விச்சுக் கலமுண்டு வேலிச்செய் ஒன்றுண்டு உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது அச்சங்கெட் டச்செய் அறுத்துண்ண மாட்டாதார் இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.
|
1
|
பிச்சைய தேற்றான் பிரமன் தலையினில் பிச்சைய தேற்றான் பிரியா தறஞ்செய்யப் பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப் பிச்சைய தேற்றான் பிரான்பர மாகவே.
|
2
|
பரந்துல கேழும் படைத்த பிரானை `இரந்துணி` என்பர் எற்றுக் கிரக்கும் நிரந்தர மாக நினையும் அடியார் இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே.
|
3
|
வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன் தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம் பொரஇருந் தான் புகலே புகலாக அரவிருந் தால்`அறி யான்`என்பது ஆமே
|
4
|
அங்கார் பசியும் அவாவும் வெகுளியும் தங்கார் சிவனடி யார்சரீ ரத்திடைப் பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும் தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.
|
5
|
| Go to top |
மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும் கையகம் நீட்டார் கடைத்தலைக் கேசெல்லார் ஐயம் புகாமல் இருந்த தவசியர் வையக மெல்லாம் வரஇருந் தாரே. 17,
|
6
|