பாவ மும்பழி பற்றற வேண்டுவீர் ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல் மேவ ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின் காவ லாளன் கலந்தருள் செய்யுமே.
|
1
|
கங்கை யாடிலென் காவிரி யாடிலென் கொங்கு தண்கும ரித்துறை யாடிலென் ஒங்கு மாகட லோதநீ ராடிலென் எங்கு மீச னெனாதவர்க் கில்லையே.
|
2
|
பட்ட ராகிலென் சாத்திரங் கேட்கிலென் இட்டு மட்டியு மீதொழில் பூணிலென் எட்டு மொன்று மிரண்டு மறியிலென் இட்ட மீச னெனாதவர்க் கில்லையே.
|
3
|
வேத மோதிலென் வேள்விகள் செய்யிலென் நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென் ஓதி யங்கமோ ராறு முணரிலென் ஈச னையுள்கு வார்க்கன்றி யில்லையே.
|
4
|
காலை சென்று கலந்துநீர் மூழ்கிலென் வேலை தோறும் விதிவழி நிற்கிலென் ஆலை வேள்வி யடைந்தது வேட்கிலென் ஏல ஈசனென் பார்க்கன்றி யில்லையே.
|
5
|
| Go to top |
கான நாடு கலந்து திரியிலென் ஈன மின்றி யிரும்தவஞ் செய்யிலென் ஊனை யுண்ட லொழிந்துவான் நோக்கிலென் ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே.
|
6
|
கூட வேடத்த ராகிக் குழுவிலென் வாடி யூனை வருத்தித் திரியிலென் ஆடல் வேடத்த னம்பலக் கூத்தனைப் பாட லாளர்க்கல் லாற்பய னில்லையே.
|
7
|
நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென் குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென் சென்று நீரிற் குளித்துத் திரியிலென் என்று மீசனென் பார்க்கன்றி யில்லையே.
|
8
|
கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல் ஓடு நீரினை யோட்டைக் குடத்தட்டி மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே.
|
9
|
மற்று நற்றவஞ் செய்து வருந்திலென் பொற்றை யுற்றெடுத் தானுடல் புக்கிறக் குற்ற நற்குரை யார்கழற் சேவடி பற்றி லாதவர்க் குப்பய னில்லையே.
|
10
|
| Go to top |