கரமுனம்மல ராற்புனன்மலர் தூவியேகலந் தேத்துமின் பரமனூர்பல பேரினாற்பொலி பத்தர்சித்தர்கள் தாம்பயில் வரமுன்னவ்வருள் செய்யவல்லவெம் மையனாடொறு மேயசீர்ப் பிரமனூர்பிர மாபுரத்துறை பிஞ்ஞகன்னருள் பேணியே.
|
1
|
விண்ணிலார்மதி சூடினான்விரும் பும்மறையவன் றன்றலை உண்ணநன்பலி பேணினானுல கத்துளூனுயி ரான்மலைப் பெண்ணினார்திரு மேனியான்பிர மாபுரத்துறை கோயிலுள் அண்ணலாரரு ளாளனாயமர் கின்றவெம்முடை யாதியே.
|
2
|
எல்லையில்புக ழாளனும்மிமை யோர்கணத்துடன் கூடியும் பல்லையார்தலை யிற்பலியது கொண்டுகந்த படிறனுந் தொல்லைவையகத் தேறுதொண்டர்கள் தூமலர்சொரிந் தேத்தவே மல்லையம்பொழி றேன்பில்கும்பிர மாபுரத்துறை மைந்தனே.
|
3
|
அடையலார்புரம் சீறியந்தண ரேத்தமாமட மாதொடும் பெடையெலாங்கடற் கானல்புல்கும்பிர மாபுரத்துறைகோயிலான் றொடையலார்நறுங் கொன்றையான்றொழி லேபரவிநின் றேத்தினால் இடையிலார்சிவ லோகமெய்துதற் கீதுகாரணங் காண்மினே.
|
4
|
வாயிடைம்மறை யோதிமங்கையர் வந்திடப்பலி கொண்டுபோய்ப் போயிடம்மெரி கானிடைப்புரி நாடகம்மினி தாடினான் பேயொடுங்குடி வாழ்வினான்பிர மாபுரத்துறை பிஞ்ஞகன் றாயிடைப்பொரு டந்தையாகுமென் றோதுவார்க்கரு டன்மையே.
|
5
|
Go to top |
ஊடினாலினி யாவதென்னுயர் நெஞ்சமேயுறு வல்வினைக் கோடிநீயுழல் கின்றதென்னழ லன்றுதன்கையி லேந்தினான் பீடுநேர்ந்தது கொள்கையான்பிர மாபுரத்துறை வேதியன் ஏடுநேர்மதி யோடராவணி யெந்தையொன்றுநின் றேத்திடே.
|
6
|
செய்யன்வெள்ளிய னொள்ளியார்சில ரென்றுமேத்தி நினைந்திட ஐயனாண்டகை யந்தணனரு மாமறைப்பொரு ளாயினான் பெய்யுமாமழை யானவன்பிர மாபுரமிடம் பேணிய வெய்யவெண்மழு வேந்தியைந்நினைந் தேத்துமின்வினை வீடவே.
|
7
|
கன்றொருக்கையி லேந்திநல்விள வின்கனிபட நூறியுஞ் சென்றொருக்கிய மாமறைப்பொரு டேர்ந்தசெம்மல ரோனுமாய் அன்றரக்கனைச் செற்றவன்னடி யும்முடியவை காண்கிலார் பின்றருக்கிய தண்பொழிற்பிர மாபுரத்தரன் பெற்றியே.
|
8
|
உண்டுடுக்கைவிட் டார்களும்முயர் கஞ்சிமண்டைகொள் தேரரும் பண்டடக்கு சொற்பேசும்அப்பரி வொன்றிலார்கள்சொற் கொள்ளன்மின் தண்டொடக்குவன் சூலமுந்தழன் மாமழுப்படை தன்கையிற் கொண்டொடுக்கிய மைந்தனெம்பிர மாபுரத்துறை கூத்தனே.
|
9
|
பித்தனைப்பிர மாபுரத்துறை பிஞ்ஞகன்கழல் பேணியே மெய்த்தவத்துநின் றோர்களுக்குரை செய்துநன்பொருண் மேவிட வைத்தசிந்தையுண் ஞானசம்பந்தன் வாய்நவின்றெழு மாலைகள் பொய்த்தவம்பொறி நீங்கஇன்னிசை போற்றிசெய்யுமெய்ம் மாந்தரே.
|
10
|
Go to top |
Other song(s) from this location: திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி
)
|
1.063
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.090
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.127
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.128
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) )
|
2.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
Tune - சீகாமரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.056
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.067
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|