சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மஞ்சு
மஞ்சு     மஞ்சுண்ட    
1.067   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறு ஆய் எடுத்தான் தோள்
அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும் அடர ஊன்றினார்;
நஞ்சார் சுடலைப் பொடி-நீறு அணிந்த நம்பான்-வம்பு ஆரும்
பைந்தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே.

2.004   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மஞ்சு உலாவிய மாட மதில் பொலி மாளிகைச்
செஞ்சொலாளர்கள்தாம் பயிலும் திரு வான்மியூர்,
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர்! சொலீர்
வஞ்ச நஞ்சு உண்டு, வானவர்க்கு இன் அருள் வைத்ததே?

2.105   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பு
ஒண்ணாப்
பஞ்சு உலாவிய மெல் அடிப் பார்ப்பதி பாகனை,
பரிவோடும்
செஞ்சொலார்பலர் பரவிய தொல்புகழ் மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு உலாவிய கண்டனை, நணுகுமின்! நடலைகள்
நணுகாவே.

3.021   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மஞ்சு உறு பொழில் வளம் மலி கருக்கு
நஞ்சு உறு திருமிடறு உடைய நாதனார்
அம் சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே,
வெஞ்சுரம் தனில் விளையாடல் என்கொலோ?

4.019   4 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி, மணி விரலால்,
துஞ்சாப் போர் வாள் அரக்கன் தோள் நெரியக் கண் குருதிச்-
செஞ் சாந்து அணிவித்து, தன் மார்பில் பால் வெண் நீற்று-
அம்சாந்து அணிந்தானை-நான் கண்டது ஆரூரே.

7.002   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மஞ்சுண்ட மாலை மதி சூடு சென்னி, மலையான் மடந்தை மணவாள நம்பி!
பஞ்சுண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்று ஆய் இருத்தல் ஒழியீர்;
நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம்; உம் கை நாகம்  அதற்கு
அஞ்சு உண்டு, படம்; அது போக விடீர் அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே .

8.135   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன்; மன்னரோடு உறவும் அஞ்சேன்;
நஞ்சமே அமுதம் ஆக்கும் நம் பிரான் எம்பிரான் ஆய்,
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது,
அஞ்சுவார் அவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!


This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81