சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.016   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=wIi2_zDbzWc   Add audio link Add Audio

மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
கறை கொள் கண்டம் உடைய கபாலியார்;
துறையும் போகுவர்; தூய வெண் நீற்றினர்;
பிறையும் சூடுவர்-பேரெயிலாளரே.

1

கணக்கு இலாரையும், கற்று வல்லாரையும்,
வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும்,
தணக்குவார்; தணிப்பார்; எப்பொருளையும்
பிணக்குவார் அவர்-பேரெயிலாளரே.

2

சொரிவிப்பார், மழை; சூழ் கதிர்த் திங்களை
விரிவிப்பார்; வெயில் பட்ட விளங்கு ஒளி
எரிவிப்பார்; தணிப்பார்; எப்பொருளையும்
பிரிவிப்பார் அவர்-பேரெயிலாளரே.

3

செறுவிப்பார், சிலையால் மதில்; தீர்த்தங்கள்
உறுவிப்பார்; பலபத்தர்கள் ஊழ்வினை
அறுவிப்பார்; அது அன்றியும் நல்வினை
பெறுவிப்பார் அவர்-பேரெயிலாளரே.

4

மற்றையார் அறியார்; மழுவாளினார்;
பற்றி ஆட்டி ஓர் ஐந்தலைப்பாம்பு அரைச்
சுற்றியார் அவர்; தூ நெறியால் மிகு
பெற்றியார் அவர்-பேரெயிலாளரே.

5
Go to top

திருக்கு வார்குழல் செல்வன சேவடி-
இருக்கு வாய்மொழியால்-தனை ஏத்துவார்
சுருக்குவார், துயர்; தோற்றங்கள் ஆற்றறப்
பெருக்குவார் அவர், பேரெயிலாளரே.

6

முன்னையார்; மயில் ஊர்தி முருகவேள்-
தன் ஐயார் எனில்-தான் ஓர் தலைமகன்;
என்னை ஆளும் இறையவன்; எம்பிரான்;
பின்னையார் அவர்-பேரெயிலாளரே.

7

உழைத்தும், துள்ளியும், உள்ளத்துளே உரு
இழைத்தும், எந்தைபிரான் என்று இராப்பகல்
அழைக்கும் அன்பினர் ஆய அடியவர்
பிழைப்பு நீக்குவர்-பேரெயிலாளரே.

8

நீர் உலாம் நிமிர்புன்சடையா! எனா
ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய,
வார் உலாம் வனமென்முலையாளொடும்,
பேர் உளார் அவர்-பேரெயிலாளரே.

9

பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர்;
தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர்;
மாணியாய் மண் அளந்தவன், நான்முகன்,
பேணியார் அவர் பேரெயிலாளரே.

10
Go to top

மதத்த வாள் அரக்கன் மணிப் புட்பகம்
சிதைக்கவே, திருமாமலைக்கீழ்ப் புக்கு,
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி
பிதக்க ஊன்றிய பேரெயிலாளரே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பேரெயில்
5.016   திருநாவுக்கரசர்   தேவாரம்   மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
Tune - திருக்குறுந்தொகை   (திருப்பேரெயில் )

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group