சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.090   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவேதிகுடி - திருவிருத்தம் அருள்தரு மங்கையர்க்கரசியம்மை உடனுறை அருள்மிகு வேதபுரீசுவரர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=O6ovrf3yUtA   Add audio link Add Audio

கையது காலெரி நாகங் கனல்விடு சூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன்
செய்யினி னீல மணங்கம ழுந்திரு வேதிகுடி
ஐயனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.

1

கைத்தலை மான்மறி யேந்திய கையன் கனன்மழுவன்
பொய்த்தலை யேந்திநற் பூதி யணிந்து பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக ளுந்திரு வேதிகுடி
அத்தனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.

2

முன்பின் முதல்வன் முனிவனெம் மேலை வினைகழித்தான்
அன்பி னிலையி லவுணர் புரம்பொடி யானசெய்யும்
செம்பொனை நன்மலர் மேலவன் சேர்திரு வேதிகுடி
அன்பனை நம்மை யுடையனை நாமடைந் தாடுதுமே.

3

பத்தர்க ணாளு மறவார் பிறவியை யொன்றறுப்பான்
முத்தர்கண் முன்னம் பணிசெய்து பாரிட முன்னுயர்த்தான்
கொத்தன கொன்றை மணங்கம ழுந்திரு வேதிகுடி
அத்தனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.

4

ஆனணைந் தேறுங் குறிகுண மாரறி வாரவர்கை
மானணைந் தாடு மதியும் புனலுஞ் சடைமுடியன்
தேனணைந் தாடிய வண்டு பயிறிரு வேதிகுடி
ஆனணைந் தாடு மழுவனை நாமடைந் தாடுதுமே.

5
Go to top

எண்ணு மெழுத்துங் குறியு மறிபவர் தாமொழியப்
பண்ணி னிசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்றிரு வேதிகுடி
நண்ண வரிய வமுதினை நாமடைந் தாடுதுமே.

6

ஊர்ந்தவிடை யுகந் தேறிய செல்வனை நாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையொர் பாக மகிழ்ந்துடையான்
சேர்ந்த புனற்சடைச் செல்வப்பிரான்றிரு வேதிகுடிச்
சார்ந்த வயலணி தண்ணமு தையடைந் தாடுதுமே.

7

எரியு மழுவின னெண்ணியு மற்றொரு வன்றலையுள்
திரியும் பலியினன் றேயமும் நாடுமெல் லாமுடையான்
விரியும் பொழிலணி சேறுதிகழ்திரு வேதிகுடி
அரிய வமுதினை யன்பர்க ளோடடைந் தாடுதுமே.

8

மையணி கண்டன் மறைவிரி நாவன் மதித்துகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணங்கம ழுந்திரு வேதிகுடி
ஐயனை யாராவமுதினை நாமடைந் தாடுதுமே.

9

வருத்தனை வாளரக் கன்முடி தோளொடு பத்திறுத்த
பொருத்தனைப் பொய்யா வருளனைப் பூதப் படையுடைய
திருத்தனைத் தேவர்பி ரான்றிரு வேதி குடியுடைய
அருத்தனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.

10
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவேதிகுடி
3.078   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீறு, வரி ஆடு அரவொடு,
Tune - சாதாரி   (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)
4.090   திருநாவுக்கரசர்   தேவாரம்   கையது, கால் எரி நாகம்,
Tune - திருவிருத்தம்   (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000