| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பரிந்த
பரிந்தவன்,
பரிந்துரைப்பார்
பரிந்து
பரிந்த
பரிந்தசெஞ்
1.109
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பரிந்தவன், பல் முடி அமரர்க்கு ஆகித்
திரிந்தவர் புரம் அவை தீயின் வேவ
வரிந்த வெஞ்சிலை பிடித்து, அடுசரத்தைத்
தெரிந்தவன், வள நகர் சிரபுரமே.
3.123
3 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணிதன் உயிர்மேல் வரும் கூற்றைத்
திரிந்திடா வண்ணம் உதைத்து, அவற்கு அருளும் செம்மையார்; நம்மை ஆள் உடையார்
விரிந்து உயர் மௌவல், மாதவி, புன்னை, வேங்கை, வண் செருந்தி, செண்பகத்தின்
குருந்தொடு, முல்லை, கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே.
7.064
7 st/nd Thirumurai
Song # 8
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரிந்த சுற்றமும், மற்று வன் துணையும், பலரும், கண்டு அழுது எழ உயிர் உடலைப்
பிரிந்து போய் இது நிச்சயம் அறிந்தால், பேதை வாழ்வு எனும் பிணக்கினைத் தவிர்ந்து;
கருந் தடங்கண்ணி பங்கனை, உயிரை, கால காலனை, கடவுளை, விரும்பி,
செருந்தி பொன் மலர் திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
8.127
8 st/nd Thirumurai
Song # 6
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பரிந்து வந்து, பரம ஆனந்தம், பண்டே, அடியேற்கு அருள்செய்ய,
பிரிந்து போந்து, பெரு மா நிலத்தில் அரு மால் உற்றேன், என்று என்று,
சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர், உரோமம் சிலிர்ப்ப, உகந்து அன்பு ஆய்,
புரிந்து நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
9.007
9 st/nd Thirumurai
Song # 7
சேந்தனார்
திருவிசைப்பா
பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ
பவளத்தின் குழவியோ பசும்பொன்
சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ
சுந்தரத்(து) அரசிது என்னத்
தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்
மையல்கொண்(டு) ஐயறும் வகையே.
11.009
11 st/nd Thirumurai
Song # 34
நக்கீரதேவ நாயனார்
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
பரிந்துரைப்பார் சொற்கேளாள் எம்பெருமான் பாதம்
பிரிந்திருக்க கில்லாமை பேசும் - புரிந்தமரர்
நாதா வா காளத்தி நம்பா வா என்றென்றென்
மாதாவா உற்ற மயல்.
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000