சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மின்
மின்     மின்னிடை     மின்னியல்     மின்னுற்ற     மின்போலுஞ்     மின்ஆர்வான்     மின்னெடுங்     மின்களென்     மின்நலிக்     மின்னார்     மின்னு     மின்னார்செஞ்     மின்னும்மணி     மின்பொலிபன்     மின்நெ     மின்னொளிர்செஞ்     மின்னும்     மின்னின்     மின்னிய     மின்னனை,     மின்னானை,     மின்னங்     மின்றங்     மின்போல்     மின்றொத்     மின்றுன்    
1.108   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல
பொன் இயல் கொன்றையினான்; புனல் சூடி; பொற்பு அமரும்
அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி; நாளும்
பன்னிய பாடலினான்; உறை கோயில்-பாதாளே.

1.132   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மின் இயலும் மணி மாடம் மிடை வீழி மிழலையான் விரை ஆர்
பாதம்
சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் சிரபுரக் கோன்-செழுமறைகள்
  பயிலும் நாவன்,
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன்-பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி,
இன் இசையால் பாட வல்லார், இருநிலத்தில் ஈசன் எனும்
இயல்பினோரே.

2.063   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே,
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர்
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு,
பொன்னும் மணியும் பொரு தென் கரைமேல் புத்தூரே.

2.105   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மின் உலாவிய சடையினர், விடையினர், மிளிர்தரும்
அரவோடும்
பன் உலாவிய மறைஒலி நாவினர், கறை அணி கண்டத்தர்,
பொன் உலாவிய கொன்றை அம்தாரினர், புகழ் மிகு
கீழ்வேளூர்
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட, வீடு ஆமே.

3.011   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மின் இயல் செஞ்சடை வெண்பிறையன், விரி நூலினன்,
பன்னிய நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய்,
அன்னம் அன்ன(ந்) நடையாளொடும்(ம்) அமரும்(ம்) இடம்
புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே.

3.013   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மின் அன எயிறு உடை விரவலோர்கள் தம்
துன்னிய புரம் உகச் சுளிந்த தொன்மையர்
புன்னை அம்பொழில் அணி பூந்தராய் நகர்
அன்ன அன்ன(ந்) நடை அரிவை பங்கரே.

3.027   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மின்னின் ஆர் சடைமிசை விரி கதிர் மதியமும்,
பொன்னின் ஆர் கொன்றையும், பொறி கிளர் அரவமும்,
துன்னினார்; உலகு எலாம் தொழுது எழ நால்மறை
தன்னினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.

3.048   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகம் ஆய்
மன்னினான் உறை மா மழபாடியைப்
பன்னினார், இசையால் வழிபாடு செய்து
உன்னினார், வினை ஆயின ஓயுமே.

3.118   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மின்னிய அரவும், வெறிமலர்பலவும், விரும்பிய திங்களும், தங்கு
சென்னி அது உடையான், தேவர்தம் பெருமான்,
சேயிழையொடும் உறைவு இடம் ஆம்
பொன் இயல் மணியும், முரி கரிமருப்பும், சந்தமும், உந்து வன் திரைகள்
கன்னியர் ஆட, கடல் ஒலி மலியும் கழுமலநகர் எனல் ஆமே.

4.013   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மின் ஆனாய்! உரும் ஆனாய்! வேதத்தின் பொருள் ஆனாய்!
பொன் ஆனாய்! மணி ஆனாய்! பொரு கடல் வாய் முத்து ஆனாய்!
நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி
அன்னானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

4.088   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர் பால் மகிழ்ந்தான்,
என் நிறம்? என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார்
பொன் நிறம் மிக்க சடையவன், பூந்துருத்தி(ய்) உறையும்
எல்-நிற எந்தை பிரான் தனை-யான் அடி போற்றுவதே.

5.004   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மின்னனை, வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
தென்னனை, திரு அண்ணாமலையனை,
என்னனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
அன்னனை,-அடியேன் மறந்து உய்வனோ?

5.046   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மின்னின் நேர் இடையாள் உமை பங்கனை,
தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை,
புன்னைக் காவல் பொழில் புகலூரனை,
என்னுள் ஆக வைத்து இன்பு உற்று இருப்பனே.

5.051   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மின்னின் நுண் இடைக் கன்னியர் மிக்கு, எங்கும்
பொன்னிநீர் மூழ்கிப் போற்றி அடி தொழ,
மன்னி நால்மறையோடு பல்கீதமும்
பன்னினார் அவர்-பாலைத்துறையரே.

6.041   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மின் நேர் இடைபங்கன் நீயே என்றும், வெண் கயிலை மேவினாய் நீயே என்றும்,
பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும், பூதகண நாதன் நீயே என்றும்,
என் நா இரதத்தாய் நீயே என்றும், ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும்,
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

6.046   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மின்னானை, மின் இடைச் சேர் உருமினானை, வெண்முகில ஆய் எழுந்து மழை பொழிவான் தன்னை,
தன்னானை, தன் ஒப்பார் இல்லாதானை, தாய் ஆகிப் பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி
என்னானை, எந்தை பெருமான் தன்னை, இரு நிலமும் அண்டமும் ஆய்ச் செக்கர்வானே
அன்னானை, ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!

6.049   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மின் அளந்த மேல்முகட்டின் மேல் உற்றான் காண்; விண்ணவர் தம் பெருமான் காண்; மேவில் எங்கும்
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண்; மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண்;
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண்; ஏ வலன் காண்; இமையோர்கள் ஏத்த நின்று,
மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.

6.054   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மின் உருவை; விண்ணகத்தில் ஒன்று ஆய், மிக்கு வீசும் கால் தன் அகத்தில் இரண்டு ஆய், செந்தீத்-
தன் உருவில் மூன்று ஆய், தாழ் புனலில் நான்கு ஆய், தரணிதலத்து அஞ்சு ஆகி, எஞ்சாத் தஞ்ச
மன் உருவை; வான் பவளக்கொழுந்தை; முத்தை; வளர் ஒளியை; வயிரத்தை; மாசு ஒன்று இல்லாப்
பொன் உருவை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.

6.076   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண், பொருப்பு வலிச் சிலைக் கையோன் காண்,
நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நல்  கனகக்கிழி தருமிக்கு அருளினோன் காண்
பொன் காட்டக் கடிக்கொன்றை, மருங்கே நின்ற புனக் காந்தள் கை காட்ட, கண்டு வண்டு
தென் காட்டும் செழும் புறவின்திருப் புத்தூரில்- திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

7.011   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மின் அனையாள் திருமேனி விளங்க ஒர்
தன் அமர் பாகம் அது ஆகிய சங்கரன்,
முன் நினையார் புரம் மூன்று எரியூட்டிய
பொன் அனையான், உறை பூவணம் ஈதோ! .

7.074   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்த(அ)ருவி வெடிபடக் கரையொடும் திரை கொணர்ந்து எற்றும்
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார்; அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம்  அடியார்
சொன்ன ஆறு அறிவார்; துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன்  நாயேன்
என்னை, நான் மறக்கும் ஆறு? எம் பெருமானை, என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை .

7.083   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மின் நெடுஞ்செஞ்சடையன் மேவிய ஆரூரை
நன்நெடுங் காதன்மையால் நாவலர்கோன் ஊரன்
பல்-நெடுஞ் சொல்மலர்கொண்டு இட்டன பத்தும் வல்லார்
பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர்; புண்ணியரே.

8.104   8 st/nd Thirumurai   Song # 20   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மின் ஆர் உருவ விகிர்தா, போற்றி!
கல் நார் உரித்த கனியே, போற்றி!
காவாய், கனகக் குன்றே, போற்றி!
ஆ! ஆ! என் தனக்கு அருளாய், போற்றி!
படைப்பாய், காப்பாய், துடைப்பாய், போற்றி!

8.109   8 st/nd Thirumurai   Song # 13   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மின் இடை, செம் துவர் வாய், கரும் கண், வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன், எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

8.124   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மின் கணினார், நுடங்கும் இடையார், வெகுளி வலையில் அகப்பட்டு,
புன் கணன் ஆய், புரள்வேனை, புரளாமல், புகுந்து அருளி,
என்கணிலே அமுது ஊறி, தித்தித்து, என் பிழைக்கு இரங்கும்
அம் கணனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

8.150   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார் கடந்தார், வியன் உலகம்;
பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார், அமரர் எல்லாம்;
கல் நேர் அனைய மனக் கடையாய், கழிப்புண்டு, அவலக் கடல் வீழ்ந்த
என் நேர் அனையேன், இனி, உன்னைக் கூடும்வண்ணம் இயம்பாயே.

8.214   8 st/nd Thirumurai   Song # 25   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மின்னங் கலருஞ் சடைமுடி
   யோன்வியன் தில்லையன்னாய்
என்னங் கலமர லெய்திய
   தோவெழின் முத்தந்தொத்திப்
பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின்
   வாய்ப்புலம் புற்றுமுற்றும்
அன்னம் புலரு மளவுந்
   துயிலா தழுங்கினவே.

8.216   8 st/nd Thirumurai   Song # 28   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மின்றங் கிடையொடு நீவியன்
   தில்லைச்சிற் றம்பலவர்
குன்றங் கடந்துசென் றால்நின்று
   தோன்றுங் குரூஉக்கமலந்
துன்றங் கிடங்குந் துறைதுறை
   வள்ளைவெள் ளைநகையார்
சென்றங் கடைதட மும்புடை
   சூழ்தரு சேண்நகரே.

8.216   8 st/nd Thirumurai   Song # 29   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மின்போல் கொடிநெடு வானக்
   கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை
   காட்டப் பொலிபுலியூர்
மன்போற் பிறையணி மாளிகை
   சூலத்த வாய்மடவாய்
நின்போல் நடையன்னந் துன்னிமுன்
   தோன்றுநன் னீணகரே.

8.216   8 st/nd Thirumurai   Song # 53   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மின்றொத் திடுகழல் நூபுரம்
   வெள்ளைசெம் பட்டுமின்ன
ஒன்றொத் திடவுடை யாளொடொன்
   றாம்புலி யூரனென்றே
நன்றொத் தெழிலைத் தொழவுற்
   றனமென்ன தோர்நன்மைதான்
குன்றத் திடைக்கண் டனமன்னை
   நீசொன்ன கொள்கையரே.

8.225   8 st/nd Thirumurai   Song # 41   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மின்றுன் னியசெஞ் சடைவெண்
   மதியன் விதியுடையோர்
சென்றுன் னியகழற் சிற்றம்
   பலவன்தென் னம்பொதியில்
நன்றுஞ் சிறியவ ரில்லெம
   தில்லம்நல் லூரமன்னோ
இன்றுன் திருவரு ளித்துணை
   சாலுமன் னெங்களுக்கே.

9.020   9 st/nd Thirumurai   Song # 1   கண்டராதித்தர்   திருவிசைப்பா  
மின்னார் உருவம் மேல்விளங்க
   வெண்கொடி மாளி கைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து
   நின்றது போலும் என்னாத்
தென்னா என்று வண்டு பாடும்
   தென்தில்லை அம்ப லத்துள்
என்னார் அமுதை எங்கள்
   கோவை என்றுகொல் எய்துவதே.
10.319   10 st/nd Thirumurai   Song # 17   திருமூலர்   திருமந்திரம்  
மின்னிடை யாளும்மின் னாளனுங் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லாரேல்
மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே. 

10.904   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
மின்னியல் தூவொளி மேதக்க செவ்வொளி
பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி
துன்னிய ஆறொளி தூய்மொழி நாடொறும்
உன்னிய ஆறொளி ஒத்தது தானே.

10.922   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி
பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்
என்னுற் றறிவானான் என்விழித் தானே.

11.004   11 st/nd Thirumurai   Song # 83   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால்
என்போலுங் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும்
பொற்குன்றும் நீல மணிக்குன்றுந் தாமுடனே
நிற்கின்ற போலும் நெடிது.

11.008   11 st/nd Thirumurai   Song # 135   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
மின்ஆர்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே
தன்ஆவார் இல்லாத் தகைமையாள் எந்நாளும்

11.025   11 st/nd Thirumurai   Song # 7   அதிராவடிகள்   மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை  
மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து
ஒவற விளங்கிய துளைக்கைக் கடவுளை
யாம்மிக வழுத்துவ தெவனோ அவனேல்
பிறந்ததிவ் வுலகின் பெருமூ தாதை
உரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்தது
மேருச் சிமையத்து மீமிசை
வாரிச் செல்வன் மகள்மகன் மொழியே.

11.029   11 st/nd Thirumurai   Song # 9   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
மின்களென் றார்சடை கொண்டலென்
றார்கண்டம் மேனிவண்ணம்
பொன்களென் றார்வெளிப் பாடுதம்
பொன்னடி பூண்டுகொண்ட
என்களென் றாலும் பிரிந்தறி
யார்கச்சி ஏகம்பத்தான்
தன்களென் றாருல கெல்லாம்
நிலைபெற்ற தன்மைகளே.

11.029   11 st/nd Thirumurai   Song # 74   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
மின்நலிக் கும்வணக் கத்திடை
யாளையும் மீளியையும்
நென்னலிப் பாக்கைவந் தெய்தின
ரேலெம் மனையிற்கண்டீர்
பின்னரிப் போக்கருங் குன்று
கடந்தவர் இன்றுகம்பர்
மன்அரி தேர்ந்து தொழுங்கச்சி
நாட்டிடை வைகுவரே.

11.034   11 st/nd Thirumurai   Song # 76   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
மின்னார் குடுமி நெடுவெற்
பகங்கொங்கில் வீழ்பனிநோய்
தன்னார் வழிகெட் டழிந்தமை
சொல்லுவர் காணிறையே
மன்னார் பரிசனத் தார்மேல்
புகலு மெவர்க்குமிக்க
நன்னா வலர்பெரு மானரு
காசனி நல்கிடவே.

11.038   11 st/nd Thirumurai   Song # 48   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர் மிகுபொன்
  மாடப் புகலி நாதன்
துன்னு ஞானத் தெம்பி ரான்மெய்த் தொகைசெய்
  பாடற் பதிகம் அன்னாள்
பொன்னு மாநல் தரள முந்தன் பொருக
  யற்கண் தனம்நி றைந்தாள்
இன்னும் ஏகிப் பொருள்ப டைப்பான்
  எங்ஙனேநான் எண்ணு மாறே. 29
  பதிக வகை: பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

12.000   12 st/nd Thirumurai   Song # 250   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மின்னார்செஞ் சடையண்ணல்
விரும்புதிருப் புகலூரை
முன்னாகப் பணிந்தேத்தி
முதல்வன்தன் அருள்நினைந்து
பொன்னாரும் உத்தரியம் பு
ரிமுந்நூ லணிமார்பர்
தென்னாவ லூராளி
திருவாரூர் சென்றணைந்தார்.
12.110   12 st/nd Thirumurai   Song # 20   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மின்னிடை மடவார் கூற
மிக்கசீர்க் கலய னார்தாம்
மன்னிய பெருஞ்செல் வத்து
வளமலி சிறப்பை நோக்கி
என்னையும் ஆளுந் தன்மைத்
தெந்தைஎம் பெருமான் ஈசன்
தன்னருள் இருந்த வண்ணம்
என்றுகை தலைமேற் கொண்டார்.
12.130   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மின்னு செஞ்சடை வேதியர்க் காமென்று
செந்நெல் இன்னமு தோடுசெங் கீரையும்
மன்னு பைந்துணர் மாவடு வுங்கொணர்ந்
தன்ன வென்றும் அமுதுசெய் விப்பரால்.
12.150   12 st/nd Thirumurai   Song # 44   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மின்னும்மணி மாளிகை வாயிலின்
வேழ மீது
தன்னின்றும் இழிந்து தயங்கொளி
மண்ட பத்திற்
பொன்னின்அரி மெல்லணைச் சாமரைக்
காமர் பூங்கால்
மன்னுங்குடை நீழல் இருந்தனர்
வையந் தாங்கி.
12.190   12 st/nd Thirumurai   Song # 92   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மின்பொலிபன் மணிமிடைந்த தவள மாட
மிசைப்பயில்சந் திரகாந்தம் விசும்பின் மீது
பொன்புரையுஞ் செக்கர்நிறப் பொழுது தோன்றும்
புனிற்றுமதி கண்டுருகிப் பொழிந்த நீரால்
வன்புலியி னுரியாடைத் திருவே கம்பர்
வளர்சடையும் இளம்பிறையுங் கண்டு கும்பிட்
டன்புருகி மெய்பொழியக் கண்ணீர் வாரும்
அடியவரும் அனையவுள அலகி லாத.
12.260   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மின்நெ டுஞ்சடை விமலர்மேல்
விழுந்தநூற் சிலம்பி
தன்னை வேறொரு பரிசினால்
தவிர்ப்பது தவிர
முன்அ ணைந்துவந் தூதிவாய்
நீர்ப்பட முயன்றாய்
உன்னை யான்இனித் துறந்தனன்
ஈங்கென உரைத்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 230   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மின்னார் சடையார் தமக்காளாம்
விதியால் வாழும் எனைவருத்தித்
தன்னா ரருளால் வரும்பேறு
தவத்தால் அணையா வகைதடுத்தே
என்னா ருயிரும் எழின்மலரும்
கூடப் பிணைக்கும் இவள்தன்னைப்
பொன்னார் இதழி முடியார்பால்
பெறுவே னென்று போய்ப்புக்கார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 273   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மின்னொளிர்செஞ் சடையானை
வேதமுத லானானை
மன்னுபுகழ்த் திருவாரூர்
மகிழ்ந்தானை மிகநினைந்து
பன்னியசொற் பத்திமையும்
அடிமையையுங் கைவிடுவான்
என்னுமிசைத் திருப்பதிகம்
எடுத்தியம்பி யிரங்கினார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D