நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்தன் நெடுமா வுரித்த நிகரில் சேலன கண்ணிவண்ண மொருகூ றுருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான் வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை விழவோசை வேத வொலியின் சாலநல் வேலையோசை தருமாட வீதி கொடியாடு கொச்சை வயமே.
|
1
|
விடையுடை யப்பனொப்பி னடமாட வல்ல விகிர்தத் துருக்கொள் விமலன் சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள் தகவைத்த சோதி பதிதான் மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து கமலத்து வைகும் வயல்சூழ் கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும் வளர்கின்ற கொச்சை வயமே.
|
2
|
படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை களைவிக்கும் எங்கள் பரமன் இடமுடை வெண்தலைக்கை பலிகொள்ளும்இன்பன் இடமாய வேர்கொள் பதிதான் நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடு நளிர்சோலை கோலு கனகக் குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல மறையோது கொச்சை வயமே.
|
3
|
எண்டிசை பாலரெங்கு மிகலிப் புகுந்து முயல்வுற்ற சிந்தை முடுகிப் பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு பணிவுற்ற பாதர் பதிதான் மண்டிய வண்டன்மிண்டி வருநீர பொன்னி வயல்பாய வாளை குழுமிக் குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன வளர்கின்ற கொச்சை வயமே.
|
4
|
பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர னொடுதோழ மைக்கொள் பகவன் இனியன வல்லவற்றை யினிதாக நல்கும் இறைவன் னிடங்கொள் பதிதான் முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம் வளர் தூம மோடி யணவிக் குனிமதி மூடிநீடு முயர்வான் மறைத்து நிறைகின்ற கொச்சை வயமே.
|
5
|
Go to top |
புலியதள் கோவணங்க ளுடையாடை யாக வுடையா னினைக்கு மளவில் நலிதரு முப்புரங்க ளெரிசெய்த நாத னலமா விருந்த நகர்தான் கலிகெட வந்தணாளர் கலைமேவு சிந்தை யுடையார் நிறைந்து வளரப் பொலிதரு மண்டபங்க ளுயர்மாட நீடு வரைமேவு கொச்சை வயமே.
|
6
|
வண்டமர் பங்கயத்து வளர்வானும் வைய முழுதுண்ட மாலு மிகலிக் கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்து மறியாத சோதி பதிதான் நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து விரைதேர போது மதுவிற் புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து வயன்மேவு கொச்சை வயமே.
|
8
|
கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்ட ரிடுசீவ ரத்தி னுடையார் மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல விகிர்தத் துருக்கொள் விமலன் பையுடை நாகவாயில் எயிறார மிக்க குரவம் பயின்று மலரச் செய்யினில் நீலமொட்டு விரியக்கமழ்ந்து மணநாறு கொச்சை வயமே.
|
9
|
இறைவனை ஒப்பிலாத வொளிமேனி யானை யுலகங்க ளேழு முடனே மறைதரு வெள்ளமேவி வளர்கோயின் மன்னி யினிதா விருந்த மணியைக் குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த தமிழ்மாலை பாடுமவர் போய் அறைகழ லீசனாளு நகர்மேவி யென்றும் அழகா விருப்ப தறிவே
|
10
|
Go to top |
இறைவனை, ஒப்பு இலாத ஒளி மேனியானை, உலகங்கள் ஏழும் உடனே
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை,
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ்மாலை பாடுமவர், போய்,
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி, என்றும் அழகா இருப்பது அறிவே.
|
11
|