சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மங்கல
மங்கலம்     மங்கல     மங்கலமாம்     மங்கலமா     மங்கலதூ     மங்கலநல்     மங்கலக்குடி     மங்கலக்குடியான்    
5.073   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மங்கலக்குடி ஈசனை மாகாளி,
வெங்கதிர்ச் செல்வன், விண்ணொடு மண் உளோர்,
சங்கு சக்கரதாரி, சதுமுகன்,
அங்கு அகத்தியனும்(ம்), அர்ச்சித்தார் அன்றே.

5.073   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மங்கலக்குடியான் கயிலை(ம்) மலை
அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்கோன்,
தன் கரத்தொடு தாள்தலைதோள் தகர்ந்து,
அங்கு அலைத்து, அழுது, உய்ந்தனன் தான் அன்றே!

11.008   11 st/nd Thirumurai   Song # 48   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் தங்கிய

12.000   12 st/nd Thirumurai   Song # 70   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மங்கல வினைகள் எங்கும்
மணஞ்செய்கம் பலைகள் எங்கும்
பங்கய வதனம் எங்கும
பண்களின் மழலை எங்கும்
பொங்கொளிக் கலன்கள் எங்கும்
புதுமலர்ப் பந்தர் எங்குஞ்
செங்கயல் பழனம் எங்குந்
திருமகள் உறையுள் எங்கும்.
12.000   12 st/nd Thirumurai   Song # 145   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மங்கலம் பொலியச் செய்த
மணவினை ஓலை ஏந்தி
அங்கயற் கண்ணி னாரும்
ஆடவர் பலரும் ஈண்டிக்
கொங்கலர்ச் சோலை மூதூர்
குறுகினா ரெதிரே வந்து
பங்கய வதனி மாரும் 
மைந்தரும் பணிந்து கொண்டார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 156   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மங்கல கீத நாத
மறையவர் குழாங்க ளோடு
தொங்கலும் விரையுஞ் சூழ்ந்த
மைந்தருந் துவன்றிச் சூதும்
பங்கய முகையுஞ் சாய்த்துப் 
பணைத்தெழுந் தணியின் மிக்க
குங்கும முலையி னாரும்
பரந்தெழு கொள்கைத் தாகி.
12.000   12 st/nd Thirumurai   Song # 255   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மங்கல கீதம்பாட
மழைநிகர்தூ ரியமுழங்கச்
செங்கயற்கண் முற்றிழையார் 
தெற்றிதொறும் நடம்பயில
நங்கள்பிரான் திருவாரூர்
நகர்வாழ்வார் நம்பியைமுன்
பொங்கெயில்நீள் திருவாயில்
புறமுறவந் தெதிர்கொண்டார்.
12.050   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மங்கலம் பெருக மற்றென்
வாழ்வுவந் தணைந்த தென்ன
இங்கெழுந் தருளப் பெற்ற
தென்கொலோ என்று கூற
உங்கள்நா யகனார் முன்னம்
உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்குமில் லாத தொன்று
கொடுவந்தேன் இயம்ப வென்றான்.
12.080   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மங்கல விழவு கொண்டு
வருநதித் துறைநீ ராடிப்
பொங்கிய களிப்பி னோடும்
பொழிமதஞ் சொரிய நின்றார்
எங்கணு மிரியல் போக
எதிர்பரிக் காரர் ஓடத்
துங்கமால் வரைபோல் தோன்றித்
துண்ணென அணைந்த தன்றே.
12.120   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மங்கலமாம் செயல்விரும்பி
மகட்பயந்த வள்ளலார்
தங்குலநீள் சுற்றமெலாம்
தயங்குபெருங் களிசிறப்பப்
பொங்கியவெண் முளைப்பெய்து
பொலங்கலங்கள் இடைநெருங்கக்
கொங்கலர்தண் பொழில்மூதூர்
வதுவைமுகங் கோடித்தார்.
12.240   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மங்கலமா மணவினைகள்
முடித்தியல்பின் வைகுநாள்
தங்கள்குடிக் கொருபுதல்வி
ஆதலினால் தனதத்தன்
பொங்கொலிநீர் நாகையினிற்
போகாமே கணவனுடன்
அங்கண்அமர்ந் தினிதிருக்க
அணிமாடம் மருங்கமைத்தான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 97   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மங்கலதூ ரியந்துவைப்பார் மறைச்சாமம்
பாடுவார் மருங்கு வேதிப்
பொங்குமணி விளக்கெடுத்துப் பூரணகும்
பமும்நிரைப்பார் போற்றி செய்வார்
அங்கவர்கள் மனத்தெழுந்த அதிசயமும்
பெருவிருப்பும் அன்பும் பொங்கத்
தங்குதிரு மலிவீதிச் சண்பைநகர்
வலஞ்செய்து சாருங் காலை.
12.280   12 st/nd Thirumurai   Song # 110   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண்களிப்பப்
பெற்றபெரு வார்த்தை யாலே
எங்கணும்நீள் பதிமருங்கில் இருபிறப்பா
ளரும்அல்லா ஏனை யோரும்
பொங்குதிருத் தொண்டர்களும் அதிசயித்துக்
குழாங்கொண்டு புகலி யார்தம்
சிங்கஇள வேற்றின்பால் வந்தணைந்து
கழல்பணியுஞ் சிறப்பின் மிக்கார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 316   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மங்கலதூ ரியம்முழங்கு மணிவீதி
கடந்துமதிச் சடையார் கோயிற்
பொங்குசுடர்க் கோபுரத்துக் கணித்தாகப்
புனைமுத்தின் சிவிகை நின்றும்
அங்கண்இழிந் தருளுமுறை இழிந்தருளி
அணிவாயில் பணிந்து புக்குத்
தங்கள்பிரான் கோயில்வலங் கொண்டுதிரு
முன்வணங்கச் சாருங் காலை.
12.280   12 st/nd Thirumurai   Song # 1177   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மங்கலதூ ரியநாதம்
மறுகுதொறும் நின்றியம்பப்
பொங்கியநான் மறையோசை
கடலோசை மிசைபொலியத்
தங்குநறுங் குறையகிலின்
தழைத்தசெழும் புகையினுடன்
செங்கனல்ஆ குதிப்புகையும்
தெய்வவிரை மணம்பெருக.
12.280   12 st/nd Thirumurai   Song # 1230   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மங்கலம் பொலிய ஏந்தி
மாதரார் முன்பு செல்லக்
கங்கையின் கொழுந்து செம்பொன்
இமவரை கலந்த தென்ன
அங்கவர் செம்பொன் மாடத்
தாதிபூ மியினுட் புக்கார்
எங்களை வாழ முன்னாள்
ஏடுவை கையினுள் இட்டார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மங்கலநல் லியம்முழக்கம்
மறைமுழக்கம் வானளப்ப
அங்கணர்தஞ் சீரடியார்க்
களவிறந்த நிதியளித்துத்
தங்கள்மர பினில்உரிமைச்
சடங்குதச தினத்தினிலும்
பொங்குபெரு மகிழ்ச்சியுடன்
புரிந்துகாப் பணிபுனைந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 125   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மங்கலமாம் பூசனைகள்
பரவையார் செயமகிழ்ந்து
தங்கியினி தமர்கின்றார்
தம்பிரான் கோயிலினுள்
பொங்குபெருங் காலமெலாம்
புக்கிறைஞ்சிப் புறத்தணைந்து
நங்கள்பிரா னருள்மறவா
நல்விளையாட் டினைநயந்தார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2