நீடன் மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளை சூடன் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல் ஆடன் மேவுமவர் மேயவ னேகதங் காவதம் பாடன் மேவுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.
|
1
|
சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல் ஆல முண்டபெரு மான்ற னனேகதங் காவதம் நீல முண்டதடங் கண்ணுமை பாக நிலாயதோர் கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே.
|
2
|
செம்பி னாருமதின் மூன்றெரி யச்சின வாயதோர் அம்பி னாலெய்தருள் வில்லி யனேகதங் காவதம் கொம்பி னேரிடை யாளொடுங் கூடிக்கொல் லேறுடை நம்ப னாமநவி லாதன நாவென லாகுமே.
|
3
|
தந்தத் திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோய்ச் சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார் அந்த மில்லவள வில்ல வனேகதங் காவதம் எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே.
|
4
|
பிறையு மாசில்கதி ரோனறி யாமைப் பெயர்ந்துபோய் உறையுங் கோயில் பசும்பொன் னணியா ரசும்பார்புனல் அறையு மோசை பறைபோலு மனேகதங் காவதம் இறையெம் மீச னெம்மா னிடமாக வுகந்ததே.
|
5
|
Go to top |
தேனை யேறுநறு மாமலர் கொண்டடி சேர்த்துவீர் ஆனை யேறுமணி சார லனேகதங் காவதம் வானை யேறுநெறி சென்றுண ருந்தனை வல்லிரேல் ஆனை யேறுமுடி யானருள் செய்வதும் வானையே.
|
6
|
வெருவி வேழமிரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங் குருவி வீழவயி ரங்கொழி யாவகி லுந்திவெள் அருவி பாயுமணி சாரல னேகதங் காவதம் மருவி வாழும்பெரு மான்கழல் சேர்வது வாய்மையே.
|
7
|
ஈர மேதுமில னாகி யெழுந்த விராவணன் வீர மேதுமில னாக விளைத்த விலங்கலான் ஆரம் பாம்ப தணிவான்ற னனேகதங் காவதம் வார மாகிநினை வார்வினை யாயின மாயுமே.
|
8
|
கண்ணன் வண்ணமல ரானொடுங் கூடியோர்க் கையமாய் எண்ணும் வண்ணமறி யாமை யெழுந்ததோ ராரழல் அண்ண னண்ணுமணி சாரல னேகதங் காவதம் நண்ணும் வண்ணமுடை யார்வினை யாயின நாசமே.
|
9
|
மாப தம்மறி யாதவர் சாவகர் சாக்கியர் ஏப தம்பட நின்றிறு மாந்துழல் வார்கள்தாம் ஆப தம்மறி வீருளி ராகில னேகதங் காப தம்மமர்ந் தான்கழல் சேர்தல் கருமமே.
|
10
|
Go to top |
தொல்லையூ ழிப்பெயர் தோன்றிய தோணிபு ரத்திறை நல்லகேள் வித்தமிழ் ஞானசம் பந்தனல் லார்கண்முன் அல்லல் தீரவுரை செய்த வனேகதங் காவதம் சொல்ல நல்லவடை யும்மடை யாசுடு துன்பமே.
|
11
|