன் மேவுமலை கூறிவினவில் அலைகொள்புன லருவிபல சுனைகள்வழி யிழியவய னிலவுமுதுவேய் கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை சிந்துகா ளத்திமலையே.
|
5
|
Go to top |
பாரகம் விளங்கிய பகீரத னருந்தவ முயன்றபணிகண் டாரருள் புரிந்தலைகொள் கங்கைசடை யேற்றவரன் மலையைவினவில் வாரத ரிருங்குறவர் சேவலின் மடுத்தவ ரெரித்தவிறகில் காரகி லிரும்புகை விசும்புகமழ் கின்றகா ளத்திமலையே.
|
6
|
ஆருமெதி ராதவலி யாகிய சலந்தரனை யாழியதனால் ஈரும்வகை செய்தருள் புரிந்தவ னிருந்தமலை தன்னைவினவில் ஊருமர வம்மொளிகொண் மாமணி யுமிழ்ந்தவை யுலாவிவரலால் காரிருள் கடிந்துகன கம்மென விளங்குகா ளத்திமலையே.
|
7
|
எரியனைய சுரிமயி ரிராவணனை யீடழிய எழில்கொள்விரலால் பெரியவரை யூன்றியருள் செய்தசிவன் மேவுமலை பெற்றிவினவில் வரியசிலை வேடுவர்க ளாடவர்க ணீடுவரை யூடுவரலால் கரியினொடு வரியுழுவை யரியினமும் வெருவுகா ளத்திமலையே.
|
8
|
இனதளவி லிவனதடி யிணையுமுடி யறிதுமென விகலுமிருவர் தனதுருவ மறிவரிய சகளசிவன் மேவுமலை தன்னை வினவில் புனவர்புன மயிலனைய மாதரொடு மைந்தரு மணம்புணருநாள் கனகமென மலர்களணி வேங்கைக ணிலாவுகா ளத்திமலையே.
|
9
|
நின்றுகவ ளம்பலகொள் கையரொடு மெய்யிலிடு போர்வையவரும் நன்றியறி யாதவகை நின்றசிவன் மேவுமலை நாடிவினவில் குன்றின்மலி துன்றுபொழி னின்றகுளிர் சந்தின்முறி தின்றுகுலவிக் கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை யாடுகா ளத்திமலையே.
|
10
|
Go to top |
காடதிட மாகநட மாடுசிவன் மேவுகா ளத்திமலையை மாடமொடு மாளிகைக ணீடுவளர் கொச்சைவய மன்னுதலைவன் நாடுபல நீடுபுகழ் ஞானசம் பந்தனுரை நல்லதமிழின் பாடலொடு பாடுமிசை வல்லவர்க ணல்லர்பர லோகமெளிதே.
|
11
|