உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருண் மெய்யினையே கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே அற்ற மறைப்பது முன்பணியே அமரர்கள் செய்வது முன்பணியே பெற்று முகந்தது கந்தனையே பிரம புரத்தை யுகந்தனையே.
|
1
|
சதிமிக வந்த சலந்தரனே தடிசிர நேர்கொள் சலந்தரனே அதிரொளி சேர்திகி ரிப்படையா லமர்ந்தன ரும்பர்து திப்படையால் மதிதவழ் வெற்பது கைச்சிலையே மருவிட மேற்பது கைச்சிலையே விதியினி லிட்டவி ரும்பரனே வேணு புரத்தை விரும்பரனே.
|
2
|
காதம ரத்திகழ் தோடினனே கானவ னாய்க்கடி தோடினனே பாதம தாற்கூற் றுதைத்தனனே பார்த்த னுடலம் புதைத்தனனே தாதவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினைய தரித்தனனே போத மமரு முரைப்பொருளே புகலி யமர்ந்த பரம்பொருளே.
|
3
|
மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே மகிழ்ந்தரை சேர்வது மாசுணமே மெய்த்துடல் பூசுவர் மேன்மதியே வேதம தோதுவர் மேன்மதியே பொய்த்தலை யோடுறு மத்தமதே புரிசடை வைத்தது மத்தமதே வித்தக ராகிய வெங்குருவே விரும்பி யமர்ந்தனர் வெங்குருவே.
|
4
|
உடன்பயில் கின்றனன் மாதவனே உறுபொறி காய்ந்திசை மாதவனே திடம்பட மாமறை கண்டனனே திரிகுண மேவிய கண்டனனே படங்கொ ளரவரை செய்தனனே பகடுரி கொண்டரை செய்தனனே தொடர்ந்த துயர்க்கொரு நஞ்சிவனே தோணி புரத்துறை நஞ்சிவனே.
|
5
|
Go to top |
திகழ்கைய தும்புகை தங்கழலே தேவர் தொழுவதுந் தங்கழலே இகழ்பவர் தாமொரு மானிடமே யிருந்தனு வோடெழின் மானிடமே மிகவரு நீர்கொளு மஞ்சடையே மின்னிகர் கின்றது மஞ்சடையே தகவிர தங்கொள்வர் சுந்தரரே தக்க தராயுறை சுந்தரரே.
|
6
|
ஓர்வரு கண்க ளிணைக்கயலே யுமையவள் கண்க ளிணைக்கயலே ஏர்மரு வுங்கழ னாகமதே யெழில்கொளு தாசன னாகமதே நீர்வரு கொந்தள கங்கையதே நெடுஞ்சடை மேவிய கங்கையதே சேர்வரு யோக தியம்பகனே சிரபுர மேய தியம்பகனே.
|
7
|
ஈண்டு துயிலம ரப்பினனே யிருங்க ணிடந்தடி யப்பினனே தீண்டல ரும்பரி சக்கரமே திகழ்ந்தொளி சேர்வது சக்கரமே வேண்டி வருந்த நகைத்தலையே மிகைத்தவ ரோடு நகைத்தலையே பூண்டனர் சேர லுமாபதியே புறவ மமர்ந்த வுமாபதியே
|
8
|
நின்மணி வாயது நீழலையே நேசம தானவர் நீழலையே உன்னி மனத்தெழு சங்கமதே யொளியத னோடுறு சங்கமதே கன்னிய ரைக்கவ ருங்களனே கடல்விட முண்டக ருங்களனே மன்னிவ ரைப்பதி சண்பையதே வாரி வயன்மலி சண்பையதே.
|
9
|
இலங்கை யரக்கர் தமக்கிறையே யிடந்து கயிலை யெடுக்கிறையே புலன்கள் கெடவுடன் பாடினனே பொறிகள் கெடவுடன் பாடினனே இலங்கிய மேனி யிராவணனே யெய்து பெயரு மிராவணனே கலந்தருள் பெற்றது மாவசியே காழி யரனடி மாவசியே.
|
10
|
Go to top |
கண்ணிகழ் புண்டரி கத்தினனே கலந்திரி புண்டரி கத்தினனே மண்ணிக ழும்பரி சேனமதே வானக மேய்வகை சேனமதே நண்ணி யடிமுடி யெய்தலரே நளிர்மலி சோலையி லெய்தலரே பண்ணியல் கொச்சை பசுபதியே பசுமிக வூர்வர் பசுபதியே.
|
11
|
பருமதில் மதுரைமன் னவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே வருநதி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனே கருதலி லிசைமுர றருமருளே கழுமல மமரிறை தருமருளே மருவிய தமிழ்விர கனமொழியே வல்லவர் தம்மிடர் திடமொழியே.
|
12
|
Other song(s) from this location: திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி
)
|
1.063
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.090
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.127
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.128
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) )
|
2.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
Tune - சீகாமரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.056
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.067
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|