சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நாவ
நாவிக்குக்     நாவின்     நாவியின்     நாவுக்கு     நாவிகண்     நாவாய்     நாவார்     நாவலர்கோன்     நாவலூர்     நாவுக்     நாவினுக்     நாவாண்ட     நாவினுக்கு     நாவ     நாவலர்தம்     நாவலர்மன்     நாவாய     நாவால்     நாவல்    
3.066   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாவாய பிறைச் சென்னி, நலம் திகழும் இலங்கு இப்பி,
கோவாத நித்திலங்கள், கொணர்ந்து எறியும் குளிர்கானல்
ஏ ஆரும் வெஞ்சிலையால் எயில் மூன்றும் எரிசெய்த
தேவாதி தேவனார் திரு வேட்டக்குடியாரே.

5.031   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நாவால் நன்று நறுமலர்ச் சேவடி
ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார், வினை
காவாய்! என்று தம் கைதொழுவார்க்கு எலாம்
ஆவா! என்றிடும்-ஆனைக்கா அண்ணலே.

5.052   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நாவல் அம்பெருந்தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி, வினையொடு
பாவம் ஆயின பற்று அறுவித்திடும்
தேவர்போல்-திரு நாகேச்சுரவரே.

7.078   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நாவின் மிசை அரைய(ன்)னொடு, தமிழ் ஞானசம்பந்தன்,
யாவர் சிவன் அடியார்களுக்கு, அடியான் அடித்தொண்டன்,
தேவன் திருக்கேதாரத்தை ஊரன்(ன்) உரை செய்த
பாவின் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே.

10.306   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
நாவிக்குக் கீழே பன்னிரண் டங்குலந்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிகிலர்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே. 

10.318   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி ஊனே. 

10.402   10 st/nd Thirumurai   Song # 43   திருமூலர்   திருமந்திரம்  
நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியஒண் ணாதது
தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே.

10.413   10 st/nd Thirumurai   Song # 69   திருமூலர்   திருமந்திரம்  
நாவுக்கு நாயகி நன்மணி பூண்ஆரம்
பூவுக்கு நாயகி பொன்முடி ஆடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அன்றமர்ந் தாளே.

10.725   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
நாவிகண் நாசி நயன நடுவினும்
தூவியோ டைந்தும் சுடர்விடு சோதியைத்
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரு மாக உணர்ந்திருந் தாரே. 26,

11.022   11 st/nd Thirumurai   Song # 86   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
நாவாய் அகத்துளதே நாமுளமே நம்மீசன்
நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே நாவாயால்
துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும் மற்றவர்க்காள்
துய்க்கப் படுவதாஞ் சூது.

11.033   11 st/nd Thirumurai   Song # 21   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
நாவார் புகழ்த்தில்லை யம்பலத்
தானருள் பெற்றுநாளைப்
போவா னாவனாம் புறத்திருத்
தொண்டன்தன் புன்புலைபோய்
மூவா யிரவர்கை கூப்ப
முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திக ழாதனூ
ரென்பரிம் மண்டலத்தே.

12.000   12 st/nd Thirumurai   Song # 212   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
நாவலர்கோன் ஆரூரன்
தனைவெண்ணெய் நல்லூரின்
மேவுமருட் டுறையமர்ந்த
வேதியராட் கொண்டதற்பின்
பூவலருந் தடம்பொய்கைத்
திருநாவ லூர்புகுந்து
தேவர்பிரான் தனைப்பணிந்து
திருப்பதிகம் பாடினார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 316   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
நாவலூர் வந்த சைவ
நற்றவக் களிறே யென்றும்
மேவலர் புரங்கள் செற்ற
விடையவர்க் கன்ப வென்றுந்
தாவில்சீர்ப் பெருமை யாரூர்
மறையவர் தலைவ வென்றும்
மேவினர் இரண்டுபாலும்
வேறுவே றாயம் போற்ற.
12.210   12 st/nd Thirumurai   Song # 157   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நாவுக் கரசரும் இருவர்க் கரியவர்
நடமா டியதிரு எல்லைப்பால்
மேவித் தலமுற மெய்யில் தொழுதபின்
மேன்மேல் எழுதரும் விழைவோடுங்
காவிற் களிமயில் மகிழ்வுற் றெதிரெதிர்
ஆடக் கடிகமழ் கமலஞ்சூழ்
வாவித் தடமலர் வதனம் பொலிவுறு
மருதத் தண்பணை வழிவந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 197   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நாவுக்கு மன்னர்திரு
நல்லூரில் நம்பர்பால்
மேவுற்ற திருப்பணிகள்
மேவுறநா ளும்செய்து
பாவுற்ற தமிழ்மாலை
பலபாடிப் பணிந்தேத்தித்
தேவுற்ற திருத்தொண்டு
செய்தொழுகிச் செல்லுநாள்.
12.250   12 st/nd Thirumurai   Song # 35   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நாவினுக் கரசர் கேளா
நன்றுநீர் மொழிந்த வண்ணம்
யாவர்இத் தன்மை செய்தார்
என்றுமுன் எழுந்து சென்றே
ஆவிதீர் சவத்தை நோக்கி
அண்ணலார் அருளும் வண்ணம்
பாவிசைப் பதிகம் பாடிப்
பணிவிடம் பாற்று வித்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 54   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாவாண்ட பலகலையும்
நாமகளும் நலஞ்சிறப்பப்
பூவாண்ட திருமகளும்
புண்ணியமும் பொலிவெய்தச்
சேவாண்ட கொடியவர்தம்
சிரபுரத்துச் சிறுவருக்கு
மூவாண்டில் உலகுய்ய
நிகழ்ந்ததனை மொழிகின்றேன்.
12.280   12 st/nd Thirumurai   Song # 493   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாவுக் கரசர் எழுந்த ருளும்
நல்லதிரு வார்த்தை கேட்ட போதே
சேவில் திகழ்ந்தவர் மைந்த ரான
திருஞான சம்பந்தர் சிந்தை அன்பு
மேவுற்ற காதல் மிகப் பெருக
விரைந்தெதிர் கொள்ளமெய் யன்ப ரோடும்
பூவிற் பொலிபொய்கை சூழ்புக லூர்ப்
புறம்பணை எல்லை கடந்து போந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 521   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாவினுக் கரசரும் நம்பிசீர்
முருகரும் மற்று நாமச்
சேவுகைத் தவர்திருத் தொண்டரா
னவர்கள்முன் சென்று சீதப்
பூவினிற் பொலிபுனற் புகலியார்
போதகத் தெதிர்ப ணிந்தே
மேவமற் றவருடன் கூடவே
விமலர்கோ யிலைஅ டைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 543   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாவின் தனிமன்னர்
தாமும் உடன்நண்ண
மேவிய விண்ணிழிந்த
கோயில் வலங்கொள்வார்
பூவியலும் உந்தியான்
போற்றப் புவிக்கிழிந்த
தேவியலு மெய்கண்டு
சிந்தைவியப் பெய்தினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 567   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாவினுக்கு வேந்தர்திரு மடத்திற் தொண்டர்
நாட்கூறு திருவமுது செய்யக் கண்டு
சேவுகைத்தார் அருள்பெற்ற பிள்ளை யார்தந்
திருமடத்தில் அமு தாக்கு வாரை நோக்கித்
தீவினைக்கு நீர்என்றும் அடைவி லாதீர்
திருவமுது காலத்தால் ஆக்கி இங்கு
மேவுமிக்க அடியவருக் களியா வண்ணம்
விளைந்தவா றென்கொலோ விளம்பும் என்றார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாவ லூர்மன்னர் நாதனைத் தூதுவிட் டதனுக்
கியாவ ரிச்செயல் புரிந்தன ரென்றவ ரிழிப்பத்
தேவர் தம்பிரா னவர்திறந் திருத்திய வதற்கு
மேவ வந்தஅச் செயலினை விளம்புவா னுற்றேன்.
12.290   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாவலூர் மன்ன னார்க்கு
நாயனார் அளித்த நெல்இங்
கியாவரா லெடுக்க லாகும்
இச்செய லவர்க்குச் சொல்லப்
போவன்யா னென்று போந்தார்
புகுந்தவா றருளிச் செய்து
தேவர்தம் பெருமான் ஏவ
நம்பியும் எதிரே சென்றார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 156   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
நாவலர்தம் பெருமானும்
திருவாரூர் நகராளும்
தேவர்பிரான் கழல்ஒருநாள்
மிகநினைந்த சிந்தையராய்
ஆவியைஆ ரூரானை
மறக்கலுமா மேஎன்னும்
மேவியசொல் திருப்பதிகம்
பாடியே வெருவுற்றார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 173   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
நாவலர்மன் னவர்அருளால்
விடைகொண்ட நரபதியார்
ஆவியின்ஒன் றாநண்பின்
ஆரூரர் தமைநினைந்து
மாவலரு மலர்ச்சோலை
மகோதையினின் மன்னிமலைப்
பூவலயம் பொதுநீக்கி
அரசுரிமை புரிந்திருந்தார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5