சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் திருந்த
திருந்து     திருந்தினர்     திருந்தநற்     திருந்திய     திருந்துதே     திருந்தி     திருந்தியஇன்     திருந்தியசீர்த்     திருந்த     திருந்தலார்     திருந்தா     திருந்தாத     திருந்தேன்    
2.071   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திருந்த மதி சூடி, தெண் நீர் சடைக் கரந்து, தேவி பாகம்
பொகுந்தி, பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த
செல்வர்
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இனவண்டு
யாழ்செய்,
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தணசாரல்,
குறும்பலாவே.

2.106   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திருந்தலார் புரம் தீ எழச் செறுவன; இறலின் கண் அடியாரைப்
பரிந்து காப்பன; பத்தியில் வருவன; மத்தம் ஆம் பிணிநோய்க்கு
மருந்தும் ஆவன; மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக
இருந்த நாயகன், இமையவர் ஏத்திய, இணை அடித்தலம் தானே.

3.038   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திருந்து தொண்டர்கள்! செப்புமின்-மிகச் செல்வன் த(ன்)னது திறம் எலாம்!
கருந் தடங்கண்ணினார்கள் தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன்
இருந்து நால்வரொடு, ஆல்நிழல், அறம் உரைத்ததும், மிகு வெம்மையார்
வருந்த வன் சிலையால் அம் மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே!

3.089   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணிச் சந்தம் உந்தி,
குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு,
நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவிப்
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ், நெஞ்சமே! புகல் அது ஆமே.

4.094   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
திருந்தா அமணர்தம் தீ நெறிப் பட்டு, திகைத்து, முத்தி
தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன்; வரை எடுத்த
பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய்! பாதிரிப்புலியூர்
இருந்தாய்! அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே!

7.038   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவச் சிலை வளைவித்து, ஒரு கணையால்-   தொழில் பூண்ட சிவனை,
கருந் தான மதகளிற்றின் உரியானை, பெரிய கண் மூன்றும் உடையானை, கருதாத  அரக்கன்
பெருந்தோள்கள் நால்-ஐந்தும், ஈர்-ஐந்து முடியும், உடையானைப் பேய் உருவம் ஊன்றும் உற   மலை மேல்
இருந்தானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல்   யானே! .

7.057   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
திருந்த நால்மறை பாட வல்லானை, தேவர்க்கும் தெரிதற்கு அரியானை,
பொருந்த மால்விடை ஏற வல்லானை, பூதிப்பை புலித்தோல் உடையானை,
இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன், ஆர் உயிர்க்கு எல்லாம்
மருந்து அனான் தனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .

8.129   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
இருந்தவாறு எண்ணி, ஏசறா, நினைந்திட்டு, என்னுடை எம்பிரான்' என்று என்று,
அருந்தவா! நினைந்தே, ஆதரித்து அழைத்தால், அலை கடல் அதனுளே நின்று
பொருந்த, வா; கயிலை புகு நெறி இது காண்; போதராய்' என்று அருளாயே!

8.225   8 st/nd Thirumurai   Song # 43   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
திருந்தேன் உயநின்ற சிற்றம்
   பலவர்தென் னம்பொதியில்
இருந்தேன் உயவந் திணைமலர்க்
   கண்ணின்இன் நோக்கருளிப்
பெருந்தே னெனநெஞ் சுகப்பிடித்
   தாண்டநம் பெண்ணமிழ்தம்
வருந்தே லதுவன் றிதுவோ
   வருவதொர் வஞ்சனையே.

10.314   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
திருந்து தினமத் தினத்தி னொடுநின்
றிருந்தறி நாளொன் றிரண்டிரு மூன்று
பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி
வருந்துத லின்றி மனைபுக லாமே. 

10.408   10 st/nd Thirumurai   Song # 81   திருமூலர்   திருமந்திரம்  
திருந்து சிவனும் சிலைநுத லாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்த
அருந்திட அவ்விடம் ஆரமு தாக
இருந்தனர் தானம் இளம்பிறை யென்றே.

10.813   10 st/nd Thirumurai   Song # 36   திருமூலர்   திருமந்திரம்  
திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலக் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.

10.915   10 st/nd Thirumurai   Song # 36   திருமூலர்   திருமந்திரம்  
திருந்தநற் `சீ` என் றுதறிய கையும்
அருந்தவ `வா` என் றணைத்தபொற் கையும்
பொருந்தில் அமைப்பில் இயஎன்பொற் கையும்
திருந்தத் தீ ஆகும் திருநிலை மவ்வே.

11.037   11 st/nd Thirumurai   Song # 1   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
திருந்திய சீர்ச்செந்தா மரைத் தடத்துச் சென் றோர்
இருந் தண் இளமேதி பாயப் பொருந்திய

12.250   12 st/nd Thirumurai   Song # 40   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
திருந்திய வாச நன்னீர்
அளித்திடத் திருக்கை நீவும்
பெருந்தவர் மறையோர் தம்மைப்
பிள்ளைக ளுடனே நோக்கி
அரும்புதல் வர்களும் நீரும்
அமுதுசெய் வீர்இங் கென்ன
விரும்பிய உள்ளத் தோடு
மேலவர் ஏவல் செய்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 295   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருந்துதே வன்குடி மன்னும்
சிவபெரு மான்கோயில் எய்திப்
பொருந்திய காதலிற் புக்குப்
போற்றி வணங்கிப் புரிவார்
மருந்தொடு மந்திர மாகி
மற்றும் இவர்வேட மாம்என்
றருந்தமிழ் மாலை புனைந்தார்
அளவில்ஞா னத்தமு துண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 706   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருந்தி சைப்பதி கத்தொடை
திருவால வாயில்
மருந்தி னைச்சண்பை மன்னவர்
புனைந்திட அருளால்
விரிந்த வெந்தழல் வெம்மைபோய்த்
தென்னனை மேவிப்
பெருந்த ழற்பொதி வெதுப்பெனப்
பெயர்பெற்ற தன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 1021   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருந்தியஇன் னிசைவகுப்பத் திருக்கண் ணப்பர்
திருத்தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்
பொருந்துபெருந் தவர்கூட்டம் போற்ற வந்து
பொன்முகலிக் கரையணைந்து தொழுது போகி
அருந்தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல
ஆளுடைய பிள்ளையார் அயன்மால்தேடும்
மருந்துவெளி யேயிருந்த திருக்கா ளத்தி
மலையடிவா ரஞ்சார வந்து தாழ்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1142   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருந்தியசீர்த் தாதையார்
சிவபாத இருதயரும்
பொருந்துதிரு வளர்புகலிப்
பூசுரரும் மாதவரும்
பெருந்திருமால் அயன்போற்றும்
பெரும்பற்றப் புலியூரில்
இருந்தமிழா கரர்அணைந்தார்
எனக்கேட்டு வந்தணைந்தார்.
12.440   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
திருந்து மனையார் மனையெல்லாம்
திகழ விளக்கிப் போனகமும்
பொருந்து சுவையில் கறியமுதும்
புனிதத் தண்ணீ ருடன்மற்றும்
அருந்தும் இயல்பில் உள்ளனவும்
அமைத்துக் கரக நீரளிக்க
விரும்பு கணவர் பெருந்தவர்தாள்
எல்லாம் விளக்கும் பொழுதின்கண்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4