சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வந்த
வந்த     வந்தியோடு     வந்தித்திருக்கும்     வந்தடி     வந்திடும்     வந்திடு     வந்துநின்     வந்திதனைக்     வந்தார்     வந்தாய்     வந்தமரர்     வந்தோர்     வந்தா     வந்தியான்     வந்திக்கண்     வந்தும்     வந்தஇப்     வந்துதிரு     வந்தெதிர்     வந்தபின்     வந்து     வந்தவ     வந்தழைத்த     வந்துதிருக்     வந்தவர்     வந்தமூ     வந்தணைந்த     வந்துற்ற     வந்துற்றெழு     வந்தணைந்து     வந்தொருவர்     வந்தெழும்மங்     வந்ததிருத்     வந்தடைந்த     வந்தி     வந்தவரை     வந்துமுன்     வந்திரு     வந்தித்     வந்துவளர்     வந்துமணி     வந்தணை     வந்தனை     வந்து,     வந்தான்    
1.062   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும்
சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அத்
தந்தைதனைச் சாடுதலும், சண்டீசன் என்று அருளி,
கொந்து அணவும் மலர் கொடுத்தான்-கோளிலி எம்பெருமானே.

1.066   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வந்தியோடு பூசை அல்லாப் போழ்தில் மறை பேசி,
சந்திபோதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய
அந்தி வண்ணன் தன்னை, அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல்
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே.

1.069   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வரு மேல் வினையோடு
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில்
முந்தி எழுந்த முழவின் ஓசை, முது கல் வரைகள் மேல்
அந்திப் பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

3.109   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வந்து மால் அயன் அவர் காண்பு அரியார்
வெந்த வெண் நீறு அணி மயேந்திரரும்;
கந்த வார்சடை உடைக் கயிலையாரும்;
அம் தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே.

5.011   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வந்தனை அடைக்கும்(ம்) அடித்தொண்டர்கள்
பந்தனை செய்து பாவிக்க நின்றவன்,
சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர்,
எம்தமை உடையார், இளங்கோயிலே.

5.071   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வந்து கேண்மின்: மயல் தீர் மனிதர்காள்!
வெந்தநீற்றன், விசயமங்கைப் பிரான்,
சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப்
பந்து ஆக்கி, உயக்கொளும்; காண்மினே!

5.086   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர்
உந்தி, ஓடி, நரகத்து இடாமுனம்,-
அந்தியின்(ன்) ஒளி தங்கும் வாட்போக்கியார்-
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே.

7.033   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வந்து சொல்லுமின், மூடனேனுக்கு! வல்லவா நினைந்து ஏத்துவீர்!
வந்த சாயினை அறிவரோ? தம்மை வாழ்த்தினார்கட்கு நல்லரோ?
புந்தியால் உரை கொள்வரோ? அன்றிப் பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ?
அன்றியே மிக அறவரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.

7.065   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வந்து ஓர் இந்திரன் வழிபட மகிழ்ந்து, வானநாடு நீ ஆள்க! என அருளி,
சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்திச் சகளி செய்து இறைஞ்சு அகத்தியர் தமக்குச்
சிந்து மா மணி அணி திருப் பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன்-
செந் தண் மா மலர்த் திருமகள் மருவும் செல்வத் தென் திரு நின்றியூரானே! .

7.070   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய்! வழி முதலே!
வெந்த வெண் பொடிப் பூச வல்லானே! வேடனாய் விசயற்கு அருள் புரிந்த
இந்துசேகரனே! இமையோர் சீர் ஈசனே! திரு ஆவடுதுறையுள்
அந்தணா! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

8.143   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வந்து, இமையோர்கள் வணங்கி ஏத்த, மாக் கருணைக் கடல் ஆய், அடியார்
பந்தனை விண்டு அற நல்கும், எங்கள் பரமன், பெருந்துறை ஆதி, அந் நாள்
உந்து திரைக் கடலைக் கடந்து, அன்று, ஓங்கு மதில் இலங்கை அதனில்,
பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே.

8.218   8 st/nd Thirumurai   Song # 11   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
வந்தாய் பவரையில் லாமயில்
   முட்டை இளையமந்தி
பந்தா டிரும்பொழிற் பல்வரை
   நாடன்பண் போஇனிதே
கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென்
   தில்லை தொழார்குழுப்போற்
சிந்தா குலமுற்றுப் பற்றின்றி
   நையுந் திருவினர்க்கே.

8.225   8 st/nd Thirumurai   Song # 12   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
வந்தான் வயலணி யூர
   னெனச்சின வாள்மலர்க்கண்
செந்தா மரைச்செல்வி சென்றசிற்
   றம்பல வன்னருளான்
முந்தா யினவியன் நோக்கெதிர்
   நோக்க முகமடுவிற்
பைந்தாட் குவளைகள் பூத்திருள்
   சூழ்ந்து பயின்றனவே.

10.100   10 st/nd Thirumurai   Song # 38   திருமூலர்   திருமந்திரம்  
வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத்
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

10.408   10 st/nd Thirumurai   Song # 88   திருமூலர்   திருமந்திரம்  
வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களும்
கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும்
வந்தனை செய்யும் வழிநவில் வீரே.

10.409   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
வந்திடும் ஆகாச ஆறது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்ப திராசியும்
வந்திடும் நாளது முந்நூற் றறுபதும்
வந்திடும் ஆண்டும் வகுத்துறை அவ்விலே.

10.720   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
வந்திடு பேத மெலாம் பரவிந்து
தந்திடும் மாமாயை வாகீசி தற்பரை
உந்து குடிலையோடு ஓம்உறு குண்டலி
விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே.

10.902   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
வந்த மரகத மாணிக்க ரேகைபோய்ச்
சந்தித் திடும்மொழி சற்குரு சன்மார்க்கம்
இந்த ரேகை இரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தரச் சோதியுட் சோதியும் ஆமே.

10.928   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
வந்துநின் றான்அடி யார்கட் கரும்பொருள்
இந்திர னாதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர்த துழனிஒன் றல்லது
அந்தர வானத்தின் அப்புற மாமே.

11.004   11 st/nd Thirumurai   Song # 22   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின்
சிந்தை யதுதெரிந்து காண்மினோ - வந்தோர்
இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
பிரானீர்உம் சென்னிப் பிறை.

11.007   11 st/nd Thirumurai   Song # 12   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை  
வந்தார் எதிர்சென்று நின்றேற்கு
ஒளிரும்வண் தார்தழைகள்
தந்தார் அவையொன்றும் மாற்றகில்
லேன் தக்கன் வேள்விசெற்ற
செந்தா மரைவண்ணன் தீர்த்தச்
சடையன் சிராமலைவாய்க்
கொந்தார் பொழிலணி நந்தா
வனத்துக் குளிர்புனத்தே.

11.008   11 st/nd Thirumurai   Song # 194   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும்
தந்தாய் இதுவோ தகவுஎன்று நொந்தாள்போல்

11.009   11 st/nd Thirumurai   Song # 31   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும் வார்சடைமேல்
கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல் - வந்தித்து
வால்உகுத்த வண்கயிலைக் கோமான் மணிமுடிமேல்
பால்உகுத்த மாணிக்குப் பண்டு.

11.009   11 st/nd Thirumurai   Song # 83   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
வந்தோர் அரக்கனார் வண்கயிலை மால்வரையைத்
தந்தோள் வலியினையே தாம்கருதி - அந்தோ
இடந்தார் இடந்திட் டிடார்க்கீழ் எலிபோற்
கிடந்தார் வலியெலாங் கெட்டு.

11.021   11 st/nd Thirumurai   Song # 20   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
வந்தா றலைக்கும் வலஞ்சுழி வானவ வானவர்தம்
அந்தார் மகுடத் தடுத்தபைம் போதில்அந் தேனுழக்கிச்
செந்தா மரைச்செல்வி காட்டும் திருவடிக் குஞ்செல்லுமே
எந்தாய் அடித்தொண்டர் ஒடிப் பிடித்திட்ட இன்மலரே.

11.022   11 st/nd Thirumurai   Song # 59   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
வந்தியான் சீறினும் வாழி மடநெஞ்சே
வந்தியா உள்ளத்து வைத்திராய் வந்தியாய்
நம்பரனை யாடும் நளிர்புன் சடையானை
நம்பரனை நாள்தோறும் நட்டு.

11.023   11 st/nd Thirumurai   Song # 36   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
வந்தார் வளைகழல்வார் வாடித் துகில்சோர்வார்
வந்தார் முலைமெலிவார் வார்குழல்கள் வந்தார்
சரிதருவார் பைங்கொன்றைத் தாராரைக் கண்டு
சரிதருவார் பைங்கொன்றத் தார்.

11.028   11 st/nd Thirumurai   Song # 9   பட்டினத்துப் பிள்ளையார்   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை  
வந்திக்கண் டாயடி யாரைக்கண்
டால்மற வாதுநெஞ்சே
சிந்திக்கண் டாயரன் செம்பொற்
கழல்திரு மாமருதைச்
சந்திக்கண் டாயில்லை யாயின்
நமன்தமர் தாங்கொடுபோய்
உந்திக்கண் டாய்நிர யத்துன்னை
வீழ்த்தி உழக்குவரே.

11.029   11 st/nd Thirumurai   Song # 21   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
வந்தும் மணம்பெறிற் பொன்னனை
யீர்மன்னும் ஏகம்பர்தம்
முந்தும் அருவிக் கயிலை
மலையுயர் தேனிழிச்சித்
தந்தும் மலர்கொய்தும் தண்தினை
மேயுங் கிளிகடிந்தும்
சிந்தும் புகர் மலை கைச்சுமிச்
சாரல் திரிகுவனே.

12.000   12 st/nd Thirumurai   Song # 101   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
வந்தஇப் பழியை மாற்றும்
வகையினை மறைநூல் வாய்மை
அந்தணர் விதித்த ஆற்றால்
ஆற்றுவ தறமே யாகில்
எந்தைஈ தறியா முன்னம்
இயற்றுவ னென்று மைந்தன்
சிந்தைவெந் துயரந் தீர்ப்பான்
திருமறை யவர்முன் சென்றான்.
12.000   12 st/nd Thirumurai   Song # 168   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
வந்துதிரு மாமறை மணத்தொழில் தொடங்கும்
பந்தரிடை நம்பியெதிர் பன்னுசபை முன்னின்று
இந்தமொழி கேண்மினெதிர் யாவர்களும் என்றான்
முந்தைமறை யாயிர மொழிந்த திருவாயான்.
12.000   12 st/nd Thirumurai   Song # 256   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
வந்தெதிர் கொண்டு வணங்கு வார்முன்
வன்றொண்டர் அஞ்சலி கூப்பி வந்து
சிந்தை களிப்புற வீதி யூடு
செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி
எந்தை யிருப்பதும் ஆரூ ரவர்
எம்மையு மாள்வரோ கேளீர் என்னும்
சந்த விசைப்பதி கங்கள்  பாடித்
தம்பெரு மான்திரு வாயில் சார்ந்தார்.
12.020   12 st/nd Thirumurai   Song # 20   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
வந்தபின் தொண்ட னாரும்
எதிர்வழி பாடு செய்து
சிந்தைசெய் தருளிற் றெங்கள்
செய்தவ மென்று நிற்ப
முந்தைநா ளுன்பால் வைத்த
மொய்யொளி விளங்கும் ஓடு
தந்துநில் என்றான் எல்லாந்
தான்வைத்து வாங்க வல்லான்.
12.030   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
வந்து தண்புகார் வணிகர்தம் மறுகின்
மருங்கி யற்பகை யார்மனை புகுத
எந்தை யெம்பிரான் அடியவர் அணைந்தார்
என்று நின்றதோர் இன்பஆ தரவால்
சிந்தை யன்பொடு சென்றெதிர் வணங்கிச்
சிறப்பின் மிக்கவர்ச் சனைகள்முன் செய்து
முந்தை யெம்பெருந் தவத்தினால் என்கோ
முனிவர் இங்கெழுந் தருளிய தென்றார்.
12.040   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
வந்தபின் மனைவி யாரும்
வாய்தலின் நின்று வாங்கிச்
சிந்தையில் விரும்பி நீரில்
சேற்றினை யலம்பி யூற்றி
வெந்தழல் அடுப்பின் மூட்ட
விறகில்லை யென்ன மேலோர்
அந்தமின் மனையில் நீடும்
அலக்கினை யறுத்து வீழ்த்தார்.
12.080   12 st/nd Thirumurai   Song # 21   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வந்தவ ரழைத்த தொண்டர்
தமைக்கண்டு வணங்கி உம்மை
இந்தவல் லிடும்பை செய்த
யானைஎங் குற்ற தென்ன
எந்தையார் சாத்தும் பூவை
என்கையில் பறித்து மண்மேல்
சிந்திமுன் பிழைத்துப் போகா
நின்றதித் தெருவே யென்றார்.
12.090   12 st/nd Thirumurai   Song # 13   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வந்தழைத்த மாற்றான்
வயப்புலிப்போத் தன்னார்முன்
நந்தமது வாட்பயிற்று
நற்றாயங் கொள்ளுங்கால்
இந்தவெளி மேற்கை
வகுத்திருவேம் பொருபடையும்
சந்தித் தமர்விளைத்தால்
சாயாதார் கொள்வதென.

12.100   12 st/nd Thirumurai   Song # 136   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வந்துதிரு மலையின்கண்
வானவர்நா யகர்மருங்கு
சிந்தைநிய மத்தோடும்  
செல்கின்றார் திருமுன்பு
வெந்தஇறைச் சியும்எலும்பும்
கண்டகல மிதித்தோடி
இந்தஅனு சிதங்கெட்டேன்
யார்செய்தார் என்றழிவார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 149   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வந்துதிருக் காளத்தி  
மலையேறி வனசரர்கள்
தந்தலைவ னார்இமையோர்  
தலைவனார் தமையெய்தி
அந்தணனார் பூசையினை
முன்புபோ லகற்றியபின்
முந்தைமுறை தம்முடைய
பூசனையின் செயல்முடிப்பார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 165   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வந்தவர் குருதி கண்டார்
மயங்கினார் வாயில் நன்னீர்
சிந்திடக் கையில் ஊனும்
சிலையுடன் சிதறி வீழக்
கொந்தலர் பள்ளித் தாமங்
குஞ்சிநின் றலைந்து சோரப்
பைந்தழை அலங்கல் மார்பர்  
நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார்.
12.120   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வந்தமூ தறிவோரை
மானக்கஞ் சாறனார்
முந்தைமுறை மையின்விரும்பி
மொழிந்தமணத் திறங்கேட்டே
எந்தமது மரபினுக்குத்
தகும்பரிசால் ஏயுமெனச்
சிந்தைமகிழ் வுறஉரைத்து
மணநேர்ந்து செலவிட்டார்.
12.120   12 st/nd Thirumurai   Song # 26   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வந்தணைந்த மாவிரத
முனிவரைக்கண் டெதிரெழுந்து
சிந்தைகளி கூர்ந்துமகிழ்
சிறந்தபெருந் தொண்டனார்
எந்தைபிரான் புரிதவத்தோர்
இவ்விடத்தே யெழுந்தருள
உய்ந்தொழிந்தேன் அடியேன்என்
றுருகியஅன் பொடுபணிந்தார்.
12.120   12 st/nd Thirumurai   Song # 35   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வந்தணைந்த ஏயர்குல
மன்னவனார் மற்றந்தச்
சிந்தைநினை வரியசெயல்
செறிந்தவர்பால் கேட்டருளிப்
புந்தியினில் மிகவுவந்து
புனிதனார் அருள்போற்றிச்
சிந்தைதளர்ந் தருள்செய்த
திருவாக்கின் திறங்கேட்டு.
12.150   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
வந்துற்ற பெரும்படை மண்புதை
யப்ப ரப்பிச்
சந்தப் பொதியில்தமிழ் நாடுடை
மன்னன் வீரம்
சிந்தச் செருவென்று தன்னாணை
செலுத்து மாற்றால்
கந்தப் பொழில்சூழ் மதுராபுரி
காவல் கொண்டான்.
12.150   12 st/nd Thirumurai   Song # 39   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
வந்துற்றெழு மங்கல மாந்தர்கள்
தம்மை நோக்கிச்
சிந்தைச்சிவ மேதெளி யுந்திரு
மூர்த்தி யார்தாம்
முந்தைச்செய லாம்அமண் போய்முதற்
சைவ மோங்கில்
இந்தப்புவி தாங்கிஇவ் வின்னர
சாள்வ னென்றார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 83   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
வந்த டைந்தவர் தம்முரு மாய
மற்று ளாரைத்தாங் காண்பிட முளது
சிந்தை யோகத்து முனிவர்யோ கினிகள்
சேரும் யோகபீ டமும்உள தென்றும்
அந்த மில்அறம் புரப்பவள் கோயில்
ஆன போகபீ டமும்உள தாகும்
எந்தை யார்மகிழ் காஞ்சிநீ டெல்லை
எல்லை யில்லன உள்ளஆ ரறிவார்.
12.200   12 st/nd Thirumurai   Song # 59   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
வந்து மிகைசெய் தாதைதாள்
மழுவால் துணித்த மறைச்சிறுவர்
அந்த உடம்பு தன்னுடனே
அரனார் மகனார் ஆயினார்
இந்த நிலைமை அறிந்தாரார்
ஈறி லாதார் தமக்கன்பு
தந்த அடியார் செய்தனவே
தவமா மன்றோ சாற்றுங்கால்.
12.210   12 st/nd Thirumurai   Song # 63   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வந்தணைந்து திலகவதி
யார்அடிமே லுறவணங்கி
நந்தமது குலஞ்செய்த
நற்றவத்தின் பயன்அனையீர்
இந்தவுடல் கொடுஞ்சூலைக்
கிடைந்தடைந்தேன் இனிமயங்கா
துய்ந்துகரை யேறுநெறி
உரைத்தருளும் எனவுரைத்து.
12.210   12 st/nd Thirumurai   Song # 285   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வந்து சிவனார் திருமறைக்கா
டெய்தி மன்னு வேணுபுரி
அந்த ணாளர் தமக்கறிவித்
தவர்பால் எய்தி அடிவணங்கச்
சிந்தை மகிழ்ந்து தீதின்மை
வினவத் தீங்கும் முளவாமோ
இந்த உலகம் உயவந்தீர்
இருதாள் நினைவார்க் கென்றுரைப்பார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 362   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வந்து மற்றவர் மருங்குற
அணைந்துநேர் நின்று
நொந்து நோக்கிமற் றவர்எதிர்
நோக்கிட நுவல்வார்
சிந்தி இவ்வுறுப் பழிந்திட
வருந்திய திறத்தால்
இந்த வெங்கடத் தெய்திய
தென்என இசைத்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 395   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வந்தொருவர் அறியாமே
மறைத்தவடி வொடும்புகலி
அந்தணனார் ஏறியெழுந்
தருளிவரும் மணிமுத்தின்
சந்தமணிச் சிவிகையினைத்
தாங்குவா ருடன்தாங்கிச்
சிந்தைகளிப் புறவருவார்
தமையாருந் தெளிந்திலரால்.
12.240   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வந்தமூ தறிவோர்கள்
மணங்குறித்தம் மனைபுகுந்து
தந்தையாந் தனதத்தன்
தனைநேர்ந்து நீபயந்த
பைந்தொடியை நிதிபதிமைந்
தன்பரம தத்தனுக்கு
முந்தைமர பினுக்கேற்கும்
முறைமைமணம் புரிகென்றார்.
12.240   12 st/nd Thirumurai   Song # 44   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வந்தவர் அணைந்த மாற்றங்
கேட்டலும் வணிகன் தானும்
சிந்தையில் அச்சம் எய்திச்
செழுமணம் பின்பு செய்த
பைந்தொடி தனையுங் கொண்டு
பயந்தபெண் மகவி னோடும்
முந்துறச் செல்வேன் என்று
மொய்குழ லவர்பால் வந்தான்.
12.250   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வந்தணைந்த வாகீசர்
மந்தமா ருதசீதப்
பந்தருடன் அமுதமாந்
தண்ணீரும் பார்த்தருளிச்
சிந்தைவியப் புறவருவார்
திருநாவுக் கரசெனும்பேர்
சந்தமுற வரைந்ததனை
எம்மருங்குந் தாங்கண்டார்.
12.270   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வந்த கவலை மாற்றும்இனி
மாறா விளக்குப் பணிமாற
இந்த மருங்கில் குளத்துநீர்
முகந்து கொடுவந் தேற்றுமென
அந்தி மதியம் அணிந்தபிரான்
அருளால் எழுந்த மொழிகேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி
அடிகள் செய்வ தறிந்திலரால்.
12.270   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வந்து வணங்கி அரனெறியார்
மகிழுங் கோயில் வலங்கொண்டு
சிந்தை மகிழப் பணிந்தெழுந்து
புறம்பும் உள்ளுந் திருப்பணிகள்
முந்த முயன்று பகலெல்லாம்
முறையே செய்து மறையவனார்
அந்தி அமையத் தரியவிளக்
கெங்கும் ஏற்றி அடிபணிவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 81   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்தெழும்மங் கலமான
வானதுந் துபிமுழக்கும்
கந்தருவர் கின்னரர்கள்
கானவொலிக் கடல்முழக்கும்
இந்திரனே முதல்தேவர்
எடுத்தேத்தும் இசைமுழக்கும்
அந்தமில்பல் கணநாதர்
அரஎனுமோ சையின்அடங்க.
12.280   12 st/nd Thirumurai   Song # 111   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்ததிருத் தொண்டர்கட்கும் மல்குசெழு
மறையவர்க்கும் மற்று ளோர்க்கும்
சிந்தைமகிழ் வுறமலர்ந்து திருவமுது
முதலான சிறப்பின் செய்கை
தந்தம்அள வினில்விரும்புந் தகைமையினால்
கடனாற்றுஞ் சண்பை மூதூர்
எந்தைபிரான் சிவலோகம் எனவிளங்கி
எவ்வுலகும் ஏத்து நாளில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 211   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்து தோன்றிய அந்தணர் மாதவர்
கந்த வார்பொழில் காழிநன் னாடர்முன்
அந்த மில்சீர் அரத்துறை ஆதியார்
தந்த பேரருள் தாங்குவீர் என்றனர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 225   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்து கோபுர மணிநெடு
வாயில்சேய்த் தாகச்
சந்த நித்திலச் சிவிகைநின்
றிழிந்துதாழ்ந் தெழுந்து
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும்
பொங்கிமுன் செல்ல
அந்தி நாண்மதி அணிந்தவர்
கோயிலுள் அடைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 301   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்தணைந்து திருத்தொண்டர் மருங்குவர
மானேந்து கையர் தம்பால்
நந்திதிரு வருள்பெற்ற நன்னகரை
முன்னிறைஞ்சி நண்ணும் போதில்
ஐந்துபுலன் நிலைகலங்கும்இடத்தஞ்சல்
என்பார்தம் ஐயா றென்று
புந்திநிறை செந்தமிழின் சந்தஇசை
போற்றிசைத்தார் புகலி வேந்தர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 372   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்து பந்தர்மா தவிமணங்
கமழ்கரு காவூர்ச்
சந்த மாமறை தந்தவர்
கழலிணை தாழ்ந்தே
அந்த மில்லவர் வண்ணம்ஆர்
அழல்வண்ணம் என்று
சிந்தை இன்புறப் பாடினார்
செழுந்தமிழ்ப் பதிகம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 408   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்தணைந்து திருக்கீழ்க்கோட்
டத்திருந்த வான்பொருளைச்
சிந்தைமகிழ் வுறவணங்கித்
திருத்தொண்ட ருடன்செல்வார்
அந்தணர்கள் புடைசூழ்ந்து
போற்றிசைப்ப அவரோடும்
கந்தமலர்ப் பொழில்சூழ்ந்த
காரோணஞ் சென்றடைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 419   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்த ணைந்தவர் தொழாமுனம்
மலர்புகழ்ச் சண்பை
அந்த ணர்க்கெலாம் அருமறைப்
பொருளென வந்தார்
சந்த நித்திலச் சிவிகைநின்
றிழிந்தெதிர் தாழ்ந்தே
சிந்தை இன்புற இறைவர்தங்
கோயில்முன் சென்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 477   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்தடைந்த சிறுமறையோன் உயிர்மேற் சீறி
வருங்காலன் பெருங்கால வலயம் போலும்
செந்தறுகண் வெள்ளெயிற்றுக் கரிய கோலம்
சிதைந்துருள வுதைத்தருளுஞ் செய்ய தாளா
இந்தவிடக் கொடுவேகம் நீங்கு மாறும்
12.280   12 st/nd Thirumurai   Song # 507   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்தி றைஞ்சு மெய்த் தொண்டர்தங்
குழாத்தெதிர் வணங்கிச்
சந்த முத்தமிழ் விரகராம்
சண்பையர் தலைவர்
அந்த மாயுல காதியாம்
பதிகமங் கெடுத்தே
எந்தை தானெனை ஏன்றுகொ
ளுங்கொல்என் றிசைத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 541   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்துதிரு வீழி
மிழலை மறைவல்ல
அந்தணர்கள் போற்றிசைப்பத்
தாமும் மணிமுத்தின்
சந்தமணிச் சிவிகைநின்
றிழிந்து தாழ்ந்தருளி
உய்ந்த மறையோ
ருடன்அணைந்தங் குள்புகுவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 547   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்தணைந்து வாழ்ந்து
மதிற்புறத்தோர் மாமடத்துச்
செந்தமிழ்சொல் வேந்தரும்
செய்தவரும் சேர்ந்தருளச்
சந்தமணிக் கோபுரத்துச்
சார்ந்தவட பாற்சண்பை
அந்தணர்சூ ளாமணியார்
அங்கோர் மடத்தமர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 688   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்த அந்தணன் தன்னைநாம்
வலிசெய்து போக்கும்
சிந்தை யன்றிஅச் சிறுமறை
யோனுறை மடத்தில்
வெந்த ழற்பட விஞ்சைமந்
திரத்தொழில் விளைத்தால்
இந்த மாநகர் இடத்திரான்
ஏகும்என் றிசைத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 934   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்தணைந்த வாகீசர்
வண்புகலி வாழ்வேந்தர்
சந்தமணித் திருமுத்தின்
சிவிகையினைத் தாங்கியே
சிந்தைகளிப் புறவருவார்
திருஞான சம்பந்தர்
புந்தியினில் வேறொன்று
நிகழ்ந்திடமுன் புகல்கின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1020   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்தணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து
மறைவாழ்வே சைவசிகா மணியே தோன்றும்
இந்தமலை காளனோ டத்தி தம்மில்
இகலிவழி பாடுசெய இறைவர்மேவும்
அந்தமில்சீர்க் காளத்தி மலையாம் என்ன
அவனிமேற் பணிந்தெழுந்தஞ் சலிமேற் கொண்டு
சிந்தைகளி மகிழ்ச்சிவரத் திருவி ராகம்
வானவர்கள் தானவர்என் றெடுத்துச் செல்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1154   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்தவரை எதிர்கொண்டு
மனமகிழ்ந்து சண்பையர்கோன்
அந்தமில்சீர் அடியார்க
ளவரோடு மினிதமர்ந்து
சுந்தரவா ரணங்கினுடன்
றோணியில்வீற் றிருந்தாரைச்
செந்தமிழின் பந்தத்தால்
திருப்பதிகம் பலபாடி.
12.280   12 st/nd Thirumurai   Song # 1232   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்துமுன் னெய்தித் தாம்முன்
செய்தமா தவத்தின் நன்மை
நந்துநம் பாண்டார் நம்பி
ஞானபோ னகர்பொற் பாதம்
கந்தவார் குழலி னார்பொற்
கரகநீர் எடுத்து வார்ப்பப்
புந்தியால் நினைதி யானம்
புரிசடை யான்என் றுன்னி.
12.290   12 st/nd Thirumurai   Song # 55   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்து பரவைப் பிராட்டியார்
மகிழ வைகி மருவுநாள்
அந்த ணாரூர் மருங்கணிய
கோயில் பலவும் அணைந்திறைஞ்சிச்
சிந்தை மகிழ விருப்பினொடும்
தெய்வப் பெருமாள் திருவாரூர்
முந்தி வணங்கி யினிதிருந்தார்
முனைப்பா டியர்தங் காவலனார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 58   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்து நம்பி தம்மைஎதிர்
கொண்டு புக்கார் மற்றவருஞ்
சிந்தை மலர்ந்து திருவீழி
மிழலை யிறைஞ்சிச் சேண்விசும்பின்
முந்தை யிழிந்த மொய்யொளிசேர்
கோயில் தன்னை முன்வணங்கிப்
பந்த மறுக்குந் தம்பெருமான்
பாதம் பரவிப் பணிகின்றார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 139   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்திரு மாளிகையி
னுட்புகுந்து மங்கலவாழ்த்து
அந்தமிலா வகையேத்து
மளவிறந்தா ரொலிசிறப்பச்
சிந்தைநிறை மகிழ்ச்சியுடன்
சேயிழையா ருடனமர்ந்தார்
கந்தமலி மலர்ச்சோலை
நாவலர்தங் காவலனார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 183   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வந்தித் திறைவ ரருளாற்போய்
மங்கை பாகர் மகிழ்ந்தவிடம்
முந்தித் தொண்ட ரெதிர்கொள்ளப்
புக்கு முக்கட்பெருமானைச்
சிந்தித் திடவந் தருள்செய்கழல்
பணிந்து செஞ்சொல் தொடைபுனைந்தே
அந்திச் செக்கர்ப் பெருகொளியார்
அமருங் காஞ்சி மருங்கணைந்தார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
வந்துவளர் மூவாண்டில்
மயிர்வினைமங் கலஞ்செய்து
தந்தையா ரும்பயந்த
தாயாருந் தனிச்சிறுவர்
சிந்தைமலர் சொல்தெளிவில்
செழுங்கலைகள் பயிலத்தம்
பந்தமற வந்தவரைப்
பள்ளியினில் இருத்தினார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 37   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
வந்தணைந்து வினவுவார்
மாதவரே யாம்என்று
சந்தனமாந் தையலார்
முன்வந்து தாள்வணங்கி
அந்தமில்சீ ரடியாரைத்
தேடியவர் புறத்தணைந்தார்
எந்தமையா ளுடையவரே
அகத்துள்எழுந் தருளுமென.
12.360   12 st/nd Thirumurai   Song # 70   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
வந்து புகுந்து திருமனையின்
மனைவி யார்தாம் மாதவரை
முந்த எதிர்சென் றடிவணங்கி
முழுதும் அழகு செய்தமனைச்
சந்த மலர்மா லைகள்முத்தின்
தாம நாற்றித் தவிசடுத்த
கந்த மலரா சனங்காட்டிக்
கமழ்நீர்க் கரகம் எடுத்தேந்த.
12.360   12 st/nd Thirumurai   Song # 83   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
வந்த மகனைக் கடிதிற்கொண்
டமுது செய்விப் பான்வந்தார்
முந்த வேஅப் பயிரவராம்
முதல்வர் அங்கண் மறைந்தருளச்
சிந்தை கலங்கிக் காணாது
திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார்
வெந்த இறைச்சிக் கறியமுதுங்
கலத்திற் காணார் வெருவுற்றார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
வந்த மரபின் அரசளிப்பான்
வனஞ்சார் தவத்தின் மருவியபின்
சிந்தை மதிநூல் தேரமைச்சர்
சிலநாள் ஆய்ந்து தெளிந்தநெறி
முந்தை மரபின் முதல்வர்திருத்
தொண்டு முயல்வார் முதற்றாக
இந்து முடியார் திருவஞ்சைக்
களத்தில் அவர்பால் எய்தினார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 53   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
வந்து தில்லை மூதூரின்
எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்
அந்த ணாளர் தொண்டர்குழாம்
அணைந்த போதில் எதிர்வணங்கிச்
சந்த விரைப்பூந் திருவீதி
இறைஞ்சித் தலைமேற் கரமுகிழ்ப்பச்
சிந்தை மகிழ எழுநிலைக்கோ
புரத்தை யணைந்தார் சேரலனார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 64   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
வந்து சேரர் பெருமானார்
மன்னும் திருவா ரூர்எய்த
அந்த ணாளர் பெருமானும்
அரசர் பெருமான் வரப்பெற்றுச்
சிந்தை மகிழ எதிர்கொண்டு
சென்று கிடைத்தார் சேரலனார்
சந்த விரைத்தார் வன்றொண்டர்
முன்பு விருப்பி னுடன்தாழ்ந்தார்.
12.410   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
வந்துமணி மதிற்கருவூர்
மருங்கணைவார் வானவர்சூழ்
இந்திரன்வந் தமரர்புரி
எய்துவான் எனஎய்திச்
சிந்தைகளி கூர்ந்தரனார்
மகிழ்திருவா னிலைக்கோயில்
முந்துறவந் தணைந்திறைஞ்சி
மொய்யொளிமா ளிகைபுகுந்தார்.
12.530   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
வந்தணை வுற்ற மன்னர்
மலர்ந்தகற் பகத்தின் வாசப்
பைந்தளிர்ப் பூங்கொம் பொன்று
பார்மிசை வீழ்ந்த தென்ன
நொந்தழிந் தரற்று வாளை
நோக்கிஇவ் வண்டத் துள்ளோர்
இந்தவெவ் வினையஞ் சாதே
யார்செய்தார் என்னும் எல்லை.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4