சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் விடை
விடை     விடைத்த     விடையான்     விடையினர்,     விடையும்     விடையுடை     விடைபாய்     விடையவர்     விடையின்     விடையானை,     விடையவன்,     விடை,     விடைத்தவர்    
1.015   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடை ஆர் கொடி உடைய அணல், வீந்தார் வெளை எலும்பும்
உடையார், நறுமாலை சடை உடையார் அவர், மேய,
புடையே புனல் பாயும், வயல் பொழில் சூழ்ந்த, நெய்த்தானம்
அடையாதவர் என்றும் அமருலகம் அடையாரே.

1.031   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடை சேர் கொடி அண்ணல் விளங்கு, உயர் மாடக்
கடை சேர், கரு மென் குளத்து ஓங்கிய காட்டில்
குடை ஆர் புனல் மல்கு, குரங்கணில் முட்டம்
உடையான்; எனை ஆள் உடை எந்தை பிரானே.

1.041   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க, மெல்லிய திருவிரல் ஊன்றி,
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள்; அனல் அது ஆடும் எம் அண்ணல்
மடக்கொடி அவர்கள் வருபுனல் ஆட, வந்து இழி அரிசிலின் கரைமேல்
படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன்நகராரே.

1.051   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடை அமர்ந்து, வெண்மழு ஒன்று ஏந்தி, விரிந்து இலங்கு
சடை ஒடுங்க, தண் புனலைத் தாங்கியது என்னை கொள் ஆம்?
கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த,
தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய்! சோபுரம் மேயவனே!

1.093   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார்
படைஆயின சூழ, உடையார், உலகமே.

1.120   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும்,
அடித்தலத்தால் இறை ஊன்றி, மற்று அவனது
முடித்தலை தோள் அவை நெரிதர, முறைமுறை
அடர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே.

1.122   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடையினர், வெளியது ஒர் தலை கலன் என நனி
கடை கடை தொறு, பலி இடுக! என முடுகுவர்,
இடைவிடல் அரியவர் இடை மருது எனும் நகர்
உடையவர்; அடி இணை தொழுவது எம் உயர்வே.

1.135   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடையும் ஏறுவர்; வெண்பொடிப் பூசுவர்;
சடையில் கங்கை தரித்தவர்;
படை கொள் வெண்மழுவாளர் பராய்த்துறை
அடைய நின்ற அடிகளே.

2.016   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடையானை, மேல் உலகுஏழும் இப் பார் எலாம்
உடையானை, ஊழிதோறுஊழி உளதுஆய
படையானை, பண் இசை பாடு மணஞ்சேரி
அடைவானை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.

2.052   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண் காட்டை,
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா, வினைகள்; அமரலோகம் ஆள்வாரே.

2.061   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண் காட்டை,
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா, வினைகள்; அமரலோகம் ஆள்வாரே.

2.068   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடை நவிலும் கொடியானை, வெண்கொடி சேர்
நெடுமாடம்
கடை நவிலும் கடம்பூரில் காதலனை, கடல் காழி
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்,
படை நவில் பாடல், பயில்வார் பழியொடு பாவம் இலாரே.

2.083   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடை உடை அப்பன்; ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உருக் கொள் விமலன்;
சடை இடை வெள் எருக்கமலர், கங்கை, திங்கள், தக வைத்த சோதி; பதிதான்
மடை இடை அன்னம் எங்கும் நிறையப் பரந்து கமலத்து வைகும், வயல்சூழ்,
கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும் வளர்கின்ற, கொச்சைவயமே.

2.116   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடை அது ஏறி(வ்) விட அரவு அசைத்த விகிர்தர் அவர்,
படை கொள் பூதம்பல ஆடும் பரம் ஆயவர்,
உடை கொள் வேங்கை உரி தோல் உடையார்க்கு இடம்
ஆவது
கடை கொள் செல்வம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

2.122   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடை அது ஏறி, வெறி அக்கு அரவு ஆர்த்த விமலனார்,
படை அது ஆகப் பரசு தரித்தார்க்கு இடம் ஆவது
கொடையில் ஓவார், குலமும்(ம்) உயர்ந்த(ம்) மறையோர்கள் தாம்
புடை கொள் வேள்விப்புகை உம்பர் உலாவும் புகலியே.

3.011   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடை உடை வெல் கொடி ஏந்தினானும், விறல் பாரிடம்
புடை பட ஆடிய வேடத்தானும், புனவாயிலில்
தொடை நவில் கொன்றை அம் தாரினானும், சுடர் வெண்மழுப்
படை வலன் ஏந்திய, பால் நெய் ஆடும், பரமன் அன்றே!

3.014   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடை உடைக் கொடி வலன் ஏந்தி, வெண்மழுப்
படை உடைக் கடவுள் பைஞ்ஞீலி மேவலான்;
துடி இடைக் கலை அல்குலாள் ஓர்பாகமா,
சடை இடைப் புனல் வைத்த சதுரன் அல்லனே!

3.057   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடையவன், விண்ணும் மண்ணும் தொழ நின்றவன், வெண்மழுவாள
படையவன், பாய் புலித்தோல் உடை, கோவணம், பல்கரந்தைச்
சடையவன், சாமவேதன், சசி தங்கிய சங்க வெண்தோடு
உடையவ(ன்), ஊனம் இ(ல்)லி உறையும்(ம்) இடம்
ஒற்றியூரே.

3.062   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடை உயர் வெல்கொடியான்; அடி விண்ணொடு மண்ணும் எல்லாம்
புடைபட ஆடவல்லான்; மிகு பூதம் ஆர் பல் படையான்;
தொடை நவில் கொன்றையொடு, வன்னி, துன் எருக்கும், அணிந்த
சடையவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.

3.106   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விடை, ஒரு பால்; ஒரு பால் விரும்பு மெல்லியல்; புல்கியது ஓர்
சடை, ஒரு பால்; ஒருபால் இடம் கொள் தாழ்குழல் போற்று இசைப்ப,
நடை, ஒரு பால்; ஒருபால் சிலம்பு; நாளும் வலஞ்சுழி சேர்
அடை, ஒரு பால்; அடையாத செய்யும் செய்கை
அறியோமே!

4.024   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த,
சடையும் கொப்பளித்த திங்கள், சாந்தம் வெண் நீறு பூசி,
உடையும் கொப்பளித்த நாகம், உள்குவார் உள்ளத்து என்றும்
அடையும் கொப்பளித்த சீரார்-அதிகை வீரட்டனாரே.

4.056   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விடை தரு கொடியர் போலும்; வெண் புரி நூலர் போலும்;
படை தரு மழுவர் போலும்; பாய் புலித் தோலர் போலும்;
உடை தரு கீளர் போலும்; உலகமும் ஆவர் போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே.

4.094   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான்; இனி நமக்கு இங்கு
அடையா, அவலம்; அருவினை சாரா; நமனை அஞ்சோம்;
புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர்
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே?

4.111   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விடையும் விடைப் பெரும் பாகா! என் விண்ணப்பம்: வெம்மழுவாள்-
படையும், படை ஆய் நிரைத்த பல் பூதமும், பாய்புலித்தோல்-
உடையும், முடைத்தலைமாலையும், மாலைப் பிறை ஒதுங்கும்
சடையும், இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

5.006   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விடையும் ஏறுவர்; வெண் தலையில் பலி
கடைகள் தோறும் திரியும் எம் கண்ணுதல்;
உடையும் சீரை; உறைவது காட்டுஇடை;
அடைவர்போல், அரங்குஆக; ஆரூரரே.

6.036   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விடை ஏறி, வேண்டு உலகத்து இருப்பார் தாமே; விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே;
புடை சூழ் தேவர் குழாத்தார் தாமே; பூந்துருத்தி, நெய்த்தானம், மேயார் தாமே;
அடைவே புனல் சூழ் ஐயாற்றார் தாமே; அரக்கனையும் ஆற்றல் அழித்தார் தாமே;
படையாப் பல்பூதம் உடையார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

6.069   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விடையானை, விண்ணவர்கள் எண்ணத்தானை, வேதியனை, வெண்திங்கள் சூடும் சென்னிச்
சடையானை, சாமம் போல் கண்டத்தானை, தத்துவனை, தன் ஒப்பார் இல்லாதானை,
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை, அயில் கொள் சூலப்-
படையானை, பள்ளியின் முக்கூடலானை, பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.

6.079   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விடை ஏறிக் கடைதோறும் பலி கொள்வானை, வீரட்டம் மேயானை, வெண் நீற்றானை,
முடை நாறும் முதுகாட்டில் ஆடலானை,   முன்னானை, பின்னானை, அந் நாளானை,
உடை ஆடை உரி-தோலே உகந்தான் தன்னை, உமை இருந்த பாகத்துள் ஒருவன் தன்னை,
சடையானை, தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.

7.027   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
விடை ஆரும் கொடியாய்! வெறி ஆர் மலர்க் கொன்றையினாய்!
படை ஆர் வெண்மழுவா! பரம் ஆய பரம்பரனே!
கடி ஆர் பூம்பொழில் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
அடிகேள்! எம்பெருமான்! அடியேனையும், அஞ்சல்! என்னே!.

7.040   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
விடை அரவக் கொடி ஏந்தும் விண்ணவர் தம் கோனை, வெள்ளத்து மால் அவனும் வேத முதலானும்
அடி இணையும் திருமுடியும் காண அரிது ஆய சங்கரனை, தத்துவனை, தையல்  மடவார்கள்
உடை அவிழ, குழல் அவிழ, கோதை குடைந்து ஆட, குங்குமங்கள் உந்தி வரு    கொள்ளிடத்தின் கரை மேல்,
கடைகள் விடு வார் குவளைகளை வாரும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு    தொழுதேனே .

7.041   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
விடையும் கொடியும் சடையும் உடையாய்! மின் நேர் உருவத்து ஒளியானே!
கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னி மாடம் கலந்து, எங்கும்
புடையும் பொழிலும் புனலும் தழுவி, பூமேல்-திருமாமகள் புல்கி,
அடையும் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!.

7.086   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
விடையின் மேல் வருவானை; வேதத்தின் பொருளானை;
அடையில் அன்பு உடையானை; யாவர்க்கும் அறிய ஒண்ணா,
மடையில் வாளைகள் பாயும் வன் பார்த்தான் பனங்காட்டூர்,
சடையில் கங்கை தரித்தானை; சாராதார் சார்பு என்னே!

7.102   7 st/nd Thirumurai   Song # 1      
விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை குனிய வாங்கிப்
படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே! பரம யோகி!
கடைத்தலைப் புகுந்து நின்றோம்; கலிமறைக் காடு(ட்) அமர்ந்தீர்!
அடைத்திடும், கதவு தன்னை அப்படித் தாளி னாலே!

8.137   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
விடை விடாது உகந்த விண்ணவர் கோவே! வினையனேனுடைய மெய்ப் பொருளே!
முடை விடாது, அடியேன் மூத்து, அற மண் ஆய், முழுப் புழுக் குரம்பையில் கிடந்து,
கடைபடாவண்ணம் காத்து, எனை ஆண்ட கடவுளே! கருணை மா கடலே!
இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

10.213   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉல காக்கும்
கொடையுடை யான்குணம் எண்குண மாகும்
சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.

11.029   11 st/nd Thirumurai   Song # 92   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
விடைபாய் கொடுமையெண் ணாதுமே
லாங்கன்னி வேல்கருங்கண்
கடைபாய் மனத்திளங் காளையர்
புல்கொலி கம்பர்கச்சி
மடைபாய் வயலிள முல்லையின்
மான்கன்றொ டான்கன்றினம்
கடைபாய் தொறும்பதி மன்றில்
கடல்போற் கலந்தெழுமே.

12.110   12 st/nd Thirumurai   Song # 13   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
விடையவர் வீரட் டானம்
விரைந்துசென் றெய்தி என்னை
உடையவர் எம்மை யாளும்
ஒருவர்தம் பண்டா ரத்தில்
அடைவுற ஒடுக்கி யெல்லாம்
அயர்த்தெழும் அன்பு பொங்கச்
சடையவர் மலர்த்தாள் போற்றி
இருந்தனர் தமக்கொப் பில்லார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 70   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
விடையின் மேலவர் மலைமகள் வேண்ட
விரும்பு பூசனை மேவிவீற் றிருந்தே
இடைய றாஅறம் வளர்க்கும்வித் தாக
இகப ரத்திரு நாழிநெல் லளித்துக்
கடைய ராகியும் உயர்ந்தவ ராயுங்
காஞ்சி வாழ்பவர் தாஞ்செய்தீ வினையுந்
தடைப டாதுமெய்ந் நெறியடை வதற்காம்
தவங்க ளாகவும் உவந்தருள் செய்தார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88