![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
கண்ணுத லானும்வெண் ணீற்றினா னுங்கழ லார்க்கவே சாம்பலோ டுந்தழ லாடினா னுஞ்சடை யின்மிசைப் கருப்புநல் வார்சிலைக் காமன்வே வக்கடைக் கண்டானும் அங்கையி லங்கழ லேந்தினா னும்அழ காகவே சாமநல் வேதனுந் தக்கன்றன் வேள்வித கர்த்தானும் இரவிடை யொள்ளெரி யாடினா னும்இமை யோர்தொழச் சேர்ப்பது திண்சிலை மேவினா னுந்திகழ் பாலன்மேல் கன்னெடு மால்வரைக் கீழரக் கன்னிடர் கண்டானும் பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழித் பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினைப் பேணாததோர் பூங்கமழ் கோதையோ டும்மிருந் தான்புக லிந்நகர்ப்
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=jAygpVU6KT8 Add audio link
3.007
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருப்புகலி -(சீர்காழி ) - காந்தாரபஞ்சமம் கனகாங்கி கேதார கெளளை கர்நாடக சுத்த சவேரி ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி
பண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ் சோதியும்
புண்ணிய நான்மறை யோர்களேத் தும்புக லிந்நகர்ப்
பெண்ணினல் லாளொடும் வீற்றிருந் தபெரு மானன்றே.
1
பாம்பினோ டும்மதி சூடினா னும்பசு வேறியும்
பூம்படு கல்லிள வாளைபா யும்புக லிந்நகர்க்
காம்பன தோளியொ டும்மிருந் தகட வுளன்றே.
2
மருப்புநல் லானையி னீருரி போர்த்தம ணாளனும்
பொருப்பன மாமணி மாடமோங் கும்புக லிந்நகர்
விருப்பினல் லாளொடும் வீற்றிருந் தவிம லனன்றே.
3
கங்கையைச் செஞ்சடை சூடினா னுங்கட லின்னிடைப்
பொங்கிய நஞ்சமு துண்டவ னும்புக லிந்நகர்
மங்கைநல் லாளொடும் வீற்றிருந் தமண வாளனே.
4
நாமநூ றாயிரஞ் சொல்லிவா னோர்தொழு நாதனும்
பூமல்கு தண்பொழின் மன்னுமந் தண்புக லிந்நகர்க்
கோமள மாதொடும் வீற்றிருந் தகுழ கனன்றே.
5
Go to top
செருவிடை முப்புரந் தீயெரித் தசிவ லோகனும்
பொருவிடை யொன்றுகந் தேறினா னும்புக லிந்நகர்
அரவிடை மாதொடும் வீற்றிருந் தவழ கனன்றே.
6
வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள் விப்புகை
போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக லிந்நகர்ப்
பார்ப்பதி யோடுடன் வீற்றிருந் தபர மனன்றே.
7
வின்னெடும் போர்விறல் வேடனா கிவிச யற்கொரு
பொன்னெடுங் கோல்கொடுத் தானுமந் தண்புக லிந்நகர்
அன்னமன் னந்நடை மங்கையொ டும்அமர்ந் தானன்றே.
8
தன்னையின் னானெனக் காண்பரி யதழற் சோதியும்
புன்னைபொன் றாதுதிர் மல்குமந் தண்புக லிந்நகர்
மின்னிடை மாதொடும் வீற்றிருந் தவிம லனன்றே.
9
தொண்டருங் காதல்செய் சோதியா யசுடர்ச் சோதியான்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக லிந்நகர்
வண்டமர் கோதையோ டும்மிருந் தமண வாளனே.
10
Go to top
பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ் பத்திவை
ஆங்கமர் வெய்திய வாதியா கவிசை வல்லவர்
ஓங்கம ராவதி யோர்தொழச் செல்வது முண்மையே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்புகலி -(சீர்காழி )
1.030
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விதி ஆய், விளைவு ஆய்,
Tune - தக்கராகம்
(திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.104
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.025
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உகலி ஆழ்கடல் ஓங்கு பார்
Tune - இந்தளம்
(திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.029
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும், பன்னிய
Tune - இந்தளம்
(திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.054
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம்
Tune - சீகாமரம்
(திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.122
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விடை அது ஏறி, வெறி
Tune - செவ்வழி
(திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.003
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இயல் இசை எனும் பொருளின்
Tune - கொல்லி
(திருப்புகலி -(சீர்காழி ) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)
3.007
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் நுதலானும், வெண் நீற்றினானும்,
Tune - காந்தாரபஞ்சமம்
(திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000