| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=XlEG3q_gV_U Add audio link
3.050
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத்தண்டலைநீணெறி - கௌசிகம் அருள்தரு ஞானாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நீணெறிநாதேசுவரர் திருவடிகள் போற்றி
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே,
சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம்
கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம்
நெருங்கும் தண்டலை நீணெறி; காண்மினே!
1
இகழும் காலன் இதயத்தும், என் உளும்,
திகழும் சேவடியான் திருந்தும்(ம்) இடம்
புகழும் பூமகளும் புணர் பூசுரர்
நிகழும் தண்டலை நீணெறி; காண்மினே!
2
பரந்த நீலப் படர் எரி வல்விடம்
கரந்த கண்டத்தினான் கருதும்(ம்) இடம்
சுரந்த மேதி துறை படிந்து ஓடையில்
நிரந்த தண்டலை நீணெறி; காண்மினே!
3
தவந்த என்பும், தவளப்பொடியுமே,
உவந்த மேனியினான் உறையும்(ம்) இடம்
சிவந்த பொன்னும் செழுந் தரளங்களும்
நிவந்த தண்டலை நீணெறி; காண்மினே!
4
இலங்கை வேந்தன் இருபது தோள் இற,
விலங்கலில் அடர்த்தான் விரும்பும்(ம்) இடம்
சலம் கொள் இப்பி தரளமும் சங்கமும்
நிலம் கொள் தண்டலை நீணெறி; காண்மினே!
8
கரு வரு உந்தியின் நான்முகன், கண்ணன், என்று
இருவரும் தெரியா ஒருவன்(ன்) இடம்
செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண்-
நிருபர் தண்டலை நீணெறி; காண்மினே!
9
கலவு சீவரத்தார், கையில் உண்பவர்
குலவமாட்டாக் குழகன் உறைவு இடம்
சுலவு மா மதிலும், சுதை மாடமும்,
நிலவு தண்டலை நீணெறி; காண்மினே!
10
Go to top
நீற்றர், தண்டலை நீணெறி நாதனை,
தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை
சாற்று ஞானசம்பந்தன்-தமிழ் வலார்
மாற்று இல் செல்வர்; மறப்பர், பிறப்பையே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருத்தண்டலைநீணெறி
3.050
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே, சுரும்பும்
Tune - கௌசிகம்
(திருத்தண்டலைநீணெறி நீணெறிநாதேசுவரர் ஞானாம்பிகையம்மை)