முள்ளின்மேன் முதுகூகை முரலுஞ் சோலை வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த கள்ளின்மே யவண்ணல் கழல்க ணாளும் உள்ளுமே லுயர்வெய்த லொரு தலையே.
|
1
|
ஆடலான் பாடலா னரவங்கள் பூண்டான் ஓடலாற் கலனில்லா னுறை பதியால் காடலாற் கருதாத கள்ளின் மேயான் பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே.
|
2
|
எண்ணார்மும் மதிலெய்த விமையா முக்கண் பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி கண்ணார்நீ றணிமார்பன் கள்ளின் மேயான் பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே.
|
3
|
பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும் நறைபெற்ற விரிகொன்றைத் தார்ந யந்த கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளின் மேயான் நிறைபெற்ற வடியார்கள் நெஞ்சு ளானே.
|
4
|
விரையாலு மலராலும் விழுமை குன்றா உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக் கரையார்பொன் புனல்வேலிக் கள்ளின் மேயான் அரையார்வெண் கோவணத்த வண்ணல் தானே.
|
5
|
Go to top |
நலனாய பலிகொள்கை நம்பா னல்ல வலனாய மழுவாளும் வேலும் வல்லான் கலனாய தலையோட்டான் கள்ளின் மேயான் மலனாய தீர்த்தெய்து மாதவத் தோர்க்கே.
|
6
|
பொடியார்மெய் பூசினும் புறவி னறவம் குடியாவூர் திரியினும் கூப்பி டினும் கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளின் மேயான் அடியார்பண் பிகழ்வார்க ளாதர் களே.
|
7
|
திருநீல மலரொண்கண் டேவி பாகம் புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில் கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும் பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே.
|
8
|
வரியாய மலரானும் வையந் தன்னை உரிதாய வளந்தானு முள்ளு தற்கங் கரியானு மரிதாய கள்ளின் மேயான் பெரியானென் றறிவார்கள் பேசு வாரே.
|
9
|
ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர் பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள் மாச்செய்த வளவயன் மல்கு கள்ளில் தீச்செய்த சடையண்ணல் திருந்த டியே.
|
10
|
Go to top |
திகைநான்கும் புகழ்காழிச் செல்வ மல்கு பகல்போலும் பேரொளியான் பந்த னல்ல முகைமேவு முதிர்சடையன் கள்ளி லேத்தப் புகழோடும் பேரின்பம் புகுது மன்றே.
|
11
|