![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=t_QtO4-9Rrk Add audio link
7.032
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
திருக்கோடிக்குழகர் - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி ராகத்தில் திருமுறை அருள்தரு மையார்தடங்கணம்மை உடனுறை அருள்மிகு அமுதகடநாதர் திருவடிகள் போற்றி
கடிதாய்க்கடற் காற்றுவந் தெற்றக் கரைமேல்
குடிதான் அய லேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன்கண்கள் கண்டன கோடிக் குழகீர்
அடிகேள்உமக் கார்துணை யாஇருந் தீரே.
1
முன்றான்கடல் நஞ்சமுண் டவ்வத னாலோ
பின்றான்பர வைக்குப காரஞ்செய் தாயோ
குன்றாப்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
என்றான்றனி யேஇருந் தாய்எம்பி ரானே.
2
மத்தம்மலி சூழ்மறைக் காடதன் தென்பால்
பத்தர்பலர் பாட இருந்த பரமா
கொத்தார்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
எத்தால்தனி யேஇருந் தாய்எம் பிரானே.
3
காடேல்மிக வாலிது காரிகை யஞ்சக்
கூடிப்பொந்தில் ஆந்தைகள் கூகை குழறல்
வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்
கோடிக்குழ காஇடங் கோயில்கொண் டாயே.
4
மையார்தடங் கண்ணிபங் காகங்கை யாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிட மில்லை
கையார்வளைக் காடுகா ளோடு முடனாய்க்
கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே.
5
Go to top
அரவேரல்கு லாளையொர் பாக மமர்ந்து
மரவங்கமழ் மாமறைக் காடதன் தென்பால்
குரவம்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
இரவேதுணை யாயிருந் தாய்எம்பி ரானே.
6
பறையுங்குழ லும்மொலி பாடல் இயம்ப
அறையுங்கழ லார்க்கநின் றாடும் அமுதே
குறையாப்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
இறைவாதனி யேஇருந் தாய்எம்பி ரானே.
7
ஒற்றியூரென்ற ஊனத்தி னாலது தானோ
அற்றப்பட ஆரூர தென்றகன் றாயோ
முற்றாமதி சூடிய கோடிக் குழகா
எற்றால்தனி யேஇருந் தாய்எம்பி ரானே.
8
நெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப்
படியான்பலி கொள்ளு மிடங்குடி யில்லை
கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல்
அடிகேள்அன்ப தாய்இடங் கோயில்கொண் டாயே.
9
பாரூர்மலி சூழ்மறைக் காடதன் தென்பால்
ஏரார்பொழில் சூழ்தரு கோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார்
சீரூர்சிவ லோகத் திருப்பவர் தாமே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருக்கோடிக்குழகர்
7.032
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கடிது ஆய்க் கடல் காற்று
Tune - கொல்லி
(திருக்கோடிக்குழகர் அமுதகடநாதர் மையார்தடங்கணம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000