வரமதேகொளா வுரமதேசெயும் புரமெரித்தவன் பிரமநற்புரத் தரனனாமமே பரவுவார்கள்சீர் விரவுநீள் புவியே.
|
1
|
சேணுலாமதில் வேணுமண்ணுளோர் காணமன்றலார் வேணுநற்புரத் தாணுவின்கழல் பேணுகின்றவ ராணியொத் தவரே.
|
2
|
அகலமார்தரைப் புகலுநான் மறைக் கிகலியோர்கள்வாழ் புகலிமாநகர்ப் பகல்செய்வோனெதிர்ச் சகலசேகர னகிலநா யகனே.
|
3
|
துங்கமாகரி பங்கமாவடுஞ் செங்கையானிகழ் வெங்குருத்திகழ் அங்கணானடி தங்கையாற்றொழத் தங்குமோ வினையே.
|
4
|
காணியொண்பொருட் கற்றவர்க்கீகை யுடைமையோரவர் காதல்செய்யுநற் றோணிவண்புரத் தாணியென்பவர் தூமதி யினரே.
|
5
|
Go to top |
ஏந்தராவெதிர் வாய்ந்தநுண்ணிடைப் பூந்தணோதியாள் சேர்ந்தபங்கினன் பூந்தராய்தொழு மாந்தர் மேனிமேற் சேர்ந்திரா வினையே.
|
6
|
சுரபுரத்தினைத் துயர்செய்தாரகன் துஞ்சவெஞ்சினக் காளியைத்தருஞ் சிரபுரத்துளா னென்னவல்லவர் சித்திபெற் றவரே.
|
7
|
உறவுமாகியற் றவர்களுக்குமா நெதிகொடுத்துநீள் புவியிலங்குசீர்ப் புறவமாநகர்க் கிறைவனேயெனத் தெறகிலா வினையே.
|
8
|
பண்புசேரிலங் கைக்குநாதனன் முடிகள்பத்தையுங் கெடநெரித்தவன் சண்பையாதியைத் தொழுமவர்களைச் சாதியா வினையே.
|
9
|
ஆழியங்கையிற் கொண்டமாலய னறிவொணாததோர் வடிவுகொண்டவன் காழிமாநகர்க் கடவுணாமமே கற்றல்நற் றவமே.
|
10
|
Go to top |
விச்சையொன்றிலாச் சமணர்சாக்கியப் பிச்சர்தங்களைக் கரிசறுத்தவன் கொச்சைமாநகர்க் கன்புசெய்பவர் குணங்கள் கூறுமினே.
|
11
|
கழுமலத்தினுட் கடவுள்பாதமே கருதுஞானசம் பந்தனின்தமிழ் முழுதும்வல்லவர்க் கின்பமேதரு முக்கணெம் மிறையே.
|
12
|
Other song(s) from this location: திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி
)
|
1.063
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.090
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.127
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.128
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) )
|
2.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
Tune - சீகாமரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.056
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.067
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|