பாசமுங் கழிக்க கில்லா வரக்கரைப் படுத்துத் தக்க
வாசமிக் கலர்கள் கொண்டு மதியினான் மால்செய் கோயில்
நேசமிக் கன்பி னாலே நினைமினீர் நின்று நாளும்
தேசமிக் கானி ருந்த திருவிரா மேச்சு ரம்மே. |
1
|
முற்றின நாள்க ளென்று முடிப்பதே கார ண ம் மாய்
உற்றவன் போர்க ளாலே யுணர்விலா வரக்கர் தம்மைச்
செற்றமால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைப்
பற்றிநீ பரவு நெஞ்சே படர்சடை யீசன் பாலே. |
2
|
கடலிடை மலைக டம்மா லடைத்துமால் கரும முற்றித்
திடலிடைச் செய்த கோயிற் றிருவிரா மேச்சு ரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் தூய்மை யின்றி
உடலிடை நின்றும் பேரா வைவராட் டுண்டு நானே. |
3
|
குன்றுபோற் றோளு டைய குணமிலா வரக்கர் தம்மைக்
கொன்றுபோ ராழி யம்மால் வேட்கையாற் செய்த கோயில்
நன்றுபோ னெஞ்ச மேநீ நன்மையை யறிதி யாயில்
சென்றுநீ தொழுதுய் கண்டாய் திருவிரா மேச்சு ரம்மே. |
4
|
வீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்ட ரக்கன்
கூரமிக் கவனைச் சென்று கொன்றுடன் கடற்ப டுத்துத்
தீரமிக் கானி ருந்த திருவிரா மேச்சு ரத்தைக்
கோரமிக் கார்த வத்தாற் கூடுவார் குறிப்பு ளாரே. |
5
|
| Go to top |
ஆர்வல நம்மின் மிக்கா ரென்றவவ் வரக்கர் கூடிப்
போர்வலஞ் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்
தேர்வலஞ் செற்ற மால்செய் திருவிரா மேச்சு ரத்தைச்
சேர்மட நெஞ்ச மேநீ செஞ்சடை யெந்தை பாலே. |
6
|
வாக்கினா லின்பு ரைத்து வாழ்கிலார் தம்மை யெல்லாம்
போக்கினாற் புடைத்த வர்கள் உயிர்தனை யுண்டு மாறான்
தேக்குநீர் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தை
நோக்கினால் வணங்கு வார்க ணோய்வினை நுணுகு மன்றே. |
7
|
பலவுநா டீமை செய்து பார்தன்மேற் குழுமி வந்து
கொலைவிலார் கொடிய ராய வரக்கரைக் கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத்
தலையினால் வணங்கு வார்கள் தாழ்வராந் தவம தாமே. |
8
|
கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை யெல்லாம்
வீடவே சக்க ரத்தா லெறிந்துபின் னன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தை
நாடிவாழ் நெஞ்ச மேநீ நன்னெறி யாகு மன்றே. |
9
|
வன்கண்ணர் வாள ரக்கர் வாழ்வினை யொன்ற றியார்
புன்கண்ண ராகி நின்று போர்கள்செய் தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத்
தங்கணா லெய்த வல்லார் தாழ்வராந் தலைவன் பாலே. |
10
|
| Go to top |
வரைகளொத் தேயு யர்ந்த மணிமுடி யரக்கர் கோனை
விரையமுற் றறவொ டுக்கி மீண்டுமால் செய்த கோயில்
திரைகள்முத் தால்வ ணங்குந் திருவிரா மேச்சு ரத்தை
உரைகள்பத் தாலு ரைப்பா ருள்குவா ரன்பி னாலே. |
11
|