சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் துவர்
துவர்    
1.036   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துவர் ஆடையர், தோல் உடையார்கள்,
கவர் வாய்மொழி காதல் செய்யாதே,
தவராசர்கள் தாமரையானோடு
அவர்தாம் அணை அம் தண் ஐயாறே.

1.063   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துவர் சேர் கலிங்கப் போர்வையாரும், தூய்மை இலாச் சமணும்,
கவர் செய்து உழலக் கண்ட வண்ணம், காரிகை வார் குழலார்
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய், ஆய் நலம் வவ்வுதியே?
தவர் செய் நெடுவேல் சண்டன் ஆளச் சண்பை அமர்ந்தவனே!

1.121   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துவர் உறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவர் உறு சிறுசொலை நயவன்மின்! இடு மணல்
கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழு-
மவர் உறு வினை கெடல் அணுகுதல் குணமே.

2.035   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துவர் ஆடையர், வேடம் அலாச் சமண்கையர்,
கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம்
நவை ஆர் மணி, பொன், அகில், சந்தனம், உந்திக்
குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே.

2.087   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துவர் உறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர்
தாமும், அல்ல சமணும்,
கவர் உறு சிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான்;
பிறங்கு சடையன்
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண, முறை மாதர்
பாடி மருவும்
நவமணி துன்று கோயில், ஒளி பொன் செய் மாட
நறையூரில் நம்பன் அவனே.

3.056   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துவர் உறும் ஆடையினார், தொக்க பீலியர் நக்க(அ)ரையர்
அவர் அவர் தன்மைகள் கண்டு அணுகேன்மி(ன்), அருள் பெறுவீர்
கவர் உறு சிந்தை ஒன்றி, கழி காலம் எல்லாம் படைத்த
இவர் அவர் என்று இறைஞ்சி, பிரமாபுரம் ஏத்துமினே!

3.092   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துவர் உறு விரி துகில் ஆடையர், வேடம் இல் சமணர், என்னும்
அவர் உறு சிறு சொலை அவம் என நினையும் எம் அண்ணலார் தாம்
கவர் உறு கொடி மல்கு மாளிகைச் சூளிகை மயில்கள் ஆல,
திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000