சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.067   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவாஞ்சியம் - திருக்குறுந்தொகை அருள்தரு வாழவந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு வாஞ்சியநாதர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=ovtRQxKv5ZE   Add audio link Add Audio

படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள்
உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம்
புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே. 

1

பறப்பை யும்பசு வும்படுத் துப்பல
திறத்த வும்முடை யோர்திக ழும்பதி
கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே. 

2

புற்றில் ஆடர வோடு புனல்மதி
தெற்று செஞ்சடைத் தேவர்பி ரான்பதி
சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க் குப்பாவ மில்லையே. 

3

அங்க மாறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்
செங்கண் மாலிட மார்திரு வாஞ்சியம்
தங்கு வார்நம் அமரர்க் கமரரே. 

4

நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை
ஆறு சூடும் அடிக ளுறைபதி
மாறு தானொருங் கும்வயல் வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க் குச்செல்வ மாகுமே. 

5
Go to top

அற்றுப் பற்றின்றி யாரையு மில்லவர்க்
குற்ற நற்றுணை யாவா னுறைபதி
தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
கற்றுச் சேர்பவர்க் குக்கருத் தாவதே.

6

இப்பாடல் கிடைக்கவில்லை.

7

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாஞ்சியம்
2.007   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு
Tune - இந்தளம்   (திருவாஞ்சியம் வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை)
5.067   திருநாவுக்கரசர்   தேவாரம்   படையும் பூதமும் பாம்பும் புல்வாய்
Tune - திருக்குறுந்தொகை   (திருவாஞ்சியம் வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை)
7.076   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொருவனார்; புரிநூலர்; புணர் முலை
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருவாஞ்சியம் சுகவாஞ்சிநாதர் வாழவந்தநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000