![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=PjnXvyDvdyM Add audio link
4.109
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருத்தூங்கானைமாடம் - திருவிருத்தம் அருள்தரு கருணைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மால்வணங்குமீசர் திருவடிகள் போற்றி
திருப்பெண்ணாகடத்துத் தூங்கானைமாடம் என்னும் திருக் கோயிலில் உள்ள பெருமானைப் பணிந்து சமண் சமயத் தொடக்குண்ட உடல் தூய்மைபெற இடபக்குறி சூலக்குறி பொறித்தருள வேண்டினார். பொன்னார் திருவடிக்கு என்று தொடங்கித் திருவடிக்கு விண்ணப்ப மும் தெரிவித்தார். இறைவன் திருவருளால் சிவபூதம் ஒன்று வந்து திருநாவுக்கரசர் தோள்களில் இடபக்குறி சூலக்குறி பொறித்தது. திருநாவுக்கரசர் சிவபிரான் திருவருளை வியந்து மகிழ்ந்து உய்ந்தேன் என்று பணிந்தார்.
கடந்த கால துயற சம்பவங்களில் இருந்து மீள
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு, விண்ணப்பம்: போற்றி செய்யும்
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல், இருங் கூற்று அகல
மின் ஆரும் மூஇலைச்சூலம் என்மேல் பொறி-மேவு கொண்டல்
துன் ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே!
1
ஆவா! சிறுதொண்டன் என் நினைந்தான்! என்று அரும் பிணிநோய்
காவாது ஒழியின் கலக்கும், உன்மேல் பழி; காதல் செய்வார்
தேவா! திருவடி நீறு என்னைப் பூசு-செந்தாமரையின்
பூ ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் புண்ணியனே!
2
கடவும் திகிரி கடவாது ஒழியக் கயிலை உற்றான்
படவும் திருவிரல் ஒன்று வைத்தாய்; பனிமால்வரை போல்
இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய்-இருஞ் சோலை திங்கள்
தடவும் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் தத்துவனே!
3
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருத்தூங்கானைமாடம்
1.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு,
Tune - பழந்தக்கராகம்
(திருத்தூங்கானைமாடம் சுடர்க்கொழுந்தீசர் கடந்தைநாயகியம்மை)
4.109
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று
Tune - திருவிருத்தம்
(திருத்தூங்கானைமாடம் மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000