மாதர்ம டப்பிடியும் மட வன்னமு மன்னதோர் நடை யுடைம் மலைமக டுணையென மகிழ்வர் பூதவி னப்படைநின் றிசைபாடவு மாடுவ ரவர்படர் சடைந்நெடு முடியதொர் புனலர் வேதமொ டேழிசைபா டுவ ராழ்கடல் வெண்டிரை யிரைந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே தாதவிழ் புன்னை தயங் கும லர்ச்சிறைவண்டறை யெழில் பொழில் குயில் பயில்தருமபு ரம்பதியே.
|
1
|
பொங்குந டைப்புகலில் விடை யாமவ ரூர்திவெண் பொடி யணி தடங் கொண்மார் புபூணநூல் புரள மங்குலி டைத்தவழும் மதி சூடுவ ராடுவர் வளங் கிளர் புனலர வம்வைகிய சடையர் சங்குக டற்றிரையா லுதை யுண்டுச ரிந்திரிந் தொசிந் தசைந் திசைந் துசே ரும்வெண்மணற் குவைமேல் தங்குக திர்ம்மணிநித் தில மெல்லிரு ளொல்கநின் றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே.
|
2
|
விண்ணுறு மால்வரைபோல் விடை யேறுவ ராறுசூ டுவர் விரி சுரியொளி கொடோடுநின் றிலங்கக் கண்ணுற நின்றொளிருங் கதிர் வெண்மதிக் கண்ணியர் கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப் பெண்ணுற நின்றவர் தம் முரு வம்மயன் மாறொழவ் வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார் தண்ணிதழ் முல்லையொடெண் ணிதழ் மௌவன்ம ருங்கலர் கருங் கழிந் நெருங் குநற் றருமபு ரம்பதியே.
|
3
|
வாருறு மென்முலைநன் னுத லேழையொ டாடுவர் வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர் காருற நின்றலரும் மலர்க் கொன்றையங் கண்ணியர் கடுவ் விடை கொடி வெடி கொள்காடுறை பதியர் பாருற விண்ணுலகம் பர வப்படு வோரவர் படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார் தாருறு நல்லரவம் மலர் துன்னிய தாதுதிர் தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.
|
4
|
நேரும வர்க்குணரப் புகி லில்லைநெ டுஞ்சடைக் கடும் புனல் படர்ந் திடம் படுவ்வதொர் நிலையர் பேரும வர்க்கெனையா யிர முன்னைப்பி றப்பிறப் பிலா தவ ருடற் றடர்த் தபெற்றியா ரறிவார் ஆரம வர்க்கழல்வா யதொர் நாகம ழஃகுறவ் வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல் தாரம வர்க்கிமவான் மக ளூர்வது போர்விடை கடிபடு செடி பொழிற் றருமபு ரம்பதியே.
|
5
|
Go to top |
கூழையங் கோதைகுலா யவ டம்பிணை புல்கமல் குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய் மாழையொண் கண்மடவா ளையொர் பாகம கிழ்ந்தவர் வலம் மலிபடை விடை கொடிகொடும் மழுவ்வாள் யாழையும் மெள்கிடவே ழிசை வண்டுமு ரன்றினந் துவன் றிமென் சிறஃகறை யுறந்நறவ்வி ரியுந்நல் தாழையு ஞாழலுந்நீ டிய கானலி னள்ளலி சைபுள்ளினந் துயில் பயி றருமபு ரம்பதியே.
|
6
|
தேமரு வார்குழலன் னந டைப்பெடை மான்விழித் திருந் திழை பொருந் துமே னிசெங்கதிர் விரியத் தூமரு செஞ்சடையிற் றுதை வெண்மதி துன்றுகொன் றைதொல்புனல் சிரங் கரந் துரித்ததோ லுடையர் காமரு தண்கழிநீ டிய கானல கண்டகங் கடல் லடை கழி யிழி யமுண்டகத் தயலே தாமரை சேர்குவளைப் படு கிற்கழு நீர்மலர் வெறி கமழ் செறிவ் வயற் றருமபு ரம்பதியே.
|
7
|
தூவண நீறகலம் பொலி யவ்விரை புல்கமல் குமென் மலர் வரை புரை திரள்புயம் மணிவர் கோவண மும்முழையின் னத ளும்முடை யாடையர் கொலைம் மலி படை யொர்சூ லமேந்திய குழகர் பாவண மாவலறத் தலை பத்துடை யவ்வரக் கனவ் வலி யொர்கவ் வைசெய் தருள்புரி தலைவர் தாவண வேறுடையெம் மடி கட்கிடம் வன்றடங் கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.
|
8
|
வார்மலி மென்முலைமா தொரு பாகம தாகுவர் வளங் கிளர் மதி யர வம்வைகிய சடையர் கூர்மலி சூலமும்வெண் மழு வும்மவர் வெல்படை குனி சிலைதனிம் மலை யதேந்திய குழகர் ஆர்மலி யாழிகொள்செல் வனு மல்லிகொ டாமரைம் மிசை யவன் னடிம் முடி யளவுதா மறியார் தார்மலி கொன்றையலங் கலு கந்தவர் தங்கிடந் தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.
|
9
|
புத்தர்க டத்துவர்மொய்த் துறி புல்கிய கையர்பொய்ம் மொழிந் தழி வில்பெற் றியுற் றநற்றவர் புலவோர் பத்தர்க ளத்தவமெய்ப் பயனாக வுகந்தவர் நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர் முத்தன வெண்ணகையொண் மலை மாதுமை பொன்னணி புணர்ம் முலை யிணை துணை யணைவதும் பிரியார் தத்தரு வித்திரளுந் திய மால்கட லோதம்வந் தடர்ந் திடுந் தடம்பொழிற் றருமபு ரம்பதியே.
|
10
|
Go to top |
பொன்னெடு நன்மணிமா ளிகை சூழ்விழ வம்மலீ பொரூஉம் புன றிரூஉ வமர் புகல்லியென் றுலகில் தன்னொடு நேர்பிறவில் பதி ஞானசம் பந்தனஃ துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபுரம் பதியைப் பின்னெடு வார்சடையிற் பிறை யும்மர வும்முடை யவன் பிணை துணை கழல் கள்பேணுத லுரியார் இன்னெடு நன்னுலகெய் துவ ரெய்திய போகமும் முறு வர்கள் ளிடர் பிணி துயரணைவ் விலரே.
|
11
|