சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தளி
தளியறி     தளிர்க்கும்     தளிர்     தளி     தளிரொளி    
2.092   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தளிர் இளங் கொடி வளர, தண்கயம் இரிய வண்டு ஏறிக்
கிளர் இளம்(ம்) உழை நுழைய, கிழிதரு பொழில் புகலூரில்,
உளர் இளஞ் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன்
மேல்
வளர் இளம்பிறை உடையார் வர்த்தமானீச்சுரத்தாரே.

2.111   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தளிர் இள வளர் என உமை பாட, தாளம்(ம்) இட, ஓர்
கழல் வீசி,
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து, ஆடும் வேடக்
கிறிமையார்;
விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு
அணிந்து, ஓர் சென்னியின் மேல்
வளர் இளமதியமொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

3.087   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள்
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின்,
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர் தம் நாமமே,
மிளிர் இள வளர் எரி இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!

5.064   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தளிர் கொள் மேனியள் தான் மிக அஞ்ச, ஓர்
பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன்
குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான்;
நளிர் கொள் நீர், சடைமேலும் நயந்ததே.

7.026   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தளிர் போல் மெல் அடியாள் தனை ஆகத்து அமர்ந்து அருளி,
எளிவாய் வந்து என் உள்ளம் புகுத வல்ல எம்பெருமான்!
களி ஆர் வண்டு அறையும் திருக்காளத்தியுள் இருந்த
ஒளியே! உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே .

7.078   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தளி சாலைகள் தவம் ஆவது, தம்மைப் பெறில் அன்றே?
குளியீர், உளம்! குருக்கேத்திரம் கோதாவிரி, குமரி,
தெளியீர் உளம்! சீ பர்ப்பதம்; தெற்கு(வ்) வடக்கு ஆக
கிளி வாழை ஒண்கனி கீறி உண் கேதாரம் எனீரே!

9.010   9 st/nd Thirumurai   Song # 1   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்(பு) அலம்பச்
    சடைவிரித்(து) அலையெறி கங்கைத்
தெளிரொளி மணிநீர்த் திவலைமுத்(து) அரும்பித்
    திருமுகம் மலர்ந்துசொட்(டு) அட்டக்
கிளரொளி மணிவண்(டு) அறைபொழிற் பழனம்
    கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வளரொளி மணியம் பலத்துள்நின்றாடும்
    மைந்தன்என் மனங்கலந் தானே.
10.218   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே. 

10.924   10 st/nd Thirumurai   Song # 59   திருமூலர்   திருமந்திரம்  
தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக்
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்தொன்றாம் ஆய்ந்துகொள் வார்க்கே.

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000