சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பொன்
பொன்     பொன்னடி     பொன்னாற்     பொன்னைக்     பொன்னான     பொன்னால்     பொன்னை     பொன்வண்ணம்     பொன்னரி     பொன்அரி     பொன்னம்     பொன்னி     பொன்னார்     பொன்னிவள     பொன்னின்     பொன்தயங்கு     பொன்றிரளும்     பொன்தாழ்     பொன்மலைப்     பொன்தவழ்     பொன்தரத்     பொன்னிமயப்     பொன்னார்ந்த     பொன்முகலித்     பொன்ம     பொன்னிவலங்     பொன்னிதழ்க்     பொன்னிவளந்     பொன்னணி     பொன்னிநீர்     பொன்பரப்பி     பொன்மதில்சூழ்     பொன்தாது     பொன்நிற     பொன்தொடியாள்     பொன்னும்,     பொன்னும்     பொன்னே     பொன்னானை,     பொன்னவன்     பொன்னானே,     பொன்னனை    
Search limited to first 100
1.005   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் இயல் தாமரை, நீலம், நெய்தல், போதுகளால் பொலிவு எய்து பொய்கை,
கன்னியர் தாம் குடை காட்டுப்பள்ளிக் காதலனை, கடல் காழியர்கோன்-
துன்னிய இன் இசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன்-நல்ல
தன் இசையால் சொன்ன மாலைபத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே.

1.042   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் அம் கானல் வெண் திரை சூழ்ந்த பொருகடல் வேலி இலங்கை
மன்னன் ஒல்க மால்வரை ஊன்றி, மா முரண் ஆகமும் தோளும்
முன் அவை வாட்டி, பின் அருள் செய்த மூஇலைவேல் உடை மூர்த்தி
அன்னம் கன்னிப்பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே.

1.074   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் ஆர் மாடம் நீடும் செல்வப் புறவம் பதி ஆக
மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை,
தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ்மாலை
பல்-நாள் பாடி ஆட, பிரியார், பரலோகம்தானே.

1.077   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் திரண்டன்ன புரிசடை புரள, பொருகடல் பவளமொடு
அழல் நிறம் புரைய,
குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண்
நூலொடு கொழும்பொடி அணிவர்;
மின் திரண்டன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை 
ஓர்பாகமாப் பேணி,
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

1.097   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் இயல் மாடப் புரிசை நிலாவும் புறவத்து
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற
தன் இயல்பு இல்லாச் சண்பையர்கோன்-சீர்ச் சம்பந்தன்-
இன் இசைஈர்-ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே.

1.100   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரிசடைத்
துன்னிய சோதி ஆகிய ஈசன், தொல்மறை
பன்னிய பாடல் ஆடலன், மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை, உறு நோயே.

1.106   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் இயல் சீவரத்தார், புளித் தட்டையர், மோட்டு அமணர்குண்டர்,
என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில்
தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து, அழகு ஆர், தன்னை
உன்ன வினை கெடுப்பான்-திரு ஊறலை உள்குதுமே.

1.107   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் திகழ் ஆமையொடு புரிநூல் திகழ் மார்பில், நல்ல
பன்றியின் கொம்பு அணிந்து, பணைத்தோளி ஓர்பாகம் ஆக,
குன்று அன மாளிகை சூழ் கொடி மாடச் செங்குன்றூர், வானில்
மின்திகழ் செஞ்சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே.

1.111   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் திகழ் காவிரிப் பொரு புனல் சீர்
சென்று அடை கடைமுடிச் சிவன் அடியை
நன்று உணர் ஞானசம்பந்தன் சொன்ன
இன்தமிழ் இவை சொல, இன்பம் ஆமே.

1.127   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்.

1.136   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ
பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில்
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது
செந்தமிழ்த் தடங்கல்-தருமபுரம்பதியைப்
பின் நெடுவார் சடையில் பிறையும் அரவும் உடையவன்
பிணைதுணை கழல்கள் பேணுதல் உரியார்,
இன் நெடுநன் உலகு எய்துவர்; எய்திய போகமும்
உறுவர்கள்; இடர், பிணி, துயர், அணைவு இலரே.

2.022   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் ஒப்பவனும், புயல் ஒப்பவனும்,
தன் ஒப்பு அறியாத் தழல் ஆய் நிமிர்ந்தான்;
கொல் நல் படையான் குடவாயில்தனில்
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே.

2.024   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் ஏர்தரு மேனியனே! புரியும்
மின் நேர் சடையாய்! விரை காவிரியின்
நன்நீர் வயல் நாகேச்சுரநகரின்
மன்னே! என, வல்வினை மாய்ந்து அறுமே.

2.062   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் நேர் கொன்றைமாலை புரளும் அகலத்தான்,
மின் நேர் சடைகள் உடையான், மீயச்சூரானை,
தன் நேர் பிறர் இல்லானை, தலையால் வணங்குவார்
அந் நேர் இமையோர் உலகம் எய்தற்கு அரிது அன்றே.

2.071   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் தொத்த கொன்றையும் பிள்ளைமதியும் புனலும் சூடி,
பின் தொத்த வார்சடை எம்பெம்மான் இடம்போலும்
பிலயம் தாங்கி,
மன்றத்து மண்முழவம் ஓங்கி, மணி கொழித்து, வயிரம்
உந்தி,
குன்றத்து அருவி அயலே புனல் ததும்பும் குறும்பலாவே.

2.080   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன்தாது உதிரும் மணம் கொள் புனை பூங்கொன்றை
புனைந்தார்,
ஒன்றா வெள் ஏறு உயர்த்தது உடையார், அதுவே ஊர்வார்
கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
பின் தாழ்சடையார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே

3.007   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன்நிற நான்முகன், பச்சையான், என்று இவர் புக்குழித்
தன்னை இன்னான் எனக் காண்பு அரிய தழல்சோதியும்
புன்னை பொன்தாது உதிர் மல்கும் அம் தண் புகலி(ந்) நகர்,
மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே!

3.011   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன்தொடியாள் உமை பங்கன் மேவும் புனவாயிலை,
கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான்-
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன தமிழ், நன்மையால்
அற்றம் இல் பாடல்பத்து, ஏத்த வல்லார் அருள் சேர்வரே.

3.032   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன்னும், மா மணிகளும், பொருதிரைச் சந்து அகில்
தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவு உற;
அன்னம் ஆம் அயனும், மால், அடி முடி தேடியும்
இன்ன ஆறு என ஒணான்-ஏடகத்து ஒருவனே.

3.052   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் தயங்கு-இலங்கு ஒளி(ந்) நலம் குளிர்ந்த புன்சடை
பின் தயங்க ஆடுவாய்! பிஞ்ஞகா! பிறப்பு இலீ!
கொன்றை அம் முடியினாய்! கூடல் ஆலவாயிலாய்!
நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே.

3.053   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் அம் மல்கு தாமரைப்போது தாது வண்டு இனம்
அன்னம் மல்கு தண்துறை ஆனைக்காவில் அண்ணலைப்
பன்ன வல்ல, நால்மறை பாட வல்ல, தன்மையோர்
முன்ன வல்லர், மொய்கழல்; துன்ன வல்லர், விண்ணையே.

3.055   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் போலும் சடைமேல் புனல் தாங்கிய புண்ணியனே!
மின் போலும் புரிநூல், விடை ஏறிய வேதியனே!
தென்பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி தன்னில்
அன்பா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

3.063   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் அம் பூங் கழிக் கானல் புணர் துணையோடு உடன் வாழும்
அன்னங்காள்! அன்றில்காள்! அகன்றும் போய் வருவீர்காள்
கல்-நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய
இன் அமுதன் இணை அடிக்கீழ் எனது அல்லல் உரையீரே!

3.077   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒரு பங்கர், புனல் தங்கு சடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்த விறல் வித்தகர், மகிழ்ந்து உறைவு இடம்
கன்னி இளவாளை குதிகொள்ள, இள வள்ளை படர் அள்ளல் வயல்வாய்
மன்னி இள மேதிகள் படிந்து, மனை சேர் உதவி
மாணிகுழியே.

3.085   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் அன புரிதரு சடையினர், பொடி அணி வடிவினர்
உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார்
தென்னென இசை முரல் சரிதையர், திகழ்தரும் மார்பினில்
மின் என மிளிர்வது ஒர் அரவினர், பதி விழிமிழலையே.

3.089   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன்னும் மா மணி கொழித்து, எறி புனல், கரைகள் வாய் நுரைகள் உந்தி,
கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ
மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின், நாளும்
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண், நெஞ்சமே!
அஞ்சல், நீயே!

3.101   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் திகழ் சுண்ண வெண்நீறு பூசி, புலித்தோல் உடை
ஆக,
மின் திகழ் சோதியர், பாடல் ஆடல் மிக்கார், வரு மாட்சி
என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார்
குன்றினால் அன்று அரக்கன் தடந்தோள் அடர்த்தார்,
கொளும் கொள்கையே!

3.106   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் இயலும் திருமேனி தன்மேல் புரிநூல் பொலிவித்து
மின் இயலும் சடை தாழ, வேழ உரி போர்த்து, அரவு ஆட,
மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழி வாணர் தம்மேல்
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம்; பிணி போமே.

3.121   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூணநூல் புரள,
மின்னின் ஆர் உருவின், மிளிர்வது ஓர் அரவம், மேவு
வெண்நீறு மெய் பூசி,
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி, தொன்மை
ஆர் தோற்றமும் கேடும்
பன்னினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.

4.001   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர்!
புரி புன் சடையீர்! மெலியும் பிறையீர்
துன்பே, கவலை, பிணி, என்று இவற்றை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என்போலிகள் உம்மை இனித் தெளியார்,
அடியார் படுவது இதுவே ஆகில்;
அன்பே அமையும்-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

4.017   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல்
இன் அருள் சூடி எள் காதும் இராப்பகல்,
மன்னவர் கின்னரர் வானவர் தாம், தொழும்
அன்னவர்-ஆரூர் அரநெறியாரே.

4.035   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் திகழ் கொன்றை மாலை, புதுப்புனல், வன்னி, மத்தம்,
மின்திகழ் சடையில் வைத்து, மேதகத் தோன்றுகின்ற
அன்று அவர் அளக்கல் ஆகா அனல்-எரி ஆகி நீண்டார்
இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம் கொண்டாரே.

4.044   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந் தண் மார்பர்
நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று,
குன்றியில் அடுத்த மேனிக் குவளை அம் கண்டர்; எம்மை
இன் துயில் போது கண்டார்; இனியர்-ஏகம்பனாரே.

4.081   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து, புரிசடைகள்
மின் ஒத்து இலங்க, பலி தேர்ந்து, உழலும் விடங்க வேடச்-
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என் அத்தன் ஆடல் கண்டு இன்பு உற்றதால், இவ் இரு நிலமே.

4.105   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன்னை வகுத்தன்ன மேனியனே! புணர் மென் முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்தனே, தமியேற்கு இரங்காய்!
புன்னை மலர்த்தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே!
என்னை வகுத்திலையேல், இடும்பைக்கு இடம் யாது? சொல்லே!

4.105   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் அளவு ஆர் சடைக் கொன்றையினாய்! புகலூர்க்கு அரசே!
மன் உள தேவர்கள் தேடும் மருந்தே! வலஞ்சுழியாய்!-
என் அளவே, உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார்!
உன் அளவே, எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே!

4.109   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு, விண்ணப்பம்: போற்றி செய்யும்
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல், இருங் கூற்று அகல
மின் ஆரும் மூஇலைச்சூலம் என்மேல் பொறி-மேவு கொண்டல்
துன் ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே!

5.003   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் ஒப்பானை, பொன்னில் சுடர் போல்வது ஓர்
மின் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
அன் ஒப்பானை, அரத்துறை மேவிய
தன் ஒப்பானை, - கண்டீர்- நாம் தொழுவதே.

5.011   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் அம் கொன்றையும், பூ அணி மாலையும்,
பின்னும் செஞ்சடைமேல் பிறை சூடிற்று;
மின்னும் மேகலையாளொடு, மீயச்சூர்,
இன்ன நாள் அகலார், இளங்கோயிலே.

5.040   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் செய் மா முடி வாள் அரக்கன் தலை-
அஞ்சும் நான்கும் ஒன்று(ம்) இறுத்தான் அவன்
என் செயான்? கழிப்பாலையுள் எம்பிரான்
துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே.

5.046   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் ஒத்த(ந்) நிறத்தானும் பொருகடல்
தன் ஒத்த(ந்) நிறத்தானும் அறிகிலா,
புன்னைத் தாது பொழில், புகலூரரை,
என் அத்தா! என, என் இடர் தீருமே.

5.096   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் உள்ளத் திரள் புன்சடையின் புறம்,
மின் உள்ளத் திரள் வெண்பிறையாய்! இறை
நின் உள்ளத்து அருள் கொண்டு, இருள் நீங்குதல்
என் உள்ளத்து உளது; எந்தைபிரானிரே!

6.014   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் நலத்த நறுங்கொன்றை சடைமேல்
வைத்தார்; புலி உரியின் அதள் வைத்தார்; புனலும் வைத்தார்;
மன் நலத்த திரள் தோள்மேல் மழுவாள் வைத்தார்; வார் காதில் குழை வைத்தார்; மதியும் வைத்தார்;
மின் நலத்த நுண் இடையாள் பாகம் வைத்தார்; வேழத்தின் உரி வைத்தார்; வெண்நூல் வைத்தார்;
நல்-நலத்த திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

6.022   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் மணி அம் பூங்கொன்றை மாலையானை, புண்ணியனை, வெண் நீறு பூசினானை,
சில்மணிய மூ இலைய சூலத்தானை, தென் சிராப்பள்ளிச் சிவலோக(ன்)னை,
மன் மணியை, வான் சுடலை ஊராப் பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை,-
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண்
நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

6.024   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன்தாது மலர்க்கொன்றை சூடினான்காண்; புரிநூலன்காண்; பொடி ஆர் மேனியான்காண்;
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான்காண்; மறை ஓதி காண்; எறிநீர் நஞ்சு உண்டான்காண்;
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான்காண்-;
இறையவன்காண்; மறையவன்காண்; ஈசன் தான்காண்;
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான் தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.

6.029   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன்னே போல்-திருமேனி உடையான்தன்னை, பொங்கு வெண்நூலானை, புனிதன்தன்னை,
மின்னானை, மின் இடையாள் பாகன்தன்னை, வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தான்தன்னை,
தன்னானை, தன் ஒப்பார் இல்லாதானை, தத்துவனை, உத்தமனை, தழல் போல் மேனி
அன்னானை, ஆரூரில் அம்மான்தன்னை- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

6.030   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் நலத்த நறுங்கொன்றைச் சடையினான்காண்;   புகலூரும் பூவணமும் பொருந்தினான்காண்;
மின் நலத்த நுண் இடையாள் பாகத்தான்காண்; வேதியன்காண்; வெண்புரிநூல் மார்பினான்காண்;
கொல்-நலத்த மூ இலை வேல் ஏந்தினான்காண்; கோலமா நீறு அணிந்த மேனியான்காண்-
செந் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.

6.032   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் இயலும் மேனியனே, போற்றி போற்றி!
பூதப்படை உடையாய், போற்றி போற்றி!
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய், போற்றி!
மறி ஏந்து கையானே, போற்றி போற்றி!
உன்னுமவர்க்கு உண்மையனே, போற்றி போற்றி!
உலகுக்கு ஒருவனே, போற்றி போற்றி!
சென்னி மிசை வெண் பிறையாய், போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

6.039   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் இயலும் திருமேனி உடையான் கண்டாய்;
பூங்கொன்றைத்தார் ஒன்று அணிந்தான் கண்டாய்;
மின் இயலும் வார்சடை எம்பெருமான் கண்டாய்;
வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தான் கண்டாய்;
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய்;
தாங்க (அ)ரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய்;
மன்னிய மங்கை ஓர் கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.

6.059   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் இலங்கு கொன்றை அம்தார்-மாலை சூடிப்   புகலூரும் பூவணமும் பொருந்தினாரும்,
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும், குளிர் ஆர்ந்த செஞ்சடை எம் குழகனாரும்,
தென் இலங்கை மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள் செய்தாரும்,
மின் இலங்கு நுண் இடையாள் பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

6.065   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் இசையும் புரிசடை எம் புனிதன் தான் காண், பூதகண நாதன் காண், புலித்தோல் ஆடை
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண், சங்க வெண்குழைக் காதின் சதுரன் தான் காண்
மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க, அடி அடர்ப்ப, மீண்டு அவன் தன் வாயில்
இன் இசை கேட்டு, இலங்கு ஒளி வாள் ஈந்தோன், கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

6.068   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் தூணை, புலால் நாறு கபாலம் ஏந்திப் புவலோகம் எல்லாம் உழி தந்தானை,
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை, முழு முதல் ஆய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லாக்
கல்-தூணை, காளத்தி மலையான் தன்னை,   கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால்
செற்றானை, திரு முதுகுன்று உடையான்
தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.

6.097   6 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன்; புலித்தோல் உடை கண்டேன்; புணரத் தன்மேல்
மின் ஒத்த நுண் இடையாள் பாகம் கண்டேன்; மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன்;
அன்னத் தேர் ஊர்ந்த அரக்கன் தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன்;
சின்ன மலர்க் கொன்றைக் கண்ணி கண்டேன்- சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே!.

7.024   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொன் ஆர் மேனியனே! புலித்தோலை அரைக்கு அசைத்து,
மின் ஆர் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!
மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே!
அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.

7.025   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை அரைக்கு அசைத்தீர்;
முன் செய்த மூ எயிலும்(ம்) எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்;
மின் செய்த நுண் இடையாள் பரவை இவள் தன் முகப்பே,
என் செய்த ஆறு, அடிகேள்! அடியேன் இட்டளம் கெடவே?.

7.038   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொன்னானை, மயில் ஊர்தி முருகவேள் தாதை, பொடி ஆடு திருமேனி, நெடுமால் தன்    முடிமேல்-
தென்னானை, குடபாலின் வடபாலின் குணபால் சேராத சிந்தையான், செக்கர்வான் அந்தி
அன்னானை, அமரர்கள் தம் பெருமானை, கருமான் உரியானை, அதிகை மா நகருள் வாழ்பவனை,
என்னானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .

7.045   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொன்னவன் பொன்னவன்; பொன்னைத் தந்து என்னைப் போக விடா
மின்னவன் மின்னவன்; வேதத்தின் உள் பொருள் ஆகிய
அன்னவன் அன்னவன்; ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன்! என் மனத்து இன்புற்று இருப்பனே.

7.059   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் திருவும் புணர்ப்பானை,
பின்னை என் பிழையைப் பொறுப்பானை, பிழை எலாம் தவிரப் பணிப்பானை,
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை, எளி வந்த பிரானை,
அன்னம் வைகும் வயல்-பழனத்து அணி ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

7.069   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொன் நலம் கழனிப் புது விரை மருவி, பொறி வரிவண்டு இசை பாட,
அம் நலம் கமலத் தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட, அள்ளல்
செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லை-வாயிலாய்! திருப் புகழ் விருப்பால்
பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய், பாசுபதா! பரஞ்சுடரே! .

7.089   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொன் இலங்கு நறுங்கொன்றை புரிசடைமேல் பொலிந்து இலங்க,
மின் இலங்கு நுண் இடையாள் பாகமா, எருது ஏறி,
துன்னி இருபால் அடியார் தொழுது ஏத்த, அடியேனும்
உன்ன தம் ஆய்க் கேட்டலுமே, உளோம் போகீர்! என்றானே!

7.089   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொன் நவிலும் கொன்றையினாய்! போய் மகிழ்க்கீழ் இரு! என்று
சொன்ன எனைக் காணாமே, சூளுறவு மகிழ்க்கீழே
என்ன வல்ல பெருமானே! இங்கு இருந்தாயோ? என்ன,
ஒன்னலரைக் கண்டால் போல், உளோம்; போகீர்! என்றானே!

7.096   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொன்னானே, புலவர்க்கு! நின் புகழ் போற்றல் ஆம்-
தன்னானே தன்னைப் புகழ்ந்திடும் தற்சோதி!
மின்னானே! செக்கர்வானத்து இள ஞாயிறு
அன்னானே! பரவையுள் மண்டளி அம்மானே!

7.101   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரிசடைமேல்
முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்றே!-
துன்னா மயூரம் சோலைதொறும் ஆட, தூரத் துணைவண்டு
தென்னா என்னும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

8.149   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பொன் இயலும் திருமேனி வெண் நீறு பொலிந்திடும் ஆகாதே?
பூ மழை, மாதவர் கைகள் குவிந்து, பொழிந்திடும் ஆகாதே?
மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே?
வீணை முரன்று எழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே?
தன் அடியார் அடி என் தலைமீது தழைப்பன ஆகாதே?
தான் அடியோமுடனே உய வந்து, தலைப்படும் ஆகாதே?
இன் இயம் எங்கும் நிறைந்து, இனிது ஆக இயம்பிடும் ஆகாதே?
என்னை முன் ஆளுடை ஈசன், என் அத்தன், எழுந்தருளப் பெறிலே!

8.211   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பொன்னார் சடையோன் புலியூர்
   புகழா ரெனப்புரிநோய்
என்னா லறிவில்லை யானொன்
   றுரைக்கிலன் வந்தயலார்
சொன்னா ரெனுமித் துரிசுதுன்
   னாமைத் துணைமனனே
என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு
   நீர்மை இனியவர்க்கே.

8.213   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பொன்னனை யான்தில்லைப் பொங்கர
   வம்புன் சடைமிடைந்த
மின்னனை யானருள் மேவலர்
   போன்மெல் விரல்வருந்த
மென்னனை யாய்மறி யேபறி
   யேல்வெறி யார்மலர்கள்
இன்னன யான்கொணர்ந் தேன்மணந்
   தாழ்குழற் கேய்வனவே.

8.215   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பொன்னும் மணியும் பவளமும்
   போன்று பொலிந்திலங்கி
மின்னுஞ் சடையோன் புலியூர்
   விரவா தவரினுள்நோய்
இன்னு மறிகில வாலென்னை
   பாவம் இருங்கழிவாய்
மன்னும் பகலே மகிழ்ந்திரை
   தேரும்வண் டானங்களே. 9;

8.223   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பொன்னி வளைத்த புனல்சூழ்
   நிலவிப் பொலிபுலியூர்
வன்னி வளைத்த வளர்சடை
   யோனை வணங்கலர்போல்
துன்னி வளைத்தநந் தோன்றற்குப்
   பாசறைத் தோன்றுங்கொலோ
மின்னி வளைத்து விரிநீர்
   கவரும் வியன்முகிலே.

8.224   8 st/nd Thirumurai   Song # 11   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பொன்னணி யீட்டிய ஓட்டரும்
   நெஞ்சமிப் பொங்குவெங்கா
னின்னணி நிற்குமி தென்னென்ப
   தேஇமை யோரிறைஞ்சும்
மன்னணி தில்லை வளநக
   ரன்ன அன் னந்நடையாள்
மின்னணி நுண்ணிடைக் கோபொருட்
   கோநீ விரைகின்றதே.

10.101   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.

10.121   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.

10.401   10 st/nd Thirumurai   Song # 23   திருமூலர்   திருமந்திரம்  
பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறிகிஞ் சுகத்தாகும்
பொன்னான மந்திரம் புகைஉண்டு பூரிக்கில்
பொன்னாகும் வல்லோர்க் குடம்புபொற் பாதமே.

10.503   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
பொன்னால் சிவசா தனம்பூதி சாதனம்
நன்மார்க்க சாதன மாஞான சாதனம்
துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனம்
சன்மார்க்க சாதன மாம்சுத்த சைவர்க்கே.

10.808   10 st/nd Thirumurai   Song # 20   திருமூலர்   திருமந்திரம்  
பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னில் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தன தன்கர ணங்கள்தாம்
தன்னில் மறைந்தன தன்கர ணங்களே.

11.006   11 st/nd Thirumurai   Song # 1   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே.

11.008   11 st/nd Thirumurai   Song # 72   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு
துன்னரி மாலையாச் சூடுவார் முன்னம்

11.008   11 st/nd Thirumurai   Song # 140   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
பொன்அரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு
மன்னும் கழுத்தை மகிழ்வித்தாள் பொன்னனாள்

11.032   11 st/nd Thirumurai   Song # 54   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
பொன்னம் பலத்துறை புண்ணிய
னென்பர் புயல்மறந்த
கன்னன்மை தீரப் புனிற்றுக்
கலிக்காமற் கன்றுபுன்கூர்
மன்னு மழைபொழிந் தீரறு
வேலிகொண் டாங்கவற்கே
பின்னும் மழைதவிர்த் தீரறு
வேலிகொள் பிஞ்ஞகனே.

11.033   11 st/nd Thirumurai   Song # 1   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
பொன்னி வடகரை சேர்நாரை
யூரிற் புழைக்கைமுக
மன்னன் அறுபத்து மூவர்
பதிதேம் மரபுசெயல்
பன்னஅத் தொண்டத் தொகைவகை
பல்குமந் தாதிதனைச்
சொன்ன மறைக்குல நம்பிபொற்
பாதத் துணைதுணையே.

11.034   11 st/nd Thirumurai   Song # 43   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
பொன்னார் மதில்சூழ் புகலிக்
கரசை, யருகர்தங்கள்
தென்னாட் டரணட்ட சிங்கத்
தினை,யெஞ் சிவனிவனென்(று)
அந்நாள் குதலைத் திருவாய்
மொழிக ளருளிச்செய்த
என்னானை யைப்பணி வார்க்கில்லை,
காண்க யமாலயமே.

11.037   11 st/nd Thirumurai   Song # 70   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை
மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை முன்னே

12.000   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்
பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது
தன்னை யார்க்கும் அறிவரி யான்என்றும்
மன்னி வாழ்கயி லைத்திரு மாமலை.
12.000   12 st/nd Thirumurai   Song # 123   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
பொன்தயங்கு மதிலாரூர்ப்
பூங்கோயில் அமர்ந்தபிரான்
வென்றிமனு வேந்தனுக்கு
வீதியிலே அருள்கொடுத்துச்
சென்றருளும் பெருங்கருணைத்
திறங்கண்டு தன்னடியார்க்கு
என்றும்எளி வரும்பெருமை
ஏழுலகும் எடுத்தேத்தும்.
12.000   12 st/nd Thirumurai   Song # 223   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
பொன்றிரளும் மணித்திரளும்
பொருகரிவெண் கோடுகளும்
மின்றிரண்ட வெண்முத்தும்
விரைமலரும் நறுங்குறடும்
வன்றிரைக ளாற்கொணர்ந்து
திருவதிகை வழிபடலால்
தென்திசையில் கங்கையெனுந்
திருக்கெடிலம் திளைத்தாடி.
12.060   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
பொன்தாழ் அருவி மலைநாடு
கடந்து கடல்சூழ் புவியெங்கும்
சென்றா ளுடையார் அடியவர்தம்
திண்மை ஒழுக்க நடைசெலுத்தி
வன்தாள் மேருச் சிலைவளைத்துப்
புரங்கள் செற்ற வைதிகத்தேர்
நின்றா ரிருந்த திருவாரூர்
பணிந்தார் நிகரொன் றில்லாதார்.
12.080   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
பொன்மலைப் புலிவென் றோங்கப்
புதுமலை யிடித்துப் போற்றும்
அந்நெறி வழியே யாக 
அயல்வழி யடைத்த சோழன்
மன்னிய அநபா யன்சீர் 
மரபின்மா நகர மாகும்
தொன்னெடுங் கருவூ ரென்னும்
சுடர்மணி வீதி மூதூர்.
12.080   12 st/nd Thirumurai   Song # 35   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
பொன்தவழ் அருவிக் குன்றம்
எனப்புரள் களிற்றின் முன்பு
நின்றவர் மன்று ளென்றும்
நிருத்தமே பயிலும் வெள்ளிக்
குன்றவ ரடியா ரானார்
கொன்றவ ரிவரென் றோரான்
வென்றவர் யாவ ரென்றான்
வெடிபட முழங்குஞ் சொல்லான்.
12.110   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
பொன்தரத் தாரு மென்று
புகன்றிட வணிகன் தானும்
என்தர விசைந்த தென்னத்
தாலியைக் கலயர் ஈந்தார்
அன்றவன் அதனை வாங்கி
அப்பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார்
நிறைந்தெழு களிப்பி னோடும்.
12.190   12 st/nd Thirumurai   Song # 115   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
பொன்னிமயப் பொருப்பரையன்
பயந்தருளும் பூங்கொடிதன்
நன்னிலைமை அன்றளக்க
எழுந்தருளும் நம்பெருமான்
தன்னுடைய அடியவர்தம்
தனித்தொண்டர் தம்முடைய
அந்நிலைமை கண்டன்பர்க்
கருள்புரிவான் வந்தணைவார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 151   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பொன்னார்ந்த திருவடிக்கென்
விண்ணப்பம் என்றெடுத்து
முன்னாகி எப்பொருட்கும்
முடிவாகி நின்றானைத்
தன்னாகத் துமைபாகங்
கொண்டானைச் சங்கரனை
நன்னாமத் திருவிருத்தம்
நலஞ்சிறக்கப் பாடுதலும்.
12.210   12 st/nd Thirumurai   Song # 344   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பொன்முகலித் திருநதியின்
புனிதநெடுந் தீர்த்தத்தில்
முன்முழுகிக் காளத்தி
மொய்வரையின் தாழ்வரையில்
சென்னியுறப் பணிந்தெழுந்து
செங்கண்விடைத் தனிப்பாகர்
மன்னுமலை மிசையேறி
வலங்கொண்டு வணங்குவார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 374   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பொன்ம லைக்கொடி யுடன்அமர்
வெள்ளியம் பொருப்பில்
தன்மை யாம்படி சத்தியுஞ்
சிவமுமாஞ் சரிதைப்
பன்மை யோனிகள் யாவையும்
பயில்வன பணிந்தே
மன்னு மாதவர் தம்பிரான்
கோயில்முன் வந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 391   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பொன்னிவலங் கொண்டதிருப்
பூந்துருத்தி அவர்இருப்பக்
கன்மனத்து வல்அமணர்
தமைவாதில் கட்டழித்துத்
தென்னவன்கூன் நிமிர்த்தருளித்
திருநீற்றின் ஒளிகண்டு
மன்னியசீர்ச் சண்பைநகர்
மறையவனார் வருகின்றார்.

12.280   12 st/nd Thirumurai   Song # 124   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பொன்னிதழ்க் கொன்றை வன்னி
புனலிள மதியம்நீடு
சென்னியர் திருவெண் காட்டுத்
திருத்தொண்டர் எதிரே சென்றங்
கின்னதன் மையர்க ளானார்
எனவொணா மகிழ்ச்சி பொங்க
மன்னுசீர்ச் சண்பை யாளும்
மன்னரைக் கொண்டு புக்கார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 754   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பொன்னிவளந் தருநாட்டுப்
புனற்பழனப் புறம்பணைசூழ்
கன்னிமதிற் கழுமலம்நாம்
கருதுமூர் எனச்சிறந்த
பன்னிரண்டு பெயர்பற்றும்
பரவியசொல் திருப்பதிகம்
தென்னவன்முன் பருள்செய்தார்
திருஞான சம்பந்தர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 896   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பொன்னிவளந் தருநாடு புகுந்து மிக்க
பொருவில்சீர்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்
பன்னகப்பூ ணணிந்தவர்தங் கோயில் தோறும்
பத்தருடன் பதியுள்ளோர் போற்றச் சென்று
கன்னிமதில் திருக்களரும் போற்றிக் கண்டங்
கறையணிந்தார் பாதாளீச் சுரமும் பாடி
முன்னணைந்த பதிபிறவும் பணிந்து போற்றி
முள்ளிவாய்க் கரையணைந்தார் முந்நூல் மார்பர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1226   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பொன்னணி சங்கின் வெள்ளம்
பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப
மன்னிய தரளப் பத்தி
வளர்மணிச் சிவிகை நின்றும்
பன்மலர் நறும்பொற் சுண்ணம்
பரந்தபா வாடைமீது
முன்னிழிந் தருளி வந்தார்
மூவுல குய்ய வந்தார்.
12.350   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
பொன்னிநீர் நாட்டின் நீடும்
பொற்பதி புவனத் துள்ளோர்
இன்மையால் இரந்து சென்றார்க்
கில்லையென் னாதே ஈயும்
தன்மையார் என்று நன்மை
சார்ந்தவே தியரைச் சண்பை
மன்னனார் அருளிச் செய்த
மறைத்திரு வாக்கூர் ஆக்கூர்.
12.370   12 st/nd Thirumurai   Song # 46   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
பொன்னார் மௌலிச் சேரலனார்
போற்றும் அமைச்சர்க் கஃதியம்பி
நன்னாள் கொண்டு பெரும்பயணம்
எழுக வென்று நலஞ்சாற்ற
மின்னா ரயில்வேற் குலமறவர்
வென்றி நிலவுஞ் சிலைவீரர்
அந்நாட் டுள்ளார் அடையநிரந்
தணைந்தார் வஞ்சிஅக நகர்வாய்.
12.370   12 st/nd Thirumurai   Song # 130   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
பொன்பரப்பி மணிவரன்றிப்
புனல்பரக்குங் காவேரித்
தென்கரைபோய்ச் சிவன்மகிழ்ந்த
கோயில்பல சென்றிறைஞ்சி
மின்பரப்புஞ் சடையண்ணல்
விரும்புதிருக் கண்டியூர்
அன்புருக்குஞ் சிந்தையுடன்
பணிந்துபுறத் தணைந்தார்கள்.
Search limited to first 100
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D