சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.069   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கருவிலிக்கொட்டிட்டை - திருக்குறுந்தொகை அருள்தரு சர்வாங்கநாயகியம்மை உடனுறை அருள்மிகு சற்குணநாதர் திருவடிகள் போற்றி
இந்த தலம் வீழிமிழலை தலத்திற்கு வடமேற்கில் உள்ள தலம். .பூந்தோட்டத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கும்பகோணத்திலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள தலம்.. தற்போது கருவேலி என்று அழைக்கப்படுகின்றது. தலத்து பெருமானை வழிபடும் அடியார்கள், மறுபடியும் கருப்பையினில் புகாத வண்ணம் இறைவன் காப்பதால் கருவிலி என்ற பெயர் வந்ததாகவும் நாளடைவில் கருவேலி என்று மருவியதாகவும் கூறுவார்கள். தலத்தின் பெயர் கருவிலி; திருக்கோயிலின் பெயர் கொட்டிட்டை; இரண்டையும் இணைத்து கருவிலிக் கொட்டிட்டை என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தில் குறிப்பிடுகின்றார். அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகம் ஒன்று மட்டும், இந்த தலத்திற்கு உரிய தேவாரப் பதிகமாக நமக்கு கிடைத்துள்ளது.
சுகப்பிரசவம் இனிதே நடைபெற ஓத வேண்டிய பதிகம்
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=0TIw1JgVkQw   Add audio link Add Audio

மட்டு இட்ட(க்) குழலார் சுழலில் வலைப்
பட்டிட்டு(ம்) மயங்கிப் பரியாது, நீர்,
கட்டிட்ட(வ்) வினை போகக் கருவிலிக்
கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே!

1

ஞாலம் மல்கு மனிதர்காள்! நாள்தொறும்
ஏல மா மலரோடு இலை கொண்டு, நீர்,
காலனார் வருதல் முன், கருவிலி,
கோல வார் பொழில், கொட்டிட்டை சேர்மினே!

2

பங்கம் ஆயின பேசப் பறைந்து, நீர்,
மங்குமா நினையாதே, மலர்கொடு,
கங்கை சேர் சடையான்தன் கருவிலி,
கொங்கு வார் பொழில், கொட்டிட்டை சேர்மினே!

3

வாடி நீர் வருந்தாதே,- மனிதர்காள்!-
வேடனாய் விசயற்கு அருள்செய்த வெண்-
காடனார் உறைகின்ற கருவிலி,
கோடு நீள் பொழில், கொட்டிட்டை சேர்மினே!

4

உய்யும் ஆறு இது கேண்மின்: உலகத்தீர்!
பை கொள் பாம்பு அரையான், படை ஆர் மழுக்
கையினான், உறைகின்ற கருவிலி,
கொய்கொள் பூம்பொழில், கொட்டிட்டை சேர்மினே!

5
Go to top

ஆற்றவும்(ம்) அவலத்து அழுந்தாது, நீர்,
தோற்றும் தீயொடு, நீர், நிலம், தூ வெளி,
காற்றும், ஆகி நின்றான் தன் கருவிலி,
கூற்றம் காய்ந்தவன், கொட்டிட்டை சேர்மினே!

6

நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப்
பொல்லா ஆறு செயப் புரியாது, நீர்,
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி,
கொல் ஏறு ஊர்பவன், கொட்டிட்டை சேர்மினே!

7

பிணித்த நோய்ப்பிறவிப் பிரிவு எய்தும் ஆறு
உணர்த்தல் ஆம்; இது கேண்மின்; உருத்திர-
கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி,
குணத்தினான் உறை, கொட்டிட்டை சேர்மினே!

8

நம்புவீர்; இது கேண்மின்கள்: நாள்தொறும்
எம்பிரான்! என்று இமையவர் ஏத்தும் ஏ-
கம்பனார் உறைகின்ற கருவிலி,
கொம்பு அனார் பயில், கொட்டிட்டை சேர்மினே!

9

பார் உளீர்! இது கேண்மின்: பருவரை
பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன்,
கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி,
கூர் கொள் வேலினன், கொட்டிட்டை சேர்மினே!

10
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கருவிலிக்கொட்டிட்டை
5.069   திருநாவுக்கரசர்   தேவாரம்   மட்டு இட்ட(க்) குழலார் சுழலில்
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கருவிலிக்கொட்டிட்டை சற்குணநாதர் சர்வாங்கநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000