சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சந்த
சந்து     சந்தம்     சந்த     சந்தி     சந்திப்     சந்திரன்     சந்திர     சந்தித்த     சந்தனப்பூம்     சந்தின்     சந்திரன்,     சந்தம்,     சந்துசேனனும்,     சந்திரசேகரனே,     சந்தியானை,     சந்திர(ன்)னொடு     சந்திரனை     சந்திரனும்     சந்திரனைத்     சந்தனவேரும்,     சந்தன     சந்தும்    
1.004   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கைத் தையலொடும், தளராத வாய்மைப்
புந்தியின் நால் மறையோர்கள் ஏத்தும், புகலி நிலாவிய புண்ணியனே!
எம் தமை ஆள் உடை ஈச! எம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய்
வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

1.087   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடை விம்மு
கந்தம் மிகு திங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்து, எம்மை நன்றும் மருள் செய்வார்
அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே.

1.115   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சந்த நல்மலர் அணி தாழ்சடையன்,
தந்த மதத்தவன் தாதையோ தான்,
அந்தம் இல் பாடலோன், அழகன், நல்ல
எம் தவன், இராமன தீச்சரமே.

2.004   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சந்து உயர்ந்து எழு கார் அகில் தண்புனல் கொண்டு, தம்
சிந்தைசெய்து அடியார் பரவும் திரு வான்மியூர்,
சுந்தரக்கழல்மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர்! சொலீர்
அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே?

2.009   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சந்த வார்குழலாள் உமை தன் ஒருகூறு உடை
எந்தையான், இமையாத முக்கண்ணினன், எம்பிரான்,
மைந்தன், வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினைச்
சிந்தியா எழுவார் வினைஆயின தேயுமே.

3.031   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சந்திரன், கதிரவன், தகு புகழ் அயனொடும்,
இந்திரன், வழிபட இருந்த எம் இறையவன்-
மந்திரமறை வளர் மயேந்திரப்பள்
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்மினே!

3.036   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சந்தம், ஆர், அகிலொடு, சாதி, தேக்க(ம்) மரம்,
உந்தும் மா முகலியின் கரையினில், உமையொடும்,
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி
எந்தையார் இணை அடி, என் மனத்து உள்ளவே.

3.039   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சந்துசேனனும், இந்துசேனனும், தருமசேனனும், கருமை சேர்
கந்துசேனனும், கனகசேனனும், முதல் அது ஆகிய பெயர் கொளா
மந்தி போல்-திரிந்து, ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

3.043   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சந்தம் ஆர் முலையாள் தன கூறனார்
வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார்
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு காழியுள்
எந்தையார், அடி என் மனத்து உள்ளவே.

3.060   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சந்திரசேகரனே, அருளாய்! என்று, தண் விசும்பில்
இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச,
அந்தர மூ எயிலும்(ம்) அனல் ஆய் விழ, ஓர் அம்பினால்,
மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே.

3.111   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனைச் சண்பை
ஞானசம்பந்தன் வாய் நவில்
பந்தம் ஆர் தமிழ்பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே.

4.064   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சந்து அணி கொங்கையாள் ஓர் பங்கினர்; சாமவேதர்
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர்;
அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும்
வெந்தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே.

4.077   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சந்திரன் சடையில் வைத்த சங்கரன், சாமவேதி,
அந்தரத்து அமரர் பெம்மான், ஆன் நல் வெள் ஊர்தியான் தன்
மந்திரம் நமச்சிவாய ஆக, நீறு அணியப் பெற்றால்,
வெந்து அறும், வினையும் நோயும் வெவ் அழல் விறகு இட்டன்றே!

5.044   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சந்தியானை, சமாதி செய்வார் தங்கள்
புந்தியானை, புத்தேளிர் தொழப்படும்
அந்தியானை, ஆமாத்தூர் அழகனை,
சிந்தியாதவர் தீவினையாளரே.

5.052   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சந்திர(ன்)னொடு சூரியர்தாம் உடன்
வந்து சீர் வழிபாடுகள் செய்தபின்,
ஐந்தலை அரவின் பணி கொண்டு, அருள்
மைந்தர்போல்-மணி நாகேச்சுரவரே.

6.002   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சந்தித்த கோவணத்தர், வெண் நூல் மார்பர்; சங்கரனைக் கண்டீரோ? கண்டோம்-இந் நாள்,
பந்தித்த வெள்விடையைப் பாய ஏறி, படுதலையில்   என்கொலோ ஏந்திக் கொண்டு,
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம், மணி ஆரூர் நின்று, அந்தி கொள்ளக்கொள்ள,
பொன் தீ மணிவிளக்குப் பூதம் பற்ற, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

6.004   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சந்திரனை மா கங்கைத் திரையால் மோதச் சடாமகுடத்து இருத்துமே; சாமவேத-
கந்தருவம் விரும்புமே; கபாலம் ஏந்து கையனே: மெய்யனே; கனகமேனிப்
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே; பசு ஏறுமே; பரமயோகி ஆமே;
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்கு(ம்)மே;- அவன் ஆகில் அதிகை வீரட்டன் ஆமே.

6.049   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்; தாழ் சடையான் காண்; சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண்;
அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண்; அவ் உருவில் அவ் உருவம் ஆயினான் காண்;
பந்தரத்து நால் மறைகள் பாடினான் காண்; பலபலவும் பாணி பயில்கின்றான் காண்;
மந்திரத்து மறை பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.

6.052   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சந்திரனைத் திருவடியால்-தளர்வித்தான் காண்; தக்கனையும முனிந்து எச்சன் தலை கொண்டான் காண்;
இந்திரனைத் தோள் முறிவித்து அருள் செய்தான் காண்; ஈசன் காண்; நேசன் காண், நினைவோர்க்கு எல்லாம்,
மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண்; மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம்
வெந்தழலின் விரி சுடர் ஆய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.

7.024   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சந்து ஆரும் குழையாய்! சடைமேல் பிறைதாங்கி! நல்ல
வெந்தார் வெண்பொடியாய்! விடை ஏறிய வித்தகனே!
மைந்து ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
எந்தாய்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .

7.027   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சந்து ஆர் வெண்குழையாய்! சரி கோவண ஆடையனே!
பந்து ஆரும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே!
கந்து ஆர் சோலைகள் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
எந்தாய்! எம்பெருமான்! அடியேனையும் ஏன்று கொள்ளே!.

7.069   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சந்தனவேரும், கார் அகில் குறடும், தண் மயில் பீலியும், கரியின்
தந்தமும், தரளக் குவைகளும், பவளக்-கொடிகளும், சுமந்து கொண்டு உந்தி
வந்து இழி பாலி வடகரை முல்லை-வாயிலாய்! மாசு இலா மணியே!
பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .

7.073   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சந்தம் பல அறுக்கில்லேன்; சார்ந்தவர் தம் அடிச் சாரேன்;
முந்திப் பொரு விடை ஏறி மூ உலகும் திரிவானே,
கந்தம் கமழ் கொன்றை மாலைக் கண்ணியன், விண்ணவர் ஏத்தும்
எந்தை, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!

7.085   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ்சடையன்
பந்து அணவும் விரலாள் பாவையொடும்(ம்) உடனே,
கொந்து அணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே!

8.108   8 st/nd Thirumurai   Song # 15   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சந்திரனைத் தேய்த்தருளி, தக்கன் தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள் நெரித்திட்டு, எச்சன் தலை அரிந்து,
அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்து,
சிந்தித் திசை திசையே தேவர்களை ஓட்டு உகந்த,
செம் தார்ப் பொழில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதும் காண்; அம்மானாய்!

9.009   9 st/nd Thirumurai   Song # 2   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
சந்தன களபம் துதைந்தநன் மேனித்
    தவளவெண் பொடிமுழு தாடும்
செந்தழல் உருவில் பொலிந்துநோக் குடைய
    திருநுதலவர்க்கிடம் போலும்
இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்(டு)
    எரிவதொத்(து) எழுநிலை மாடம்
அந்தணர் அழலோம்(பு) அலைபுனற் களந்தை
    அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
9.024   9 st/nd Thirumurai   Song # 4   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
சந்தும் அகிலும் தழைப்பீ
   லிகளும் சாதி பலவுங்கொண்டு
உந்தி இழியும் நிவவின்
   கரைமேல் உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப்
   பதியுட் சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவங் கொட்ட
   நட்டம் நாதன் ஆடுமே.
10.101   10 st/nd Thirumurai   Song # 23   திருமூலர்   திருமந்திரம்  
சந்தி எனத்தக்க தாமரை வாள்முகத்
தந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. 

10.104   10 st/nd Thirumurai   Song # 29   திருமூலர்   திருமந்திரம்  
சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே. 

10.204   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்
எந்தை யிவனல்லம் யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாதத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லானும் அருள்புரிந் தானே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 64   திருமூலர்   திருமந்திரம்  
சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்
துந்திச் சமாதி யுடையொளி யோகியே. 

10.724   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந் தேய்முறை;
அந்த இரண்டும் உபய நிலத்தினில்,
சிந்தை தெளிந்தார்; சிவமாயி னாரே.

10.902   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
சந்திர பூமிக்குள் தன்புரு வத்திடைக்
கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்
பந்தம் அறுத்த பளிங்கின் உருவினர்
பந்தம் அறுத்த பரம்குரு பற்று.

10.927   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
சந்திரன் பாம்பொடுஞ் சூடும் சடாதரன்
வந்தென்னை ஆண்ட மணிவிளக் கானவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவித் தியக்கறுத் தானே.

11.006   11 st/nd Thirumurai   Song # 83   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம்
பிணிக்குத் தனிமருந்தாம்
சிந்திக்கிற் சிந்தா மணியாகித்
தித்தித் தமுதமுமாம்
வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும்
வானோர் வணங்கநின்ற
அந்திக்கண் ஆடியி னானடி
யார்களுக் காவனவே.

11.010   11 st/nd Thirumurai   Song # 38   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானை
மந்தண் மடப்பிடியின் வாய்க்கொடுப்ப வந்ததன்
கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே தேங்காதே
விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு.

11.010   11 st/nd Thirumurai   Song # 39   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்து
கொந்தியினி துண்ணக் குறமகளிர் மந்தி
இளமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே வெற்பின்
வளமகளிர் பாகன் மலை.

11.026   11 st/nd Thirumurai   Song # 11   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை  
சந்து புனைய வெதும்பி மலரணை
தங்க வெருவி இலங்கு கலையொடு
சங்கு கழல நிறைந்த அயலவர்
தஞ்சொல் நலிய மெலிந்து கிளியொடு
பந்து கழல்கள் மறந்து தளிர்புரை
பண்டை நிறமும் இழந்து நிரையொடு
பண்பு தவிர அனங்கன் அவனொடு
நண்பு பெருக விளைந்த இனையன
நந்தி முழவு தழங்க மலைபெறு
நங்கை மகிழ அணிந்த அரவுகள்
நஞ்சு பிழிய முரன்று முயலகன்
நைந்து நரல அலைந்த பகிரதி
அந்தி மதியொ டணிந்து திலைநகர்
அம்பொன் அணியும் அரங்கின் நடம்நவில்
அங்கண் அரசை அடைந்து தொழுதிவள்
அன்று முதல் எதிர்இன்று வரையுமே.

12.280   12 st/nd Thirumurai   Song # 1194   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சந்த மென்மலர்த் தாதணி
நீறுமெய் தரித்துக்
கந்தம் மேவுவண்டு ஒழுங்கெனுங்
கண்டிகை பூண்டு
சிந்தை தூயஅன் பர்களுடன்
திருமணம் போத
மந்த சாரியின் மணங்கொணர்ந்
தெழுந்தது மருத்து.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4