சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தேன்
தேன்     தேன்பலவின்     தேன்மருவு     தேன்நிலவு     தேன்றிக்     தேன்வண்    
1.083   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் ஆர் மதமத்தம் திங்கள் புனல் சூடி,
வான் ஆர் பொழில் அம்பர் மாகாளம் மேய,
ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான் கழல் ஏத்த, அல்லல் அடையாவே.

1.098   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை, திரை சூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்-
ஞானசம்பந்தன்-நலம் மிகு பாடல் இவை வல்லார்
வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே.

1.103   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் அகத்து ஆர் வண்டு அது உண்ட திகழ் கொன்றை-
தான் நக, தார்; தண்மதி சூடி, தலைமேல்; ஓர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும்
கானகத்தான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.

1.115   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் மலர்க் கொன்றை யோன்........
. ........ முந்தமக்கூனமன்றே.

1.123   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும்
ஏனம் அது ஆய் நிலம் அகழ் அரி, அடி முடி
தான் அணையா உரு உடையவன்-மிடை கொடி
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே.

2.002   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் உற்ற நறுமாமலர்ச் சோலையில் வண்டுஇனம்
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர்! சொலீர்
ஊன் உற்ற தலை கொண்டு, உலகு ஒக்க உழன்றதே?

2.009   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் உலாம் மலர் கொண்டு, மெய்த் தேவர்கள், சித்தர்கள்
பால்நெய் அஞ்சு உடன் ஆட்ட, முன் ஆடிய பால்வணன்
வானநாடர்கள் கைதொழு மா மழபாடி எம்
கோனை நாள்தொறும் கும்பிடவே, குறி கூடுமே.

2.085   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி, வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறைஞான ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில் அரசு ஆள்வர்; ஆணை நமதே.

3.035   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை,
கானல் ஆர் கடிபொழில் சூழ்தரும் காழியுள
ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ்
பால் நல் ஆர் மொழி வலார்க்கு, இல்லை ஆம்,
பாவமே.

3.084   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய்தவிசினில்
ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வு உடை ஒருவனும்,
வானகம் வரை அகம் மறிகடல் நிலன் எனும் எழுவகைப்
போனகம் மருவினன், அறிவு அரியவர் பதி புறவமே.

3.097   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய
மான் அமர் கரம் உடையீரே;
மான் அமர் கரம் உடையீர்! உமை வாழ்த்திய
ஞானசம்பந்தன தமிழே.

4.007   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேன் நோக்கும் கிளிமழலை உமை கேள்வன், செழும் பவளம்
தான் நோக்கும் திருமேனி தழல் உரு ஆம் சங்கரனை;
வான் நோக்கும் வளர்மதி சேர் சடையானை; வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!

4.055   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்தச் சேர்த்தி,
ஆன் இடை அஞ்சும் கொண்டு அன்பினால் அமர ஆட்டி,
வான் இடை மதியம் சூடும் வலம் புரத்து அடிகள் தம்மை
நான் அடைந்து ஏத்தப் பெற்று, நல்வினைப் பயன் உற்றேனே.

4.107   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேன் திகழ் கொன்றையும், கூவிளமாலை, திருமுடிமேல்
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான்; மலை ஆர்த்து எடுத்த
கூன் திகழ் வாள் அரக்கன் முடிபத்தும் குலைந்து விழ
ஊன்றிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

6.007   6 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தேன் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருச்
செம்பொன்பள்ளி, திருப் பூவணமும்,
வானோர் வணங்கும் மணஞ்சேரி(ய்)யும்,
மதில் உஞ்சைமாகாளம், வாரணாசி,
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம், இலங்கு
  ஆர் பருப்பதத்தோடு, ஏண் ஆர் சோலைக்
கான் ஆர் மயில் ஆர் கருமாரி(ய்)யும் - 
கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே.

7.010   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தேன் நெய் புரிந்து உழல் செஞ்சடை எம்பெருமானது இடம்; திகழ் ஐங்கணை அக்
கோனை எரித்து எரி ஆடி இடம்; குலவானது இடம்; குறையா மறை ஆம்
மானை இடத்தது ஓர் கையன் இடம்; மதம் மாறுபடப் பொழியும் மலை போல்
யானை உரித்த பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .

7.037   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தேன் நலம் கொண்ட தேன்! வண்டுகாள்! கொண்டல்காள்!
ஆன் நலம் கொண்ட எம் அடிகள் ஆரூரர்க்கு,
பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன்
ஊன் நலம் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே? .

8.109   8 st/nd Thirumurai   Song # 17   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேன் அகம் மா மலர்க் கொன்றை பாடி, சிவபுரம் பாடி, திருச் சடைமேல்
வான் அகம் மா மதிப் பிள்ளை பாடி, மால் விடை பாடி, வலக் கை ஏந்தும்
ஊன் அகம் மா மழு, சூலம், பாடி, உம்பரும் இம்பரும் உய்ய, அன்று,
போனகம் ஆக, நஞ்சு உண்டல் பாடி, பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

8.112   8 st/nd Thirumurai   Song # 14   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேன் புக்க தண் பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன்,
தான் புக்கு நட்டம் பயிலும்அது என்? ஏடீ!
தான் புக்கு நட்டம் பயின்றிலனேல், தரணி எல்லாம்,
ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம், காண்; சாழலோ!

8.113   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான்
ஊன் நாடி, நாடி வந்து, உட்புகுந்தான்; உலகர் முன்னே
நான் ஆடி ஆடி நின்று, ஓலம் இட, நடம் பயிலும்
வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ!

8.118   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேன் பழச் சோலை பயிலும் சிறு குயிலே! இது கேள் நீ,
வான் பழித்து, இம் மண் புகுந்து, மனிதரை ஆட்கொண்ட வள்ளல்;
ஊன் பழித்து, உள்ளம் புகுந்து, என் உணர்வு அது ஆய ஒருத்தன்;
மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை; நீ வரக் கூவாய்!

8.223   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
தேன்றிக் கிலங்கு கழலழல்
   வண்ணன்சிற் றம்பலத்தெங்
கோன்றிக் கிலங்குதிண் டோட்கொண்டற்
   கண்டன் குழையெழில்நாண்
போன்றிக் கடிமலர்க் காந்தளும்
   போந்தவன் கையனல்போல்
தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை
   யோமெய்யிற் றோன்றுவதே.

8.225   8 st/nd Thirumurai   Song # 29   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
தேன்வண் டுறைதரு கொன்றையன்
   சிற்றம் பலம்வழுத்தும்
வான்வண் டுறைதரு வாய்மையன்
   மன்னு குதலையின்வா
யான்வண் டுறைதரு மாலமு
   தன்னவன் வந்தணையான்
நான்வண் டுறைதரு கொங்கையெவ்
   வாறுகொ னண்ணுவதே.

11.010   11 st/nd Thirumurai   Song # 48   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு
தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து வான்குணங்கள்
பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர்
சீராட்ட நின்றான் சிலம்பு.

11.010   11 st/nd Thirumurai   Song # 49   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சந்தின்
கானமர்கற் பேரழுகு கண்குளிர மேனின்
றருவிகள்தாம் வந்திழியும் ஈங்கோயே வானோர்
வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு.

12.280   12 st/nd Thirumurai   Song # 884   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தேன்நிலவு பொழில் மதுரைப் புறத்துப் போந்த
தென்னவனார் தேவியார் அமைச்சர் சிந்தை
ஊன்நெகிழும் படியழிந்தங் கொழுகு கண்ணீர்
பாய்ந்திழிய உணர்வின்றி வீழக் கண்டே
யான்உம்மைப் பிரியாத வண்ணம் இந்நாட்
டிறைவர்பதி யெனைப்பலவும் பணிவீ ரென்று
ஞானமுணர் வார்அருள அவரும் போத
நம்பர்திருப் பரங்குன்றை நண்ணி னாரே.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000