படியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர் பொடிகொண்மா மேனியர் பூதமார் படையினர் பூணநூலர் கடிகொண்மா மலரிடு மடியினர் பிடிநடை மங்கையோடும் அடிகளா ரருள்புரிந் திருப்பிட மம்பர்மா காளந்தானே.
|
1
|
கையின்மா மழுவினர் கடுவிட முண்டவெங் காளகண்டர் செய்யமா மேனிய ரூனம ருடைதலைப் பலிதிரிவார் வையமார் பொதுவினின் மறையவர் தொழுதெழ நடமதாடும் ஐயன்மா தேவியோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.
|
2
|
பரவின வடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார்பால் கரவினர் கனலன வுருவினர் படுதலைப் பலிகொடேகும் இரவினர் பகலெரி கானிடை யாடிய வேடர்பூணும் அரவின ரரிவையோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.
|
3
|
நீற்றினர் நீண்டவார் சடையினர் படையினர் நிமலர்வெள்ளை ஏற்றின ரெரிபுரி கரத்தினர் புரத்துளா ருயிரைவவ்வும் கூற்றினர் கொடியிடை முனிவுற நனிவருங் குலவுகங்கை ஆற்றின ரரிவையோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.
|
4
|
புறத்தின ரகத்துளர் போற்றிநின் றழுதெழு மன்பர்சிந்தைத் திறத்தின ரறிவிலாச் செதுமதித் தக்கன்றன் வேள்விசெற்ற மறத்தினர் மாதவர் நால்வருக் காலின்கீ ழருள்புரிந்த அறத்தின ரரிவையோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.
|
5
|
Go to top |
பழகமா மலர்பறித் திண்டைகொண் டிறைஞ்சுவார் பாற்செறிந்த குழகனார் குணம்புகழ்ந் தேத்துவா ரவர்பலர் கூடநின்ற கழகனார் கரியுரித் தாடுகங் காளர்நங் காளியேத்தும் அழகனா ரரிவையோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.
|
6
|
சங்கவார் குழையினர் தழலன வுருவினர் தமதருளே எங்குமா யிருந்தவ ரருந்தவ முனிவருக் களித்துகந்தார் பொங்குமா புனல்பரந் தரிசிலின் வடகரை திருத்தம்பேணி அங்கமா றோதுவா ரிருப்பிட மம்பர்மா காளந்தானே.
|
7
|
பொருசிலை மதனனைப் பொடிபட விழித்தவர் பொழிலிலங்கைக் குரிசிலைக் குலவரைக் கீழுற வடர்த்தவர் கோயில்கூறில் பெருசிலை நலமணி பீலியோ டேலமும் பெருகநுந்தும் அரிசிலின் வடகரை யழகம ரம்பர்மா காளந்தானே.
|
8
|
வரியரா வதன்மிசைத் துயின்றவன் றானுமா மலருளானும் எரியரா வணிகழ லேத்தவொண் ணாவகை யுயர்ந்துபின்னும் பிரியரா மடியவர்க் கணியராய்ப் பணிவிலா தவருக்கென்றும் அரியரா யரிவையோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.
|
9
|
சாக்கியக் கயவர்வன் றலைபறிக் கையரும் பொய்யினானூல் ஆக்கிய மொழியவை பிழையவை யாதலில் வழிபடுவீர் வீக்கிய வரவுடைக் கச்சையா னிச்சையா னவர்கட்கெல்லாம் ஆக்கிய வரனுறை யம்பர்மா காளமே யடை மினீரே.
|
10
|
Go to top |
செம்பொன்மா மணிகொழித் தெழுதிரை வருபுன லரிசில்சூழ்ந்த அம்பர்மா காளமே கோயிலா வணங்கினோ டிருந்தகோனைக் கம்பினார் நெடுமதிற் காழியுண் ஞானசம் பந்தன்சொன்ன நம்பிநாண் மொழிபவர்க் கில்லையாம் வினைநலம் பெறுவர்தாமே.
|
11
|