சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மா
மாலும்     மாசு     மான்,     மாணா     மாடே     மாடம்     மாண்டார்     மாடு     மாலினுக்கு     மான்     மாந்தர்     மாலினோடு     மா     மாறு     மாகம்     மாட     மாவின்     மால்     மாது     மாதர்     மாலாங்க     மாரியும்     மாணிக்கத்     மால்போ     மானின்கண்     மாண்பது     மாதா     மாலகு     மாறா     மாறி     மாறும்     மாட்டிய     மாதன     மாமாயை     மாதுநல்     மார்க்கங்கள்     மாயம்     மாறாத     மார்க்கம்சன்     மாலை     மாதவர்     மானுடர்     மானந்தி     மாத்திரை     மாயாள்     மாதரை     மாத     மாயா     மாணிக்க     மாயை     மாயையில்     மாயையிற்     மாயையின்     மாயைகைத்     மாயனு     மாய     மாயப்     மாமதி     மாடத்     மாணிக்கக்     மாயனை     மாறெதிர்     மாண்டு     மாநிலத்     மாயன்நன்     மால்இடப்பாற்     மாந்தளிர்     மாறிப்     மாயங்கள்     மாதரங்கம்     மாயனைஒர்     மாட்டும்     மானும்     மாயவன்     மாதவத்     மாலையொப்     மாதவியும்     மாளிகையும்     மாதவத்தோர்     மாயிரு     மாண்புதிகழ்     மாலின்உந்     மாவி     மாடுபோ     மாநிலங்கா     மாசி     மாதொரு     மாமறை     மாசிலா     மால     மாளிகைகள்     மானிளம்     மாதுடன்     மாடலை     மாரிக்     மாலயற்     மாதவ     மாமதில்     மாதங்கந்     மார்பிற்சிறு     மானச்சிலை     மாகமார்     மாமுனிவர்     மாறில்ஊன்     மாறிலா     மாறில்பெருஞ்     மாசறு     மாறுமுதற்     மாதங்கம்     மாடெங்கும்     மாசுடம்பு     மாறில்     மாறுபெறல்     மாதினியார்     மாசின்மனத்     மாசில்மதி     மாபாவிக்     மாடுற்றணை     மார்பாரப்     மான     மாக     மார்ப     மாசில்     மாதர்ப்     மாதரவர்     மானமிகு     மாமணிச்     மான்மறிக்     மாமறையோர்     மாறன்     மாடநிரை     மாநகரம்     மாநாகம்     மானியார்     மால்பெருக்குஞ்     மாறனும்     மாசுசேர்     மாதுக்க     மாலா     மாடுபுனற்     மாலையிடை     மாதவர்கள்     மாளிகையின்     மாமறைநூல்     மாடுள     மாமலையாள்     மாலைதண்     மாதர்தம்     மாவீற்     மாளிகைமுன்     மாறுற்     மாற்றார்க்கு     மாலயனுக்     மாலும்,     மாட்டூர்,     மாலோடு     மாண்     மாலொடு     மானத்     மாணிதன்     மாயனும்     மாலவன்,     மானம்     மாலொடும்     மானின்     மாகத்திங்கள்     மாணியை     மாதவம்     மாயவன்,     மாப்பிணை     மாலைத்     மாலினாள்     மாயத்தை     மாயன்     மாற்றம்     மா-இரு     மாச்     மாட்டினேன்,     மாலினை     மாதிரம்,     மாய்ந்தன,     மாசினை     மாணிக்கு     மாணி     மாடத்து     மாதினை     மாலொடும்,     மார்க்கம்     மாதராரொடு,     மானை     மாத்தன்தான்,     மாதரார்     மாட்டுப்     மாட்டைத்     மால்யானை     மாக்     மாற்றேன்,     மாலாலும்     மாலைப்     மாறுபட்ட     மாதினுக்கு     மானும்,     மாற்றுக்     மாவை     மாப்     மாறுபட்டு     மானே!     மாடு,     மாலே,     மாயனே!     மாழை,     மாடும்,     மால்,     மாடஞ்செய்     மாதிடங்     மாற்றே     மாதுற்ற     மாவைவந்     மாட்டியன்     மாதி     மானேர்     மாலுலா     மானைப்     மாலோ(டு)     மாதொர்    
Search limited to first 100
1.008   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலும் அயனும் வணங்கி நேட, மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட,
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற, செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம்
கோல விழாவின் அரங்கு அது ஏறி, கொடி இடை மாதர்கள் மைந்தரோடும்,
பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

1.009   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாசு ஏறிய உடலார் அமண்குழுக்களொடு தேரர்,
தேசு ஏறிய பாதம் வணங்காமைத் தெரியான் ஊர்
தூசு ஏறிய அல்குல் துடி இடையார், துணைமுலையார்,
வீசு ஏறிய புருவத்தவர், வேணுபுரம் அதுவே.

1.013   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மான், ஆர் அரவு, உடையான்; இரவு, உடையான், பகல் நட்டம்;
ஊன் ஆர்தரும் உயிரான்; உயர்வு இசையான்; விளை பொருள்கள்
தான் ஆகிய தலைவன்; என நினைவார் அவர் இடம் ஆம்
மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே.

1.024   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக்கு அளித்த காழியார்,
நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே.

1.024   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாடே ஓதம் எறிய, வயல் செந்நெல்
காடு ஏறிச் சங்கு ஈனும் காழியார்,
வாடா மலராள் பங்கர் அவர்போல் ஆம்
ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே.

1.025   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாசு ஆர் உடம்பர், மண்டைத் தேரரும்,
பேசா வண்ணம் பேசித் திரியவே,
தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா! என்ன, நில்லா, இடர்களே.

1.027   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன்,
சேடர் செல்வர் உறையும் திருப் புன்கூர்
நாட வல்ல ஞானசம்பந்தன்,
பாடல்பத்தும் பரவி வாழ்மினே!

1.030   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாண்டார் சுடலைப் பொடி பூசி, மயானத்து
ஈண்டா, நடம் ஆடிய ஏந்தல், தன் மேனி
நீண்டான் இருவர்க்கு எரி ஆய், அரவு ஆரம்
பூண்டான், நகர் பூம் புகலி நகர்தானே.

1.031   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாடு ஆர் மலர்க்கொன்றை வளர்சடை வைத்து,
தோடு ஆர் குழைதான் ஒரு காதில் இலங்க,
கூடார் மதில் எய்து, குரங்கணில் முட்டத்து,
ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்து, அமர்வானே.

1.041   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து, மலரவற்கு ஒரு முகம் ஒழித்து,
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி, அனல் அது ஆடும் எம் அடிகள்;
காலனைக் காய்ந்து தம் கழல் அடியால், காமனைப் பொடிபட நோக்கி,
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன்நகராரே.

1.043   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மான் இடம் ஆர்தரு கையர், மா மழு ஆரும் வலத்தார்,
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண்கலன் ஆக உகந்தார்
தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி,
கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே.

1.044   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாந்தர் தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி, வளர்சடை மேல் புனல் வைத்து,
மோந்தை, முழா, குழல், தாளம், ஒர் வீணை, முதிர ஓர் வாய் மூரி பாடி,
ஆந்தைவிழிச் சிறு பூதத்தார் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சாந்து அணி மார்பரோ, தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே?

1.047   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே
நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச,
சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே?

1.048   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்தன்
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து, அருள் செய்தது என்னே
பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும்
சே அடைந்த ஊர்தியானே, சேய்ஞலூர் மேயவனே?

1.048   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாசு அடைந்த மேனியாரும், மனம் திரியாத கஞ்சி
நேசு அடைந்த ஊணினாரும், நேசம் இலாதது என்னே
வீசு அடைந்த தோகை ஆட, விரை கமழும் பொழில்வாய்,
தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே?

1.049   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாசு மெய்யர், மண்டைத் தேரர், குண்டர் குணம் இலிகள்
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி, அந் நெறி செல்லன்மின்!
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம் பெருமான் மேயது நள்ளாறே.

1.055   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாறு இலா மணியே! என்று வானவர்
ஏறவே மிக ஏத்துவர்
கூறனே! குலவும் திரு மாற்பேற்றில்
நீறனே! என்றும் நின்னையே.

1.056   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாகம் தோய் மதி சூடி, மகிழ்ந்து, எனது
ஆகம் பொன்நிறம் ஆக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர், பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே.

1.057   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாறு இலா மலரானொடு மால் அவன்
வேறு அலான் உறை வேற்காடு
ஈறு இலா மொழியே மொழியா எழில்
கூறினார்க்கு இல்லை, குற்றமே.

1.064   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து,
கூட வென்றிவாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம்
பாடலோடும் ஆடல் ஓங்கி, பல்மணி பொன் கொழித்து,
ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே.

1.066   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து, மெய்ம் மால் ஆன
சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன்-மேதக்க
ஆகரம் சேர் இப்பிமுத்தை அம் தண்வயலுக்கே
சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பைநகராரே.

1.068   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி, முடிதன் மேல்
மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர்; கழல் உன்னும்
தேவர் தேவர்; திரிசூலத்தர் திரங்கல் முகவன் சேர்
காவும் பொழிலும் கடுங்கல் சுனை சூழ் கயிலைமலையாரே.

1.081   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலும் பிரமனும் அறியா மாட்சியான்,
தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன்,
ஏலும் பதிபோலும் இரந்தோர்க்கு எந்நாளும்
காலம் பகராதார் காழிந் நகர்தானே.

1.082   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மால் ஆயிரம் கொண்டு மலர்க்கண் இட, ஆழி
ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில்
சேல் ஆகிய பொய்கைச் செழு நீர்க் கமலங்கள்
மேலால் எரி காட்டும் வீழி மிழலையே.

1.083   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாசு ஊர் வடிவினார், மண்டை உணல் கொள்வார்,
கூசாது உரைக்கும் சொல் கொள்கை குணம் அல்ல;
வாசு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
ஈசா! என்பார்கட்கு இல்லை, இடர்தானே.

1.097   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர்போலும்
மாதவி மேய வண்டு இசை பாட, மயில் ஆட,
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே.

1.099   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாட வீதி வருபுனல் காழியார் மன்னன்,
கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம்
நாட வல்ல, நல்-தமிழ் ஞானசம்பந்தன்,
பாடல்பத்தும் பாட, நம் பாவம் பறையுமே.

1.106   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய, ஓர் வெங்கணையால், அன்று,
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில்
தேறல் இரும் பொழிலும், திகழ் செங்கயல் பாய் வயலும், சூழ்ந்த
ஊறல்; அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே.

1.112   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து,
நீறு அது ஆக்கிய நிமலன் நகர்
நாறு உடை நடுபவர் உழவரொடும்
சேறு உடை வயல் அணி சிவபுரமே.

1.115   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாறு இலா மாது ஒருபங்கன், மேனி
நீறு அது ஆடலோன், நீள்சடைமேல்
ஆறு அது சூடுவான், அழகன், விடை
ஏறவன், இராமன தீச்சரமே.

1.124   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாடு அமர் சனம் மகிழ்தரு மனம் உடையவர்
காடு அமர் கழுதுகள் அவை முழவொடும் இசை
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே.

1.136   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது ஓர்
நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர்,
பூத இனப்படை நின்று இசை பாடவும் ஆடுவர்,
அவர் படர் சடை நெடுமுடியது ஒர் புனலர்,
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்திரை
இரை நுரை கரை பொருது, விம்மி நின்று, அயலே
தாது அவிழ் புன்னை தயங்கு மலர்ச் சிறைவண்டு அறை
எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே.

2.001   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாது இலங்கிய மங்கையர் ஆட, மருங்குஎலாம்
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய்,
சோதி அம்சுடர்மேனி வெண்நீறு அணிவீர்! சொலீர்
காதில் அம் குழை சங்கவெண்தோடுஉடன் வைத்ததே?

2.004   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாது ஓர் கூறுஉடை நல் தவனைத் திரு வான்மியூர்
ஆதிஎம்பெருமான் அருள்செய்ய, வினாஉரை
ஓதி, அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
நீதியால் நினைவார் நெடுவான் உலகு ஆள்வரே.

2.005   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மா பதம் அறியாதவர் சாவகர்சாக்கியர்,
ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம்
ஆ பதம் அறிவீர் உளிர் ஆகில், அனேகதங்
காபதம் அமர்ந்தான் கழல் சேர்தல் ருமமே.

2.006   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலும், சோதி மலரானும், அறிகிலா வாய்மையான்;
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன்கழல்;
கோலம் ஆய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர்
ஆலநீழல் உளானும் ஐயாறு உடை ஐயனே.

2.007   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாடம் நீடு கொடி மன்னிய தென் இலங்கைக்கு மன்
வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர்,
வேடவேடர், திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்
பாட நீடு மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே

2.008   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலினோடு அருமாமறை வல்ல முனிவனும்
கோலினார் குறுக, சிவன் சேவடி கோலியும்
சீலம் தாம் அறியார்; திகழ் சிக்கல் வெண்ணெய்ப்பிரான்
பாலும் பல்மலர் தூவ, பறையும், நம் பாவமே.

2.025   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலும், நான்முகன்தானும், வார் கழல்
சீலமும் முடி தேட, நீண்டு எரி
போலும் மேனியன் பூம் புகலியுள
பாலது ஆடிய பண்பன் அல்லனே?

2.038   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலினோடு அயன் காண்டற்கு அரியவர், வாய்ந்த
வேலை ஆர் விடம் உண்டவர், மேவிய கோயில்
சேலின் நேர் விழியார் மயில்_ஆல, செருந்தி
காலையே கனகம்மலர்கின்ற சாய்க்காடே.

2.039   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாட்டூர், மடப் பாச்சிலாச்சிரமம்,
முண்டீச்சரம், வாதவூர், வாரணாசி,
காட்டூர், கடம்பூர், படம்பக்கம் கொட்டும்
கடல் ஒற்றியூர், மற்று உறையூர் அவையும்,
கோட்டூர், திரு ஆமாத்தூர், கோழம்பமும்,
கொதுங்கோவலூர், திருக்குணவாயில்,

2.043   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடை ஆடை
ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம்
ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்கண்
போகாமே பொருது அழித்தான்_ புள்ளிருக்கு வேளூரே.

2.044   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாறாத வெங் கூற்றை மாற்றி, மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்,
ஆறாத தீ ஆடி, ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே

2.046   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலோடு நான்முகனும் நேட, வளர் எரி ஆய்,
மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடும் ஆறு அங்கம் நாலூர்மயானத்து எம்
பாலோடு நெய் ஆடி; பாதம் பணிவோமே.

2.059   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாண் ஆய் உலகம் கொண்ட மாலும் மலரோனும்
காணா வண்ணம் எரி ஆய் நிமிர்ந்தான், கலிக் காழிப்
பூண் ஆர் முலையாள் பங்கத்தானை, புகழ்ந்து ஏத்தி,
கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை, குற்றமே.

2.066   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு;
மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு;
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு;
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.

2.073   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாமலையாள் கணவன் மகிழ் வெங்குரு, மாப் புகலி, தராய்,
தோணிபுரம், வான்
சேம மதில் புடை திகழும் கழுமலமே, கொச்சை,
தேவேந்திரன் ஊர், சீர்ப்
பூமகன் ஊர், பொலிவு உடைய புறவம், விறல் சிலம்பன்
ஊர், காழி, சண்பை
பா மருவு கலை எட்டு எட்டு உணர்ந்து, அவற்றின் பயன்
நுகர்வோர் பரவும் ஊரே.

2.094   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மான வாழ்க்கை அது உடையார்; மலைந்தவர் மதில் பரிசு
அழித்தார்;
தான வாழ்க்கை அது உடையார்; தவத்தொடு நாம் புகழ்ந்து
ஏத்த,
ஞான வாழ்க்கை அது உடையார்; நள் இருள் மகளிர்
நின்று ஏத்த,
வான வாழ்க்கை அது உடையார் வாழ்கொளி புத்தூர்
உளாரே.

2.095   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவி,
தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழச் சரம் அது
துரந்து
வான் அஞ்சும் பெருவிடத்தை உண்டவன்; மாமறை ஓதி;
ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம்
அரசிலியே.

2.096   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலும் மா மலரானும் மருவி நின்று, இகலிய மனத்தால்,
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர் தன் பதி ஆகும்
சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய,
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி, வயல் காழி நன் நகரே.

2.102   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் தவம் கெட
மதித்து, அன்று,
கானத்தே திரி வேடனாய், அமர் செயக் கண்டு,
அருள்புரிந்தார் பூந்
தேனைத் தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து
உறை எங்கள்
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை, குற்றங்கள்,
குறுகாவே.

2.102   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாணிதன் உயிர் மதித்து உண வந்த அக் காலனை உதை
செய்தார்,
பேணி உள்கும் மெய் அடியவர் பெருந் துயர்ப் பிணக்கு
அறுத்து அருள் செய்வார்,
வேணி வெண்பிறை உடையவர், வியன்புகழ்ச் சிரபுரத்து
அமர்கின்ற
ஆணிப்பொன்னினை, அடி தொழும் அடியவர்க்கு
அருவினை அடையாவே.

2.103   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாறு தன்னொடு மண்மிசை இல்லது வருபுனல் மாகாளத்து
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை, ஏறு அமர் பெருமானை,
நாறு பூம் பொழில் காழியுள் ஞானசம்பந்தன தமிழ் மாலை
கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே.

2.104   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாது இலங்கிய பாகத்தன்; மதியமொடு, அலைபுனல், அழல்,
நாகம்,
போது இலங்கிய கொன்றையும், மத்தமும், புரிசடைக்கு
அழகு ஆக,
காது இலங்கிய குழையினன்; கடிக்குளத்து உறைதரு
கற்பகத்தின்
பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அறக்
கெடும் அன்றே.

2.106   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாது ஒர் கூறனை, வலஞ்சுழி மருவிய மருந்தினை, வயல் காழி
நாதன் வேதியன், ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ்மாலை
ஆதரித்து, இசை கற்று வல்லார், சொலக் கேட்டு உகந்தவர் தம்மை
வாதியா வினை; மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே.

2.107   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாடு எலாம் மணமுரசு எனக் கடலினது ஒலி கவர்
மாதோட்டத்து
ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை,
அணி காழி
நாடு உளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு
பாமாலைப்
பாடல் ஆயின பாடுமின், பத்தர்காள்! பரகதி பெறல் ஆமே.

2.109   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாட மாளிகை, கோபுரம், கூடங்கள், மணி அரங்கு, அணி
சாலை,
பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம், பரிசொடு
பயில்வு ஆய
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே! என்று
எழுவார்கள்
கேடு அது ஒன்று இலர் ஆகி, நல் உலகினில் கெழுவுவர்;
புகழாலே.

2.112   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாது ஓர் கூறு உகந்து, ஏறு அது ஏறிய
ஆதியான் உறை ஆடானை
போதினால் புனைந்து, ஏத்துவார் தமை
வாதியா வினை மாயுமே.

2.112   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாயனும் மலரானும் கைதொழ
ஆய அந்தணன் ஆடானை
தூய மா மலர் தூவிக் கைதொழ,
தீய வல்வினை தீருமே.

3.010   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மான் அன நோக்கி வைதேவி தன்னை ஒரு மாயையால்
கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன்,
ஈனம் இலாப் புகழ் அண்ணல், செய்த இராமேச்சுரம்
ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே.

3.013   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மா சின அரக்கனை வரையின் வாட்டிய,
காய் சின எயில்களைக் கறுத்த கண்டனார்
பூசுரர் பொலி தரு பூந்தராய் நகர்
காசை செய் குழல் உமை கணவர்; காண்மினே!

3.018   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலவன், மலரவன், நேடி மால் கொள
மால் எரி ஆகிய வரதர் வைகு இடம்
மாலைகொடு அணி மறைவாணர் வைகலில்,
மால் அன மணி அணி மாடக்கோயிலே.

3.020   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாது அமர் மேனியன் ஆகி, வண்டொடு
போது அமர் பொழில் அணி பூவணத்து உறை
வேதனை, விரவலர் அரணம் மூன்று எய்த
நாதனை, அடி தொழ, நன்மை ஆகுமே.

3.025   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மானம் ஆக்கு(வ்)வன, மாசு நீக்கு(வ்)வன;
வானை உள்கச் செலும் வழிகள் காட்டு(வ்)வன
தேனும் வண்டும்(ம்) இசை பாடும் தேவன்கு
ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே

3.026   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மான மா மடப்பிடி வன் கையால் அலகு இடக்
கானம் ஆர் கடகரி வழிபடும் கானப்பேர்,
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின்,
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே.

3.034   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாசு மெய் தூசு கொண்டு உழல் சமண் சாக்கியர்
பேசு மெய் உள அல; பேணுவீர்! காணுமின்-
வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம்(ம்) இசை செய,
தேசம் ஆர் புகழ் மிகும் திரு முதுகுன்றமே!

3.035   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலொடும் பொரு திறல் வாள் அரக்கன் நெரிந்து
ஓல் இடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம்
காலொடும் கனகமூக்கு உடன்வர, கயல் வரால்
சேலொடும் பாய் வயல்-தென்குடித்திட்டையே.

3.039   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மா பெருந்தேவி! கேள்
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்!
ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

3.042   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாகத்திங்கள் வாள்முக மாதர் பாட, வார்சடைப்
பாகத்திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய பண்டங்கன்-
மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான்;
ஆகத்து ஏர் கொள் ஆமையைப் பூண்ட அண்ணல் அல்லனே!

3.043   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மான் இடம்(ம்) உடையார், வளர் செஞ்சடைத்
தேன் இடம் கொளும் கொன்றை அம் தாரினார்
கான் இடம் கொளும் தண்வயல் காழியார்
ஊன் இடம் கொண்டு என் உச்சியில் நிற்பரே.

3.045   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாசு மெய்யினர், வண் துவர் ஆடை கொள
காசை போர்க்கும் கலதிகள், சொல் கொளேல்!
தேசம் மல்கிய தென் திரு ஆரூர் எம்
ஈசன்தான் எனை ஏன்று கொளும்கொலோ?

3.046   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட,
ஆசை ஆர, அருள் நல்கிய செல்வத்தர்;
காய் சினத்த விடையார் கருகாவூர் எம்
ஈசர்; வண்ணம்(ம்) எரியும்(ம்) எரிவண்ணமே.

3.047   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலும் நான்முகனும்(ம்) அறியா நெறி
ஆலவாய் உறையும்(ம்) அண்ணலே! பணி
மேலைவீடு உணரா வெற்று அரையரைச்
சால வாது செயத் திரு உள்ளமே?

3.054   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மால் ஆயவனும் மறைவல்லவன் நான்முகனும்
பால் ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி,
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிது ஆய் எழுந்த
ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே!

3.056   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாணியை நாடு காலன் உயிர் மாய்தரச் செற்று, காள
காணிய ஆடல் கொண்டான், கலந்து ஊர்வழிச் சென்று, பிச்சை
ஊண் இயல்பு ஆகக் கொண்டு, அங்கு உடனே உமை நங்கையொடும்
பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம்; பேணுமினே!

3.074   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாசு இல் மனம் நேசர் தமது ஆசை வளர் சூலதரன், மேலை இமையோர்
ஈசன், மறை ஓதி, எரி ஆடி, மிகு பாசுபதன், மேவு பதிதான்-
வாசமலர் கோது குயில் வாசகமும், மாதர் அவர் பூவை மொழியும்
தேச ஒலி, வீணையொடு கீதம் அது, வீதி நிறை தேவூர் அதுவே.

3.076   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலை மதி, வாள் அரவு, கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல,
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க, அனல் ஆடும் அரன் ஊர்
சோலையின் மரங்கள்தொறும் மிண்டி, இனவண்டு, மது உண்டு இசைசெய;
வேலை ஒலிசங்கு, திரை, வங்க சுறவம், கொணரும்
வேதவனமே.

3.077   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாசு இல் மதி சூடு சடை மா முடியர், வல் அசுரர் தொல்-நகரம் முன்
நாசம் அது செய்து, நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம்
வாசம் மலி மென்குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி, அழகு ஆர்
ஊசல் மிசை ஏறி, இனிது ஆக, இசை பாடு உதவி மாணிகுழியே.

3.083   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாலும் மலர்மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய
கோலம் உடையான், உணர்வு கோது இல் புகழான், இடம் அது ஆகும்
நாலுமறை, அங்கம் முதல் ஆறும், எரி மூன்றுதழல் ஓம்பும்
சீலம் உடையார்கள் நெடுமாடம் வளரும் திரு நலூரே.

3.084   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாதவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை,
மேதகு திருவடி இறை உற, உயிர் அது விலகினார்
சாதக உரு இயல் சுரன் இடை, உமை வெரு உற, வரு
போதக உரி-அதள் மருவினர்; உறை பதி-புறவமே.

3.088   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாடம் அது என வளர் மதில் அவை எரி செய்வர், விரவு சீர்ப்
பீடு என அருமறை உரை செய்வர், பெரிய பல் சரிதைகள்
பாடலர், ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில்
வேடம் அது உடையவர், வியல் நகர் அது சொலில் விளமரே.

3.101   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மா தன நேர் இழை ஏர் தடங்கண் மலையான் மகள் பாட,
தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார்
ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார்
போது வெண்திங்கள் பைங்கொன்றை சூடும் புனிதர் செயும்
செயலே!

3.102   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாயவன், சேயவன், வெள்ளியவன், விடம் சேரும்
மைமிடற்றன்
ஆயவன், ஆகி ஒர் அந்தரமும்(ம்) அவன் என்று, வரை ஆகம்
தீ அவன், நீர் அவன், பூமி அவன், திரு நாரையூர் தன்னில்
மேயவனைத் தொழுவார் அவர் மேல் வினை ஆயின
வீடுமே.

3.105   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாசு பிறக்கிய மேனியாரும், மருவும் துவர் ஆடை
மீசு பிறக்கிய மெய்யினாரும், அறியார், அவர் தோற்றம்;
காசினி நீர்த்திரள் மண்டி, எங்கும் வளம் ஆர் கலிக்காமூர்
ஈசனை எந்தைபிரானை ஏத்தி, நினைவார் வினை போமே.

3.109   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மால் அயன் தேடிய மயேந்திரரும்,
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்,
வேலை அது ஓங்கும் வெண் நாவலாரும்,
ஆலை ஆரூர் ஆதி ஆனைக்காவே.

4.003   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.

4.011   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தன்
பூப் பிணை திருந்து அடி பொருந்தக் கைதொழ,
நாப் பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்த வல்லார்தமக்கு இடுக்கண் இல்லையே.

4.015   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாலைத் தோன்றும் வளர்மதியை, மறைக்காட்டு உறையும் மணாளனை,
ஆலைக் கரும்பின் இன்சாற்றை, அண்ணாமலை எம் அண்ணலை,
சோலைத் துருத்தி நகர் மேய சுடரில்-திகழும் துளக்கு இலியை,
மேலை வானோர் பெருமானை, விருப்பால் விழுங்கியிட்டேனே.

4.030   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாலினாள் நங்கை அஞ்ச, மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும், வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு, நொடிப்பது ஓர் அளவில் வீழ,
காலினால் ஊன்றியிட்டார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

4.031   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாயத்தை அறியமாட்டேன்; மையல் கொள் மனத்தன் ஆகி,
பேய் ஒத்து, கூகை ஆனேன்; பிஞ்ஞகா! பிறப்பு ஒன்று இல்லீ!
நேயத்தால் நினையமாட்டேன்; நீதனே! நீசனேன் நான்
காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீரட்டனீரே!

4.043   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மால் அன மாயன் தன்னை மகிழ்ந்தனர்; விருத்தர் ஆகும்
பாலனார்; பசுபதி(ய்)யார்; பால் வெள்ளைநீறு பூசிக்
காலனைக் காலால் காய்ந்தார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏல நல் கடம்பன் தந்தை-இலங்கு மேற்றளியனாரே.

4.043   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாயன் ஆம் மாலன் ஆகி, மலரவன் ஆகி, மண் ஆய்,
தேயம் ஆய், திசை எட்டு ஆகி, தீர்த்தம் ஆய், திரிதர்கின்ற
காயம் ஆய், காயத்து உள்ளார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏய மென் தோளிபாகர் -இலங்கு மேற்றளியனாரே.

4.052   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாற்றம் ஒன்று அருள கில்லீர்; மதி இலேன் விதி இலாமை
சீற்றமும் தீர்த்தல் செய்யீர்; சிக்கனவு உடையர் ஆகிக்
கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்ய,
ஆற்றவும் கில்லேன், நாயேன் ஆரூர் மூலட்டனீரே!

4.056   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மா-இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும்;
பாய் இருங் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்;
காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன்-
ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே.

4.069   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாச் செய்த குரம்பை தன்னை மண் இடை மயக்கம் எய்தும்
நாச் செய்து, நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து,
காச் செய்த காயம் தன்னுள் நித்தலும் ஐவர் வந்து
கோச் செய்து குமைக்க ஆற்றேன்-கோவல் வீரட்டனீரே!

4.078   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாட்டினேன், மனத்தை முன்னே; மறுமையை உணர மாட்டேன்;
மூட்டி, நான், முன்னை நாளே முதல்வனை வணங்க மாட்டேன்;
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம் தன்னை;
ஈட்டினேன்; களைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!

4.088   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாலினை மால் உற நின்றான், மலை மகள் தன்னுடைய
பாலனை, பால் மதி சூடியை, பண்பு உணரார் மதில் மேல்
போலனை, போர் விடை ஏறியை, பூந்துருத்தி(ம்) மகிழும்
ஆலனை, ஆதிபுராணனை-நான் அடி போற்றுவதே.

4.092   4 st/nd Thirumurai   Song # 15   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாதிரம், மா நிலம், ஆவன; வானவர் மா முகட்டின்
மீதன; மென் கழல் வெங் கச்சு வீக்கின; வெந் நமனார்
தூதரை ஓடத் துரப்பன; துன்பு அறத் தொண்டு பட்டார்க்கு
ஆதரம் ஆவன காண்க!-ஐயாறன் அடித்தலமே.

4.093   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாய்ந்தன, தீவினை; மங்கின நோய்கள் மறுகி விழத்
தேய்ந்தன; பாவம் செறுக்ககில்லா, நம்மை; செற்று அநங்கைக்
காய்ந்த பிரான், கண்டியூர் எம்பிரான், அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரான், அல்லனோ, அடியேனை ஆட்கொண்டவனே?

4.094   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாயம் எல்லாம் முற்ற விட்டு, இருள் நீங்க, மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தான் அவன்தன் திருவடிக்கே
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும்-திருப் பாதிரிப்புலியூர்
மேய நல்லான் மலர்ப்பாதம் என் சிந்தையுள் நின்றனவே.

Search limited to first 100
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%AE%E0%AE%BE