சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் செல்வம்
செல்வம்     செல்வம்மலி     செல்வம்,    
1.099   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி,
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குற்றாலம்
வில்லின் ஒல்க மும்மதில் எய்து, வினை போக
நல்கும் நம்பான் நன்நகர்போலும்; நமரங்காள்!

1.135   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச்
செல்வர்மேல், சிதையாதன
செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ்,
செல்வம் ஆம், இவை செப்பவே.

5.073   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செல்வம் மல்கு திரு மங்கலக்குடி-
செல்வம் மல்கு சிவநியமத்தராய்,
செல்வம் மல்கு செழு மறையோர் தொழ,
செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே.

8.105.05   8 st/nd Thirumurai   Song # 48   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
செல்வம், நல்குரவு, இன்றி; விண்ணோர், புழு,
புல் வரம்பு இன்றி; யார்க்கும் அரும் பொருள்
எல்லை இல் கழல் கண்டும் பிரிந்தனன்:
கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே!

11.033   11 st/nd Thirumurai   Song # 74   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
செல்வம் திகழ்திரு வாரூர்
மதில்வட்டத் துட்பிறந்தார்
செல்வன் திருக்கணத் துள்ளவ
ரேயத னால்திகழச்
செல்வம் பெருகுதென் னாரூர்ப்
பிறந்தவர் சேவடியே
செல்வ நெறியுறு வார்க்கணித்
தாய செழுநெறியே.

11.037   11 st/nd Thirumurai   Song # 53   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
செல்வம் நிறைந்த ஊர் சீரில் திகழ்ந்தஊர்
மல்கு மலர்மடந்தை மன்னும் ஊர் சொல்லினிய

12.040   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
செல்வம் மேவிய நாளி லிச்செயல்
செய்வ தன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குர வான போதினும்
வல்லர் என்றறி விக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்லம
றைந்து நாடொறு மாறிவந்
தொல்லை யில்வறு மைப்ப தம்புக
உன்னி னார்தில்லை மன்னினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 156   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செல்வம் மல்கிய தில்லைமூ
தூரினில் தென்றிசைத் திருவாயில்
எல்லை நீங்கியுள் புகுந்திரு
மருங்குநின் றெடுக்கும்ஏத் தொலிசூழ
மல்லல் ஆவண மறுகிடைக்
கழிந்துபோய் மறையவர் நிறைவாழ்க்கைத்
தொல்லை மாளிகை நிறைத்திரு
வீதியைத் தொழுதணைந் தனர்தூயோர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 171   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செல்வம் பிரிவறியாத்
தில்லைவாழ் அந்தணரும்
எல்லையில்சீர்ச் சண்பை
இளவே றெழுந்தருளி
ஒல்லை இறைஞ்சாமுன்
தாமும் உடனிறைஞ்சி
மல்லல் அணிவீதி
மருங்கணைய வந்தார்கள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 675   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செல்வம் மல்கியதிரு வால
வாயினிற் பணிசெய்
தல்கு தொண்டர்கள் பிள்ளையார்
மருங்கணைந் திறைஞ்சி
மல்கு கார்அமண் இருள்கெட
ஈங்குவந் தருள
எல்லை யில்தவஞ் செய்தனம்
எனஎடுத் திசைத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 962   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செல்வம் மல்கிய தில்லைமூ
தூரினில் திருநடம் பணிந்தேத்திப்
பல்பெ ருந்தொண்ட ரெதிர்கொளப்
பரமர்தந் திருத்தினை நகர்பாடி
அல்கு தொண்டர்கள் தம்முடன்
திருமாணி குழியினை அணைந்தேத்தி
மல்கு வார்சடை யார்திருப்
பாதிரிப் புலியூரை வந்துற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1170   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செல்வம்மலி திருப்புகலிச்
செழுந்திருவீ திகளெல்லாம்
மல்குநிறை குடம்விளக்கு
மகரதோ ரணம் நிரைத்தே
எல்லையிலா வொளிமுத்து
மாலைகளெங் கணும் நாற்றி
அல்கு பெருந் திருவோங்க
அணிசிறக்க அலங்கரித்தார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000