முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய பரசமர் படையுடை யீரே பரசமர் படையுடை யீருமைப் பரவுவார் அரசர்க ளுலகிலா வாரே.
|
1
|
மொய்குழ லாளொடு முதுகுன்ற மேவிய பையர வம்மசைத் தீரே பையர வம்மசைத் தீருமைப் பாடுவார் நைவிலர் நாடொறு நலமே.
|
2
|
முழவமர் பொழிலணி முதுகுன்ற மேவிய மழவிடை யதுவுடை யீரே மழவிடை யதுவுடை யீருமை வாழ்த்துவார் பழியொடு பகையிலர் தாமே.
|
3
|
முருகமர் பொழிலணி முதுகுன்ற மேவிய உருவமர் சடைமுடி யீரே உருவமர் சடைமுடி யீருமை யோதுவார் திருவொடு தேசினர் தாமே.
|
4
|
முத்தி தருமுயர் முதுகுன்ற மேவிய பத்து முடியடர்த் தீரே பத்து முடியடர்த் தீருமைப் பாடுவார் சித்தநல் லவ்வடி யாரே.
|
8
|
முயன்றவ ரருள்பெறு முதுகுன்ற மேவியன் றியன்றவ ரறிவரி யீரே இயன்றவ ரறிவரி யீருமை யேத்துவார் பயன்றலை நிற்பவர் தாமே.
|
9
|
மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய கட்டமண் டேரைக்காய்ந் தீரே கட்டமண் டேரைக்காய்ந் தீருமைக் கருதுவார் சிட்டர்கள் சீர்பெறு வாரே.
|
10
|
Go to top |
மூடிய சோலைசூழ் முதுகுன்றத் தீசனை நாடிய ஞானசம் பந்தன் நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ் பாடிய அவர்பழி யிலரே.
|
11
|
Other song(s) from this location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.012
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மத்தா வரை நிறுவி, கடல்
Tune - நட்டபாடை
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.053
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை
Tune - பழந்தக்கராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.093
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நின்று மலர் தூவி, இன்று
Tune - குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.131
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
2.064
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
Tune - காந்தாரம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்ண மா மலர் கொடு
Tune - கொல்லி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.099
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முரசு அதிர்ந்து எழுதரு முது
Tune - சாதாரி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
6.068
திருநாவுக்கரசர்
தேவாரம்
கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
Tune - திருத்தாண்டகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.025
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
Tune - நட்டராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.043
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நஞ்சி, இடை இன்று நாளை
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|