என்றுமரி யானயல வர்க்கிய லிசைப்பொருள்க ளாகியெனதுள் நன்றுமொளி யானொளிசி றந்தபொன் முடிக்கடவு ணண்ணுமிடமாம் ஒன்றியம னத்தடியர் கூடியிமை யோர்பரவு நீடரவமார் குன்றுகணெ ருங்கிவிரி தண்டலை மிடைந்துவளர் கோகரணமே.
|
1
|
பேதைமட மங்கையொரு பங்கிட மிகுத்திடப மேறியமரர் வாதைபட வண்கடலெ ழுந்தவிட முண்டசிவன் வாழுமிடமாம் மாதரொடு மாடவர்கள் வந்தடி யிறைஞ்சிநிறை மாமலர்கடூய்க் கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல் கின்றவளர் கோகரணமே.
|
2
|
முறைத்திறமு றப்பொருடெரிந்துமுனி வர்க்கருளி யாலநிழல்வாய் மறைத்திற மறத்தொகுதி கண்டுசம யங்களைவ குத்தவனிடம் துறைத்துறை மிகுத்தருவி தூமலர் சுமந்துவரை யுந்திமதகைக் குறைத்தறை யிடக்கரி புரிந்திடறு சாரன்மலி கோகரணமே.
|
3
|
இலைத்தலை மிகுத்தபடை யெண்கரம் விளங்கவெரி வீசிமுடிமேல் அலைத்தலை தொகுத்தபுனல் செஞ்சடையில் வைத்தவழ கன்றனிடமாம் மலைத்தலை வகுத்தமுழை தோறுமுழை வாளரிகள் கேழல்களிறு கொலைத்தலை மடப்பிடிகள் கூடிவிளை யாடிநிகழ் கோகரணமே.
|
4
|
தொடைத்தலை மலைத்திதழி துன்னிய வெருக்கலரி வன்னிமுடியின் சடைத்தலை மிலைச்சியத போதனனெ மாதிபயில் கின்றபதியாம் படைத்தலை பிடித்துமற வாளரொடு வேடர்கள் பயின்றுகுழுமிக் குடைத்தலை நதிப்படிய நின்றுபழி தீரநல்கு கோகரணமே.
|
5
|
Go to top |
நீறுதிரு மேனிமிசை யாடிநிறை வார்கழல் சிலம்பொலிசெய ஏறுவிளை யாடவிசை கொண்டிடு பலிக்குவரு மீசனிடமாம் ஆறுசம யங்களும்வி ரும்பியடி பேணியர னாகமமிகக் கூறுமனம் வேறிரதி வந்தடியர் கம்பம்வரு கோகரணமே.
|
6
|
கல்லவட மொந்தைகுழ றாளமலி கொக்கரைய ரக்கரைமிசை பல்லபட நாகம்விரி கோவணவ ராளுநக ரென்பரயலே நல்லமட மாதரர னாமமு நவிற்றிய திருத்தமுழுகக் கொல்லவிட நோயகல் தரப்புகல்கொ டுத்தருளு கோகரணமே.
|
7
|
வரைத்தல நெருக்கிய முருட்டிரு ணிறத்தவன வாய்களலற விரற்றலை யுகிர்ச்சிறிது வைத்தபெரு மானினிது மேவுமிடமாம் புரைத்தலை கெடுத்தமுனி வாணர்பொலி வாகிவினை தீரவதன்மேல் குரைத்தலை கழற்பணிய வோமம்வில கும்புகைசெய் கோகரணமே.
|
8
|
வில்லிமையி னால்விற லரக்கனுயிர் செற்றவனும் வேதமுதலோன் இல்லையுள தென்றிகலி நேடவெரி யாகியுயர் கின்றபரனூர் எல்லையில் வரைத்தகடல் வட்டமு மிறைஞ்சிநிறை வாசமுருவக் கொல்லையி லிளங்குறவர் தம்மயிர் புலர்த்திவளர் கோகரணமே.
|
9
|
நேசமின் மனச்சமணர் தேரர்க ணிரந்தமொழி பொய்களகல்வித் தாசைகொண் மனத்தையடி யாரவர் தமக்கருளு மங்கணனிடம் பாசம தறுத்தவனி யிற்பெயர்கள் பத்துடைய மன்னனவனைக் கூசவகை கண்டுபி னவற்கருள்க ணல்கவல கோகரணமே.
|
10
|
Go to top |
கோடலர வீனும்விரி சாரன்மு னெருங்கிவளர் கோகரணமே ஈடமினி தாகவுறை வானடிகள் பேணியணி காழிநகரான் நாடிய தமிழ்க்கிளவி யின்னிசைசெய் ஞானசம் பந்தன்மொழிகள் பாடவல பத்தரவ ரெத்திசையு மாள்வர்பர லோகமெளிதே.
|
11
|