சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
வாரார் முலைமங் கையொடும் முடனாகி
ஏராரி ரும்பூ ளையிடங் கொண்டவீசன்
காரார் கடனஞ் சமுதுண் டகருத்தே.
|
1
|
தொழலார் கழலே தொழுதொண் டர்கள்சொல்லீர்
குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி
எழிலா ரிரும்பூ ளைஇடங் கொண்டவீசன்
கழல்தான் கரிகா னிடையா டுகருத்தே.
|
2
|
அன்பா லடிகை தொழுவீ ரறியீரே
மின்போன் மருங்குன் மடவா ளொடுமேவி
இன்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.
|
3
|
நச்சித் தொழுவீர் கணமக் கிதுசொல்லீர்
கச்சிப் பொலிகா மக்கொடி யுடன்கூடி
இச்சித் திரும்பூ ளையிடங் கொண்டவீசன்
உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே.
|
4
|
சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர்
நற்றாழ் குழனங் கையொடும் முடனாகி
எற்றே யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
புற்றா டரவோ டென்புபூண் டபொருளே.
|
5
|
| Go to top |
தோடார் மலர்தூய்த் தொழுதொண் டர்கள்சொல்லீர்
சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
ஈடாய் இரும்பூ ளையிடங் கொண்டவீசன்
காடார் கடுவே டுவனா னகருத்தே.
|
6
|
ஒருக்கும் மனத்தன் பருள்ளீ ரிதுசொல்லீர்
பருக்கை மதவே ழமுரித் துமையோடும்
இருக்கை இரும்பூ ளையிடங் கொண்டவீசன்
அரக்கன் னுரந்தீர்த் தருளாக் கியவாறே.
|
8
|
துயரா யினநீங் கித்தொழுந் தொண்டர்சொல்லீர்
கயலார் கருங்கண் ணியொடும் முடனாகி
இயல்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.
|
9
|
துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண் டர்கள்சொல்லீர்
பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி
இணையில் லிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே.
|
10
|
| Go to top |
எந்தை யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
சந்தம் பயில்சண் பையுண்ஞா னசம்பந்தன்
செந்தண் டமிழ்செப் பியபத் திவைவல்லார்
பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே.
|
11
|