சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.112   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பல்லவனீச்சரம் - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=F5-uumlzpkA   Add audio link Add Audio

பரசுபாணியர் பாடல்வீணையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தரசுபேணி நின்றார் இவர்தன்மை யறிவாரார்.

1

பட்டநெற்றியர் நட்டமாடுவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திட்டமா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

2

பவளமேனியர் திகழுநீற்றினர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தழகரா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

3

பண்ணில்யாழினர் பயிலுமொந்தையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தண்ணலா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

4

பல்லிலோட்டினர் பலிகொண்டுண்பவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தெல்லியாட் டுகந்தார் இவர்தன்மை யறிவாரார்.

5
Go to top

பச்சைமேனியர் பிச்சைகொள்பவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திச்சையா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

6

பைங்கணேற்றினர் திங்கள்சூடுவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தெங்குமா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

7

பாதங்கைதொழ வேதமோதுவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தாதியா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

8

படிகொண்மேனியர் கடிகொள்கொன்றையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தடிகளா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

9

பறைகொள்பாணியர் பிறைகொள்சென்னியர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திறைவரா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

10
Go to top

வானமாள்வதற் கூனமொன்றிலை மாதர்பல்லவ னீச்சரத்தானை
ஞானசம்பந்தன் நற்றமிழ் சொல்லவல்லவர் நல்லவரே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பல்லவனீச்சரம்
1.065   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அடையார் தம் புரங்கள் மூன்றும்
Tune - தக்கேசி   (திருப்பல்லவனீச்சரம் பல்லவனேசர் சவுந்தராம்பிகையம்மை)
3.112   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பரசு பாணியர், பாடல் வீணையர்,
Tune - பழம்பஞ்சுரம்   (திருப்பல்லவனீச்சரம் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000