சங்கமரு முன்கைமட மாதையொரு பாலுடன் விரும்பி அங்கமுடன் மேலுறவ ணிந்துபிணி தீரவருள் செய்யும் எங்கள்பெரு மானிடமெ னத்தகுமு னைக்கடலின் முத்தந் துங்கமணி யிப்பிகள் கரைக்குவரு தோணிபுர மாமே.
|
1
|
சல்லரியி யாழ்முழவ மொந்தைகுழ றாளமதி யம்பக் கல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்து அல்லெரிகை யேந்திநட மாடுசடை யண்ணலிட மென்பர் சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே.
|
2
|
வண்டரவுகொன்றைவளர் புன்சடையின் மேன்மதியம் வைத்துப் பண்டரவு தன்னரையி லார்த்தபர மேட்டிபழி தீரக் கண்டரவ வொண்கடலி னஞ்சமமு துண்டகட வுள்ளூர் தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு தோணிபுர மாமே.
|
3
|
கொல்லைவிடை யேறுடைய கோவணவ னாவணவு மாலை ஒல்லையுடை யானடைய லாரரண மொள்ளழல் விளைத்த வில்லையுடை யான்மிக விரும்புபதி மேவிவளர் தொண்டர் சொல்லையடை வாகவிடர் தீர்த்தருள்செய் தோணிபுர மாமே.
|
4
|
தேயுமதி யஞ்சடையி லங்கிடவி லங்கன்மலி கானிற் காயுமடு திண்கரியி னீருரிவை போர்த்தவனி னைப்பார் தாயென நிறைந்ததொரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு தூயமறை யாளர்முறை யோதிநிறை தோணிபுர மாமே.
|
5
|
Go to top |
பற்றலர்த முப்புரமெ ரித்தடிப ணிந்தவர்கண் மேலைக் குற்றமதொ ழித்தருளு கொள்கையினன் வெள்ளின்முது கானிற் பற்றவனி சைக்கிளவி பாரிடம தேத்தநட மாடுந் துற்றசடை யத்தனுறை கின்றபதி தோணிபுர மாமே.
|
6
|
பண்ணமரு நான்மறையர் நூன்முறை பயின்றதிரு மார்பிற் பெண்ணமரு மேனியினர் தம்பெருமை பேசுமடி யார்மெய்த் திண்ணமரும் வல்வினைக டீரவருள் செய்தலுடை யானூர் துண்ணென விரும்புசரி யைத்தொழிலர் தோணிபுர மாமே.
|
7
|
தென்றிசையி லங்கையரை யன்றிசைகள் வீரம்விளை வித்து வென்றிசை புயங்களை யடர்த்தருளும் வித்தகனி டஞ்சீர் ஒன்றிசையி யற்கிளவி பாடமயி லாடவளர் சோலை துன்றுசெய வண்டுமலி தும்பிமுர றோணிபுர மாமே.
|
8
|
நாற்றமிகு மாமலரின் மேலயனு நாரணனு நாடி ஆற்றலத னான்மிகவ ளப்பரிய வண்ணமெரி யாகி ஊற்றமிகு கீழுலகு மேலுலகு மோங்கியெழு தன்மைத் தோற்றமிக நாளுமரி யானுறைவு தோணிபுர மாமே.
|
9
|
மூடுதுவ ராடையினர் வேடநிலை காட்டுமம ணாதர் கேடுபல சொல்லிடுவ ரம்மொழிகெ டுத்தடைவி னானக் காடுபதி யாகநட மாடிமட மாதொடிரு காதிற் றோடுகுழை பெய்தவர்த மக்குறைவு தோணிபுர மாமே.
|
10
|
Go to top |
துஞ்சிருளி னின்றுநட மாடிமிகு தோணிபுர மேய மஞ்சனைவ ணங்குதிரு ஞானசம் பந்தனசொல் மாலை தஞ்சமென நின்றிசைமொ ழிந்தவடி யார்கள்தடு மாற்றம் வஞ்சமிலர் நெஞ்சிருளு நீங்கியருள் பெற்றுவளர் வாரே.
|
11
|