சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பெருந்
பெருந்     பெருந்தடங்கண்     பெருந்தன்மைத்     பெருந்தன்மை     பெருந்தடங்     பெருந்தகையை,     பெருந்தகை    
1.099   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பெருந் தண்சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி,
குருந்தம் ஏறிச் செவ்வழி பாடும் குற்றாலம்
இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப,
அருந் தண் மேய நன்நகர்போலும்; அடியீர்காள்!

1.129   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடு உடைய
மலைச் செல்வி பிரியா மேனி
அருந்தகைய சுண்ணவெண் நீறு அலங்கரித்தான்,
அமரர் தொழ, அமரும்கோயில்
தரும் தடக்கை முத்தழலோர் மனைகள் தொறும்
இறைவனது தன்மை பாடிக்,
கருந்தடங்கண்ணார் கழல் பந்து அம்மானைப்
பாட்டு அயரும் கழுமலமே.

3.092   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பெருந் தண் மா மலர்மிசை அயன் அவன் அனையவர், பேணு கல்வித்
திருந்து மா மறையவர், திரு நெல்வேலி உறை செல்வர் தம்மை,
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடி ஆட, கெடும், அருவினையே.

4.016   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பெருந் தாழ் சடை முடி மேல் பிறை சூடி,
கருந்தாழ் குழலியும் தாமும் கலந்து,
திருந்தா மனம் உடையார் திறத்து என்றும்
பொருந்தார்-புகலூர்ப் புரிசடையாரே.

4.073   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னை
வருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும்
அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத்
திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

6.065   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பெருந் தவத்து எம் பிஞ்ஞகன் காண், பிறை சூடீ
காண், பேதையேன் வாதை உறு பிணியைத் தீர்க்கும்
மருந்து அவன் காண், மந்திரங்கள் ஆயினான் காண், வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண்,
அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம்
அமர்ந்தவன் காண், அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

6.084   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை, பேணி நினைந்து எழுவார் தம் மனத்தே மன்னி
இருந்த மணி விளக்கு அதனை, நின்ற பூமேல் எழுந்தருளி இருந்தானை, எண்தோள் வீசி
அருந் திறல் மாநடம் ஆடும் அம்மான் தன்னை, அம் கனகச்சுடர்க் குன்றை, அன்று ஆலின்கீழ்த்
திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள் செய்தானை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

7.102   7 st/nd Thirumurai   Song # 5      
பெருந்தகை வேழம் தன்னைப் பிளிறிட உரி செய் தானே!
மருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மாமறைக் காடு(டு) அமர்ந்தாய்!
கருத்தில னேனும் நின் தன் கழல் அடி பணிந்து நின்றேன்
அருத்தியை அறிவது(து) அன்றோ, எம்மை ஆள் உகக்கும் ஆறே!

10.708   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
பெருந்தன்மைத் தான்என யான்என வேறாய்
இருந்ததும் இல்லைஅ தீசன் அறியும்
பொருந்தும் உடல்உயிர்போல் உண்மை மெய்யே
திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே. 9,

10.712   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும்என் நெஞ்சிடங் கொள்ள
வருந்தன்மை யளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கநின் றாரே.

12.290   12 st/nd Thirumurai   Song # 365   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பெருந்தடங் கண்ணி னாரும்
பிரான்முன்பு மிகவும் அஞ்சி
வருந்திய வுள்ளத் தோடு
மலர்க்கரங் குழல்மேற் கொண்டே
அருந்திரு மறையோ ராகி
அணைந்தீர்முன் னடியேன் செய்த
இருந்தவப் பயனாம் என்ன
எய்திய நீரோ என்பார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000