வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும் ஒண்டரங்க விசைபாடு மளியரசே யொளிமதியத் துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும் பண்டரங்கர்க் கென்னிலைமை பரிந்தொருகாற் பகராயே.
|
1
|
எறிசுறவங் கழிக்கான லிளங்குருகே யென்பயலை அறிவுறா தொழிவதுவு மருவினையேன் பயனன்றே செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும் வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே.
|
2
|
பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக் கண்பகத்தின் வாரணமே கடுவினையே னுறுபயலை செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும் பண்பனுக்கென் பரிசுரைத்தாற் பழியாமோ மொழியாயே.
|
3
|
காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற் பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர் சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும் ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய வுணர்த்தாயே.
|
4
|
பாராரே யெனையொருகாற் றொழுகின்றேன் பாங்கமைந்த காராருஞ் செழுநிறத்துப் பவளக்காற் கபோதகங்காள் தேராரு நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும் நீராருஞ் சடையாருக் கென்னிலைமை நிகழ்த்தீரே.
|
5
|
Go to top |
சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச வீற்றிருந்த வன்னங்காள் விண்ணோடு மண்மறைகள் தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் றுளங்காத கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே.
|
6
|
முன்றில்வாய் மடற்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை அன்றில்காள் பிரிவுறுநோ யறியாதீர் மிகவல்லீர் தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங் கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே.
|
7
|
பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி ஏனோர்க்கு மினிதாக மொழியுமெழி லிளங்குயிலே தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர் கோனாரை யென்னிடைக்கே வரவொருகாற் கூவாயே.
|
8
|
நற்பதங்கண் மிகவறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன் பொற்பமைந்த வாயலகிற் பூவைநல்லாய் போற்றுகின்றேன் சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும் விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே.
|
9
|
சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனொடுபால் முறையாலே யுணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந் துறையாருங் கடற்றோணி புரத்தீசன் றுளங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.
|
10
|
Go to top |
போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங் கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத் தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்த னுரைசெய்த சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே.
|
11
|